தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

2018 ஆம் ஆண்டின் முக்கிய சாதனைகள்

Posted On: 21 DEC 2018 12:51PM by PIB Chennai

இந்தியாவை அறிவுசார் பொருளாதார நாடாக மாற்றியமைக்கவும், டிஜிட்டல் சேவைகளை அணுகுதல், உள்ளார்ந்த டிஜிட்டல்மயம், டிஜிட்டல் அதிகாரமளித்தல் போன்றவற்றை வழங்குவதுடன், டிஜிட்டல்மயத்தில் நிலவும் இடைவெளியை சரிசெய்து, டிஜிட்டல் அதிகாரமிக்க சமுதாயத்தை உறுதிசெய்யும் நோக்குடன், டிஜிட்டல் இந்தியா திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. 

     2018 நவம்பர் வரை நாட்டிலுள்ள 122.9 கோடி மக்களுக்கு ஆதார் மூலம் டிஜிட்டல் அடையாளம் வழங்கப்பட்டுள்ளது.  மக்கள் தொகையில் மொத்தம் 99% வயது முதிர்ந்தவர்களுக்கு ஆதார் வழங்கப்பட்டுள்ளது.

 

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை   

  • டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வளர்ச்சி அடைவது நாட்டின் பொருளாதார சூழலை மாற்றியமைக்கும்.
  • பீம்-யூபிஐ மற்றும் பீம் ஆதார் ஆகிய இந்தியாவின் தனித்துவ பணப்பரிவர்த்தனை முறைகள் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.
  • கடந்த நான்கு ஆண்டுகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அளவு பன்மடங்கு அதிகரித்துள்ளது.  2014-15-ல் 316 கோடியாக இருந்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை, 2017-18-ல் 2,071 கோடியாக அதிகரித்துள்ளது.  தற்போது பீம்செயலி பணத்தை அனுப்புவதற்கும், பெறுவதற்கும், பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களை செலுத்துவதற்கும் முக்கியமான டிஜிட்டல் பரிவர்த்தனை முறையாக மாறியுள்ளது. 2018 நவம்பரில் மட்டும் 173 லட்சத்திற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகள் மூலம் ரூ.7,987 கோடி அளவிற்கு பீம்செயலி மூலம் பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.

 

செல்போன் மற்றும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பது டிஜிட்டல் சேவை முறையை பெருமளவு மாற்றியமைத்துள்ளது.  ஜன்தன் வங்கிக் கணக்குகளை செல்போன் மற்றும் ஆதார் எண்ணுடன் இணைத்ததன் மூலம், ஏழை மக்கள் தங்களுக்கான நலத்திட்ட உதவிகளை தங்களது வங்கிக் கணக்கில் நேரடியாகப் பெற முடிகிறது. அரசின் 433 திட்டங்களின் பயன், வாடிக்கையாளர்களுக்கு ஆதார் அடிப்படையில் நேரடியாக வழங்கப்படுகிறது.  கடந்த 4 ஆண்டுகளில் இத்திட்டத்தின் மூலம் ரூ.5.49 லட்சம் கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டதன் மூலம் அரசுக்கு ரூ.90,000 கோடிக்கு மேல் சேமிப்பு கிடைத்துள்ளது.

மாணவர்களுக்கான தேசிய கல்வி உதவித்தொகை வலைப்பக்கம் மூலம், 1.8   கோடி மாணவர்களுக்கு ரூ.5276 கோடி வழங்கப்பட்டுள்ளது.  இதேபோன்று, ஓய்வூதியர்களுக்கான ஜீவன் பிரமான் திட்டத்தின் மூலம், அவர்கள் டிஜிட்டல் முறையிலேயே தங்களது உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வழிவகை ஏற்பட்டுள்ளது.  இதுதவிர, ஈ-நாம் எனப்படும் மின்னணு முறையிலான தேசிய வேளாண் சந்தை முறை, வேளாண் விளை பொருட்களை விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்ய உதவுகிறது.  

நாட்டிலுள்ள அனைத்து உயர்கல்வி  மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் தேசிய அறிவுசார் கட்டமைப்பு, டிஜிட்டல் எழுத்தறிவு மற்றும் சிறு நகரங்களில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான மெய்ட்டி போன்ற பல்வேறு திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் செல்போன் பயன்பாடு அதிகரித்து வரும் வேளையில், அவற்றின் உற்பத்தியும் 29% அதிகரித்து, 22.5 கோடி செல்போன்கள் இந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.   இதன் மூலம் சுமார் 6.7 லட்சம் பேர் (நேரடியாகவும், மறைமுகமாகவும்) வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

 

 

*****

 

 

ி.கீ/எம்எம்/உமா



(Release ID: 1557104) Visitor Counter : 351


Read this release in: English , Hindi , Bengali