நித்தி ஆயோக்
முன்னேற விரும்பும் மாவட்டங்களின் தரவரிசையில் இரண்டாவது பட்டியலை நித்தி ஆயோக் வெளியிட்டுள்ளது
Posted On:
27 DEC 2018 1:38PM by PIB Chennai
சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, வேளாண்மை, நீர்வளம், அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரம், திறன் மேம்பாடு, அடிப்படை கட்டமைப்பு ஆகிய ஆறு வளர்ச்சிப் பணிகளில் ஜூன் 1, 2018-க்கும், அக்டோபர் 31, 2018-க்கும் இடைப்பட்ட காலத்தில் வளர்ச்சியை அதிகப்படுத்தியுள்ள முன்னேற விரும்பும் மாவட்டங்களின் இரண்டாவது தரவரிசைப் பட்டியலை நித்தி ஆயோக் இன்று வெளியிட்டது.
டாடா அறக்கட்டளை, பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஆகியவை நித்தி ஆயோகின் அறிவுசார் பங்குதாரர்களாக இணைந்து, வீடுதோறும் சென்று ஆய்வு செய்து, தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முன்னேற விரும்பும் அனைத்து மாவட்டங்களிலும் ஜூன் மாதம் ஒரு லட்சம் வீடுகளில் மேற்கொள்ளப்பட்டது.
இந்த இரண்டாவது தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுப் பேசிய நித்தி ஆயோகின் தலைமை நிர்வாகி திரு. அமிதாப் காந்த், முன்னேற விரும்பும் மாவட்டங்களின் தரம்சார்ந்த வளர்ச்சியை சரியாகவும், வெளிப்படைத் தன்மையோடும் நடத்துவதை உறுதிசெய்ய மூன்றாம் தரப்பினர் பயன்படுத்தப் பட்டிருப்பதாகக் கூறினார். இத்தகைய நடவடிக்கை போட்டி உணர்வையும், ஒத்துழைப்புடன் கூடிய கூட்டமைப்பையும் வலுப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒடிஷா, உத்தரப்பிரதேசம், பீகார், தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களில் இருந்து, மிகவும் முன்னேறிய மாவட்டங்கள் தரவரிசை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் தமிழ்நாட்டின் விருதுநகர் முதலாவது இடத்தைப் பிடித்துள்ளது.
*****
வி,கி/எஸ்எம்பி/உமா
(Release ID: 1557507)
Visitor Counter : 328