அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில், 2019 ஜனவரி 3 அன்று 106-வது இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறார்

प्रविष्टि तिथि: 30 DEC 2018 3:25PM by PIB Chennai

உலகின் மிகப்பெரிய அறிவியல் மாநாடாகக் கருதப்படும் “இந்திய அறிவியல் மாநாடு – 2019”, பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில், 2019 ஜனவரி 3 முதல், 7 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ‘எதிர்கால இந்தியா: அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்’ என்பதை மையக்கருத்தாகக் கொண்டு நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜனவரி 3-ம் தேதி தொடங்கிவைக்கிறார்.  நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள், மத்திய அமைச்சர்கள், அறிவியல் கொள்கை உருவாக்குவோர், நிர்வாகிகள், பிரபல விஞ்ஞானிகள், ஆண்-பெண் இளம் ஆராய்ச்சியாளர்கள் & இந்தியாவிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வரும் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட சுமார் 30,000 பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

     ஐந்துநாள் நடைபெறும் இந்த மாநாட்டில், 100-க்கும் மேற்பட்ட கருத்தரங்குகள் மற்றும் அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.  பாதுகாப்பு ஆரோய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், இஸ்ரோ, மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை, எய்ம்ஸ், யு.ஜி.சி., ஏ.ஐ.சி.டி.ஈ போன்ற அமைப்புகளைச் சேர்ந்த நிபுணர்களும், அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளின் பிரசித்திப் பெற்ற பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த அறிஞர்களும் இதில் கலந்துகொள்கின்றனர். மத்திய அமைச்சர்கள் டாக்டர் ஹர்ஷ்வர்தன், ஸ்மிருதி இரானி ஆகியோரும் இதில் பங்கேற்கவுள்ளனர்.  

மாநாட்டின் 2-ம் நாளான ஜனவரி 4 அன்று குழந்தைகள் அறிவியல் மாநாடும், 3-ம் நாளான 5-ம் தேதி அறிவியல் தொடர்பாளர்கள் சந்திப்பு மற்றும் பெண்கள் அறிவியல் மாநாடும் நடைபெறவுள்ளன.  இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக இந்தியாவின் கௌரவம் என்ற தலைப்பிலான மாபெரும் கண்காட்சியும் நடைபெறவுள்ளது.

                                                                                                ************

எம்எம் / உமா


(रिलीज़ आईडी: 1557811) आगंतुक पटल : 394
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi