சுற்றுலா அமைச்சகம்
ஆண்டிறுதி அறிக்கை – 2018 : மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம்
Posted On:
26 DEC 2018 4:06PM by PIB Chennai
இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய இயந்திரமாக இருப்பது சுற்றுலாத்துறை. அதேபோல், அந்நிய செலாவணி வருவாய் ஈட்டும் முக்கிய காரணியாகவும் சுற்றுலா திகழ்கிறது. மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் நடப்பாண்டு சாதனைகளில் சில:
- ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 5.6 சதவீதம் அதிகரித்துள்ளது.
- ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை இணையம் மூலம் விசா (இ-விஸா) பெரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 41.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
- ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான அந்நிய செலாவணி வருவாய் ரூ. 1,58,846 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டைவிட 11.9 சதவீதம் அதிகமாகும்.
- அதேபோல், மற்ற மாநிலங்களை பார்வையிடச் செல்லும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2016 ஆம் ஆண்டை விட 2017 ஆம் ஆண்டு 2.3 சதவீதம் அதிகரித்துள்ளது.
சுற்றுலா உட்கட்டமைப்பு மேம்பாடு: சுற்றுலா பயணிகளுக்கு இனிமையான அனுபவத்தை அளிக்கும் வகையில் சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
- சுதேச தரிசன திட்டத்தின் கீழ், வரலாற்று தலங்கள், ஆன்மிகம் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு சுற்றுலா வட்ட பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ரூ. 384.67 கோடி மதிப்பிலான 7 திட்டங்களுக்கு நடப்பாண்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை இத்திட்டத்தின் கீழ் 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ரூ. 5873.99 கோடி மதிப்பில் 73 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை சுதேச தரிசன திட்டத்தின் கீழ் 9 திட்டங்கள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன.
- புனித தளங்கள் புனரமைப்பு மற்றும் ஆன்மீக, பாரம்பரிய தளங்கள் விரிவாக்க இயக்கத் திட்டத்தின் (பிரஷாத்) கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட புனித தலங்களில் ஒருங்கிணைந்த மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நடப்பாண்டு இந்த இயக்கத்தின் கீழ் ரூ. 39.24 கோடி மதிப்பிலான ஒரு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ. 727.16 கோடி மதிப்பிலான 24 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- கொச்சி துறைமுகம் மற்றும் மர்மகோவா துறைமுகம் ஆகியவற்றின் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக நடப்பாண்டு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
‘பாரம்பரியத்தை தத்தெடுங்கள்’ திட்டம்:
- பல்வேறு இயற்கை/கலாச்சார பாரம்பரியம் கொண்ட சுற்றுலாத்தலங்களில் உலகத் தரம் வாய்ந்த சுற்றுலா வசதிகள் ஏற்படுத்திக்கொடுப்பதே இந்த பாரம்பரியத்தை தத்தெடுங்கள்’ திட்டத்தின் நோக்கமாகும். இதுவரை, இதற்காக 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அவை தில்லியில் உள்ள மூன்று தலங்களுக்காகவும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இரண்டு தலங்களுக்காகவும் உத்தரகாண்ட், , ஆந்திர பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தலங்களுக்காகவும் கையெழுத்திடப்பட்டுள்ளது.
புகழ்மிக்க சுற்றுலா தலங்கள்:
- மஹாபலிபுரம்,தாஜ் மஹால், ஃபதேபூர் சிக்ரி. அஜந்தா, எல்லோரா, ஹூமாயூன் கல்லறை, குதுப்மினார், செங்கோட்டை, கோல்வா கடற்கரை, அமர் கோட்டை, சோம்நாத், தோலவிரா, கஜுராஹோ, ஹம்பி, காசிரங்கா, குமரகம் மற்றும் மகாபோதி கோயில் ஆகிய 17 தலங்கள் புகழ்மிக்க சுற்றுலா தலங்களாக மேம்படுத்த தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்கான பெருந்திட்டம் இறுதி கட்ட தயாரப்பில் உள்ளது.
பாரதக திருவிழா (பாரத் பர்வ்):
- குடியரசுத் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பாரத திருவிழா தில்லி செங்கோட்டையில் ஐந்து நாட்கள் நடைபெற்றது. ‘ஒரே பாரதம் ஒன்றுபட்ட பாரதம்’, ‘உங்களது தேசத்தை பாருங்கள்’ மற்றும் ‘அனைவருக்கும் சுற்றுலா’ போன்ற மையப்பொருட்களை பிரபலப்படுத்துவதும் சுற்றுலாத்துறையில் மக்களின் பங்கினை விரிவுப்படுத்துவதும்தான் இந்த திருவிழாவின் முக்கிய நோக்கம்.
