நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

ஆண்டு இறுதி அறிக்கை – 2018: நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம்

Posted On: 14 DEC 2018 2:20PM by PIB Chennai

உணவு மற்றும் பொது விநியோகத் துறை:

2018 ஆம் ஆண்டு உணவு மற்றும் பொது விநியோகத் துறை மேற்கொண்ட நடவடிக்கைகளில் முக்கியமானவை வருமாறு:

1. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013 அமலாக்கம்

  • நாட்டின் 80.72 கோடி பேர் பயனடையும் வகையில் அனைத்து 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன்படி மானாவரி உணவு தானியங்கள் கிலோ ஒரு ரூபாய்க்கும், கோதுமை 2 ரூபாய்க்கும், அரிசி 3 ரூபாய்க்கும் மக்களுக்கு வழங்கப்பட்டது.
  • உணவுத் தானியங்களின் விலைகள் 2018 ஜூன் வரை நீட்டிக்கப்பட்டது. பின்னர் அதுவே 2019 ஜூன் வரை மேலும் நீட்டிக்கப்பட்டது.
  • 2018-19 நிதியாண்டில் மாநிலங்களுக்கிடையே உணவு தானியங்கள் எடுத்துச் செல்வது மற்றும் அது தொடர்பான செலவுகளுக்காக மாநில அரசுகளுக்கு மத்திய உதவியாக ரூ.2575 வழங்கப்பட்டது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இத்தகைய ஏற்பாடு முதல் முறையாக செய்யப்பட்டுள்ளது.

2. பொது விநியோக நடைமுறைகள் கணினிமயம்

  • குடும்ப அட்டைகள்/ பயனாளி ஆவணங்கள் டிஜிட்டல்மயமானதை அடுத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 2017 வரை மொத்தம் 2.75 கோடி குடும்ப அட்டைகள் அகற்றப்பட்டுள்ளன.
  • பொது விநியோக முறையில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தி நவீனப்படுத்துவதற்காக ரூ.884 கோடி செலவில் கணினிமயமாக்கப்பட்டது.
  • போலி குடும்ப அட்டைகளை அகற்றுவதற்காக ஆதார் எண்களை குடும்ப அட்டையுடன் இணைக்கும் நடவடிக்கை.
  • மொத்தமுள்ள 5.34 லட்சம் ரேஷன் கடைகளில் 3.61 லட்சம் கடைகளில் கணினி விற்பனைக் கருவி அமைக்கப்பட்டுள்ளது.
  • மாநிலம் விட்டு மாநிலம் பெயர்ந்து செல்வோருக்கு குடும்ப அட்டைகளை கொண்டு செல்லும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • பொது விநியோக முறையில் ஒருங்கிணைந்த மேலாண்மை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • மானிய விலையிலான உணவுத் தானியங்களை பயனாளிகளுக்கு வழங்க அன்னவித்ரன் வலைதளம் அமலாக்கம். ஆதார் அட்டைகள் மூலம் அகில இந்திய அளவில் பயனாளிகள் விவரம் இதன் மூலம் அறிய முடிவதோடு மாவட்ட அளவில் வழங்கப்பட்ட, விநியோகிக்கப்பட்ட உணவு தானிய அளவுகளின் தரவு மையம்.

3. விவசாயிகளுக்கு ஆதரவு

  • 2018-19 ஆம் ஆண்டு ரபிக் பருவத்தில் 357.95 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டது. இதுவே கடந்த 5 ஆண்டுகளில் அதிகபட்சமாகும்.

4. உணவுத் தானிய மேலாண்மை மேம்பாடு

  • இந்த ஆண்டு இந்திய உணவுக் கழகம் சுமார் 4 கோடி டன் உணவுத் தானியத்தை நாடெங்கும் எடுத்துச் சென்றது. இதற்கென ரயில், சாலை, கடல், கடலோரநதி போக்குவரத்து அமைப்புகள் மேம்படுத்தப்பட்டன.

