பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்

2018-ல் கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்தின் சாதனைகள்

Posted On: 20 DEC 2018 10:33AM by PIB Chennai

2013 ஆம் ஆண்டின் கம்பெனிகள் சட்டத்தின்கீழ், திறமையான நடைமுறைகள் விரிவுபடுத்துவதற்காக கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சகம் கடந்த ஓராண்டில் (ஜனவரி-நவம்பர், 2018) பல்வேறு முக்கியமான முன் முயற்சிகளையும், முடிவுகளையும் மேற்கொண்டுள்ளது.  வணிகம் செய்வதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டு கார்ப்பரேட் கட்டமைப்பில் மிகப்பெரிய வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வந்துள்ளது. இந்த ஆண்டின் முக்கிய நடவடிக்கைகளாக சிலவற்றைக் குறிப்பிடலாம்

     கம்பெனிகள் திருத்தச் சட்டம், 2017 கம்பெனிகள் திருத்த அவசரச் சட்டம் 2018, தேசிய நிதிநிலை அறிவிக்கை ஆணைய உருவாக்கம், திவால் மற்றும் நொடித்துப் போதல் சட்டத்தில் திருத்தங்கள், அனைத்து நிறுவனங்களின் இயக்குனர்களுக்காக மின்னணு முறையில் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுதல், விண்ணப்பத்திற்கான விதிகளில் பாகுபாட்டை நீக்கி, ஒரேமாதிரியான தன்மை போன்ற நடவடிக்கைகள், அவற்றில் சிலவாகும்.

     வணிகம் செய்வதை எளிதாக்கும் நாடுகளுக்கான தரவரிசைப் பட்டியலை உலக வங்கி அக்டோபர் 31, 2018-ல் வெளியிட்டது.   இதில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. 2017-ல் 100-வது இடத்தில் இருந்ததோடு ஒப்பிடுகையில், தற்போது 23 இடங்கள் முன்னேறி 77 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.  இதற்கு, வணிகத்தைத் தொடங்குதல், நொடித்துப் போதலுக்குத் தீர்வு, சிறுபான்மையினர் நலன்களைப் பாதுகாத்தல் போன்ற கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. 

 

தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம்

     திவால் மற்றும் நொடித்துப் போதல் தொடர்பான பிரச்சினைக்கு விரைந்து தீர்வுகாண இதனைக் கையாள்வதற்கு தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தின் கீழ், 8 சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சகம் தீர்மானித்துள்ளது.  இந்த நீதிமன்றங்கள் மும்பை, தில்லி, சென்னை, கொல்கத்தா, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்படும்.  இந்தத் தீர்ப்பாயம் இந்தியாவின் பல பகுதிகளில் 11 அமர்வுகளைக் கொண்டுள்ள போதும், அதற்கு அதிகரித்து வரும் சுமையைக் குறைப்பது இதன் நோக்கமாகும்.  திவால் மற்றும் நொடித்துப் போதல் வழக்குகளை உரிய நேரத்தில் முடிப்பதற்கு வசதியாக, தில்லி, மும்பை ஆகிய இடங்களில் உள்ள தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயங்களின் கீழ், சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படவுள்ளன.  வாராக்கடன்களுக்கான பிரச்சினைக்கு விரைந்து தீர்வுகாண்பதும் இதன் நோக்கமாகும்.

 

முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதியம்

     வலுவான வணிக முத்திரை இருப்பதற்கும், அங்கீகாரம் வழங்குவதற்கும், முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதிய ஆணையம், புதிய இலச்சினை ஒன்றை 2018-ல் வெளியிட்டது.  மேலும், இந்த ஆணையம் ஈ-நிர்வாக சேவைகள் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.  இதன்மூலம் ஈ-நிர்வாக சேவைகள் நிறுவனம் முதலீட்டாளர் விழிப்புணர்வு திட்டங்களுக்கு கிராம அளவிலான தொழில் முனைவோரை அடையாளம் காணும் முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதியத்தில் மேலும் சீர்திருத்தங்களைக் கொண்டு வர, கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.

     தற்போதுள்ள கொள்கைகளை மதிப்பீடு செய்ய அமைச்சகங்களுக்கு இடையேயான குழுவினை தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலாளர் திரு. ரமேஷ் அபிஷேக் தலைமையில் கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் ஜூன் 1, 2018-ல் அமைத்துள்ளது.  இதில் 7 அமைச்சகங்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம்பெற்றிருப்பார்கள்.    அண்மைக்காலத்தில் உருவாக்கப்பட்ட குறிப்பிட்ட சில சட்டங்கள், விதிகள், கொள்கைகள் போன்றவற்றை ஆய்வு செய்வது இந்தக் குழுவின் முதன்மை நோக்கமாகும்.  போட்டியை எதிர்கொள்ள சட்டங்களில் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்ற கட்டுப்பாடுகள், அம்சங்கள் குறித்தும் இந்தக் குழு ஆய்வு செய்யும்.   

****

ி.கீ/எஸ்எம்பி/உமா


(Release ID: 1557150) Visitor Counter : 407


Read this release in: English , Urdu , Marathi , Bengali