சுற்றுலா திருவிழா (பர்யதன் பர்வ்):
- மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளுடன் இனைந்து மத்திய சுற்றுலா அமைச்சகம், சுற்றுலா திருவிழாவினை 12 நாட்கள் நடத்தியது. இதில் 32 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் சுமார் 3200-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ‘உங்களது தேசத்தை பாருங்கள்’ என்ற எண்ணத்தை விதைத்து நமது நாட்டு மக்களை நமது நாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களை பார்வையிடுவதை ஊக்கப்படுத்துவதும், அனைவருக்கும் சுற்றுலா என்ற செய்தியை பரப்பும் நோக்கத்தோடு இத்திருவிழா நடைபெற்றது.
இந்திய சுற்றுலா வர்த்தக அரங்கு 2018:
- இந்திய சுற்றுலா வர்த்தக அரங்கு முதன் முதலாக 2018 செப்டம்பர் 16 முதல் 18 வரை புதிது தில்லியில் நடைபெற்றது. சுற்றுலாத்துறையின் பல்வேறு பங்குதாரர்கள் வெளிநாட்டு வர்த்தக வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடவும், வர்த்தகம் மேற்கொள்வதற்கும், இந்த இந்திய சுற்றுலா வர்த்தக அரங்கு 2018, சிறந்த களமாக அமைந்தது.
இன்கிரிடிபிள் இந்தியா வலைதளம்:
- மத்திய சுற்றுலா அமைச்சகம் இந்த ஆண்டு புதிய மேம்படுத்தப்பட்ட இன்கிரிடிபிள் இந்தியா வலைதளத்தை தொடங்கிவைத்தது.
இணைய கல்வி மேலாண்மை முறை:
- இணைய கல்வி மேலாண்மை முறை மூலம் திறன் ஆற்றல் பெற்ற இளைஞர்கள், சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்களாக பணிபுரிய முடியம். இந்த திட்டம் மூலம் இதுவரை 3800க்கும் மேற்பட்டோர் இன்கிரிடிபிள் இந்தியா சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் சான்றிதழ் பெற்றுள்ளனர்.
இன்கிரிடிபிள் இந்தியா கைபேசி செயலி:
- நவீன கால பயணிகளின் தேவைகள், சர்வதேச தரங்களின் போக்குகள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பின்பற்றி இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகளின், பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் இந்த செயலி துணையாக அமையும்.
சர்வதேச புத்தசமய மாநாடு 2018:
- “புத்தர் பாதை – வாழும் பாரம்பரியம்” என்ற மையக்கருவை கொண்டு இந்த மாநாடு நடைபெற்றது. நமது நாட்டில் உள்ள புத்த தலங்களை விவரிக்கும் வகையில், 60 வினாடி திரைப்படம் இந்த மாநாட்டு தொடக்க விழாவில் திரையிடப்பட்டது. www.landofbudhha.in இன்ற வலைதளம் தொடங்கிவைக்கப்பட்டது.
இ-விசா:
- நாட்டில் உள்ள 26 விமான நிலையங்களில் இ-விசா ஒப்புக்கொள்ளப்படுகிறது. மொத்தம் 166 நாடுகளை சேர்ந்த குடிமக்களுக்கு இ-வசதி அளிக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய மரபுடனான தங்கும் விடுதி:
- 1950-ஆம் ஆண்டிற்கு முன்பு கட்டப்பட்ட பாரம்பரிய கட்டிடங்கள்/இடங்களை கொண்டு அமைக்கப்பட்ட விடுதிகள் இத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுகிறது. இந்த விடுதிகள் கடந்த கால அனுபவத்தை சுற்றுலா பயணிகளுக்கு அளிக்கும்.
ஹோட்டல் மேலாண்மை மற்றும் சமையல் கலை தொழில்நுட்பத்திற்கான தேசிய கழகம்:
- இந்த கழகத்தின் கீழ் பதிவு செய்துள்ள நிறுவனங்களில் சுமார் 9615 மாணவர்கள் 2018-19 ஆம் ஆண்டில் பல்வேறு பிரிவுகளில் தேர்ச்சிபெற்றுள்ளனர்.
இந்திய பயணம் மற்றும் சுற்றுலா மேலாண்மை நிறுவனம்:
- இந்த ஆண்டு இந்நிறுவனத்தில் இருந்து சுமார் 330 மாணவர்கள் முதுகலை வர்த்தக மேலாண்மை பட்டம் பெற்றுள்ளனர்.
இந்திய சமையற்கலை நிறுவனம், நொய்டா:
- ஏப்ரல் 27, 2018 அன்று தொடங்கப்பட்டது. இதில் ‘இந்திய சமையற்கலை அருங்காட்சியகம்’ அமைக்கப்பட உள்ளது.
இந்திய சமையற்கலை நிறுவனம், திருப்பதி:
- 14 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 97.92 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த நிறுவனம் செப்டம்பர் 24, 2018 அன்று தொடங்கப்பட்டது.
தூய்மை இந்தியா இயக்கம்:
- மத்திய சுற்றுலா அமைச்சகம் நாடு முழுவதும் பல்வேறு தூய்மை பணிகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, 29 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள 180 சுற்றுலா தலங்கள் / இடங்களில் சுமார் 540 தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
*****
ம.மா/ஸ்ரீ.
(Release ID: 1558099)
Visitor Counter : 286