5. கிடங்கு மேம்பாடு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம்

  • சரக்கு கிடங்குகளை பதிவு செய்யும் நடைமுறை எளிமையாக்கப்பட்டது.

6. சர்க்கரை துறை

  • சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்குவதற்கென கடந்த சில மாதங்களில் அரசு கீழ்கண்ட நடவடிக்கைகளை எடுத்தது.
  1. சர்க்கரை ஆலைகள் வரவை பெருக்க ஆலைகளிலேயே விற்க்கப்படும் நுழைவாயில் சர்க்கரை விலையை கிலோ ரூ.29 ஆக நிர்ணயித்தது.
  2. சர்க்கரை ஆலைக்கு அரைக்கப்பட்ட கரும்பு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5.5 வீதம் உதவி வழங்குதல்.
  3. 2017-18-ல் 30 லட்சம் டன் சர்க்கரை இருப்பு ஏற்படுத்தியது.
  4. சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.6139 கோடி குறைந்த வட்டிக்கடன்
  5. 2018 புதிய உயிரி எரிபொருள் தேசியக் கொள்கை அறிவிக்கை செய்து இதன் கீழ் மெத்தனால் உற்பத்திக்கு சர்க்கரை சாற்றினை கொண்டு வந்தது.

இந்த நடவடிக்கைகளால் சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.23,232 கோடியிலிருந்து ரூ.5,465 கோடியாக குறைந்தது.

 

நுகர்வோர் விவகாரங்கள் துறை:

1.எடை மற்றும் அளவைகள் பிரிவு

  1. 2011 சட்ட அளவைகள் சிப்பம் கட்டிய பொருள் விதிகள் திருத்தம் கொண்டு வரப்பட்டு நுகர்வோர் நலன் பாதுகாக்கப்பட்டது.
  2. ஒரே வகையான சிப்பம் கட்டிய பொருளுக்கு வித்தியாசமான இரட்டை எம்.ஆர்.பி. தவிர்க்கும் விதிகள்.
  3. பொருள் பற்றிய அறிக்கையின் எழுத்து அளவை பெரிதாக்குதல்.
  4. அளவு சரிபார்ப்பதை அறிவியல் ரீதியில் அமைத்தல்.
  5. பார் கோடு/ கியுஆர் கோடு ஆகியவற்றை அனுமதித்தல்.
  6. மருத்துவக் கருவிகளை விலை அறிவிப்பு விதிகளின் கீழ் கொண்டு வருதல்.
  7. 31.07.18 வரை விலை அறிவிப்புகளை ஸ்டிக்கர்கள், முத்திரைப்பதிப்பு, ஆன்லைன் பிரிண்டிங், டேக் பயன்பாடு ஆகியவற்றுக்கு அனுமதி அளித்தல்.

2. ஜி.எஸ்.டி. குறைப்பு காரணமாக எம்.ஆர்.பி. விலை அறிவிப்பை 31.12.18 வரை அனுமதித்தல்

  1. ஜி.எஸ்.டி. குறைப்பு காரணமாக மாற்றியமைக்கப்பட்ட சில்லரை விலையை முத்திரைப்பதிப்பு, ஸ்டிக்கர் ஒட்டுதல், ஆன்லைன் பிரிண்டிங் மூலம் அனுமதிக்கப்பட்டது.
  2. பயன்படுத்தாமல் மிஞ்சிப் போன சிப்பம் கட்டும் பொருட்கள் 2017 செப்டம்பர் 30-ந் தேதி வரை அனுமதிக்கப்பட்டன.

3. மாநில அரசுகளுக்கு ஆதரவு

  1. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் சோதனைக் கூட கட்டிடங்கள் அமைக்க மானியம் வழங்கப்பட்டது.
  2. மாநிலங்களுக்கு அளவீடு குறித்தல், சரிபார்த்தல் மற்றும் எடைகளுக்கு முத்திரை இடுதல் போன்றவற்றுக்கான சட்டத்தர கருவிகள் வழங்குதல்.

4. 6 இடங்களில் மண்டல சரிபார்ப்பு தளங்கள் சோதனைக் கூடங்கள் அமைக்கும் திட்டம்

  1. அகமதாபாத், பெங்களூர், புவனேஸ்வர், பரிதாபாத், கவுகாத்தி ஆகிய இடங்களில் மண்டல சரிபார்ப்பு தர சோதனைக் கூடங்கள் அமைத்தல்.
  2. இந்த சோதனைக் கூடங்களையும் ராஞ்சி இந்திய சட்ட அளவை நிறுவனத்தின் சோதனைக் கூடத்தையும் தேசிய தர சோதனைக் கூட வாரியத்தின் மூலம் தரப்படுத்துதல்.

5. ஆலோசனைகள்

  1. கூடுதல் கட்டணம் வசூலித்தல், இரட்டை எம்.ஆர்.பி. ஆகியவற்றுக்கு எதிராக மாநில அரசுகளின் சட்ட அளவைகள் கட்டுப்பாட்டாளர் நடவடிக்கை எடுக்க உத்தரவு.
  2. அனைத்து மருத்துவக் கருவிகள் மீதும் அதிகபட்ச சில்லரை விலையை அறிவிப்பு செய்ய உத்தரவு.

6. பெட்ரோல், டீசல் விற்பனையில் மோசடி நடைமுறைகளை நிறுத்த நடவடிக்கை

  1. பெட்ரோல், டீசல் விற்பனை எந்திரங்களில் மின்னணு சீல் அமைத்தல்.
  2. பெட்ரோல், டீசல் வழங்குவதற்கு தற்போதுள்ள பம்ப்புகளை  குறிப்பிட்ட வசதிகளுடன் மேம்படுத்துமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவு.
  3. பெட்ரோல் நிலையங்களில் பசுமைச் சூழலை உறுதி செய்து பெட்ரோல் ஆவியாதலை குறைக்க பெட்ரோல் ஆவி கட்டுப்பாட்டு அமைப்பு அமைக்க அனுமதி.

7. கால நிர்ணய அமைப்புகள்

  1. இந்திய  நேரத்தை – அகமதாபாத், பெங்களூரு உள்ளிட்ட 5 இடங்களில் மண்டல சரிபார்ப்பு தர சோதனைக் கூடங்கள் அமைத்தல்.

8. விலை நிலைப்படுத்தும் நிதியம்

  1. சந்தைகளில் விலைகளை நிலைப்படுத்துவதற்கு 20.5 லட்சம் டன் பயறு வகைகளை இருப்பு வைத்தல்.
  2. மாநிலங்களின் விநியோகத் திட்டங்களுக்கு இந்த இருப்பில் இருந்து பயறுகள் வழங்குதல்.
  3. ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளுக்கு தேவையான பயறு வகைகளை இந்த இருப்பிலிருந்து வழங்குதல்.
  4. 2018-19 நிதியாண்டிலிருந்து மாநில அளவில் விலை கண்காணிப்பு பிரிவுகளை வலுப்படுத்த நிதி ஆதரவுக்கான புதிய அம்சங்கள் அமல்.

9. நுகர்வோர் பாதுகாப்புப் பிரிவு

  1. 2018 நுகர்வோர் பாதுகாப்பு மசோதா 2018 ஜனவரி 5-ந் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

1) ஏற்கனவே உள்ள சட்டத்தை வலுப்படுத்துதல்

2) நுகர்வோர் குறைகளை விரைந்து போக்குதல்

3) சந்தை மாற்றங்களுக்கு ஏற்ப சட்டத்தை  மேம்படுத்துதல் போன்ற அம்சங்கள் சட்டத்தில் இடம் பெற்றுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

*******


ARV/CJ/REV



(Release ID: 1558069) Visitor Counter : 474


Read this release in: Kannada , English , Hindi