பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

நடப்பாண்டு சாதனைகள் 2018: பழங்குடியினர் நல அமைச்சகம்

Posted On: 20 DEC 2018 11:33AM by PIB Chennai

பழங்குடியினரின் வளர்ச்சிக்கான திட்டங்களின் திட்டமிடல் ஒருங்கிணைப்பு மற்றும் ஒட்டு மொத்த கொள்கைக்கான மைய அமைச்சகமாக மத்திய பழங்குடியினர் நல அமைச்சகம் உள்ளது. 2018 ஆம் ஆண்டில் பழங்குடியினர் நல அமைச்சகம் பழங்குடியினரின் கல்வி, பழங்குடியினரின் பொருளாதார, அதிகாரம் வழங்கலுக்கான புதிய முன்முயற்சிகள் மற்றும் பழங்குடியினரின் கலாச்சாரத்தை முன்னிறுத்தும் வகையில், பழங்குடியினத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களின் பணியை காட்சிப்படுத்தும் அருங்காட்சியகங்கள் கட்டுவது ஆகிய பணிகளுக்கு முன்னுரிமை தந்துள்ளது.

      முக்கியமான இடைவெளிகளை நிரப்பும் நோக்கத்தோடு கல்வி, உள்கட்டமைப்பு, வாழ்வாதாரம் போன்ற பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட திட்டங்களின் மூலமாக பழங்குடியினரின் சமூக பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நடவடிக்கைகளை பழங்குடியினர் நல அமைச்சகம் தொடர்ந்து மேற்கொண்டுள்ளது.

      2017-18 ஆம் ஆண்டில் ரூ. 5329.32 கோடியாக இருந்த பழங்குடியினர் நல அமைச்சகத்திற்கான நிதி ஒதுக்கீடு 2018-19 ஆம் ஆண்டில் ரூ. 5,957.18 கோடியாக அதிகரித்தது. இந்த அமைச்சகம் பழங்குடியினருக்கான பல்வேறு வளர்ச்சி முன்முயற்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 74.69 சதவீதத்தை ஏற்கனவே பயன்படுத்தி உள்ளது.

      திட்டங்களின் செயல்பாட்டை ஒருங்கிணைக்கவும், கண்காணிக்கவும் அமைச்சகங்களிலும், துறைகளிலும் மைய அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

      2018-19 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் செலவீன ஆவணத்தின் 10பி பிரிவில் எதிரொலித்துள்ளபடி பல்வேறு துறைகளில் குறிப்பிட்ட பழங்குடியினரின் வளர்ச்சிக்கென 299 பல்வேறு திட்டங்களுக்காக 37 மத்திய அமைச்சரவை மற்றும் துறைகளில் பழங்குடியினருக்கென நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

      பழங்குடியினத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்கிட ஏகலவ்யா மாதிரி உறைவிடப் பள்ளி ஒரு சிறந்த அணுகுமுறையாகும்.

      2022 ஆம் ஆண்டுக்குள் 50 சதவீதத்திற்கும் மேலான பழங்குடியினரின் மக்கள் தொகையும், குறைந்தபட்சம் 20 ஆயிரம் பழங்குடியினர் வாழும் ஒவ்வொரு கோட்டத்திலும் ஒரு ஏகலவ்யா மாதிரி உறைவிடப் பள்ளி அமைக்கப்படும் என்று 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ந் தேதி அன்று நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

      ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி அன்னிய அரசுக்கு அடிபணிய மறுத்து தியாகம் செய்வதில் முன் நின்ற பழங்குடியினர் வாழ்ந்த மாநிலங்களில் நிரந்தரமான அருங்காட்சியகங்கள் அமைப்பதற்கான திட்டத்தை அரசு வகுத்துள்ளது.

      பழங்குடியினர் நல அமைச்சகம் இவர்களுக்காக மாபெரும் மாற்றத்தை உண்டாக்கக் கூடிய முன்முயற்சியை தொடங்கி உள்ளது. 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ந் தேதி அன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி பிஜப்பூரில் முதல் வன்தான் விகாஸ்கேந்திராவை தொடங்கி வைத்தார். திறன் மேம்பாட்டை வழங்குவது, திறமையை வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சி மற்றும் அடிப்படை வழிமுறை மற்றும் மதிப்புக் கூட்டிய வசதியை அமைப்பது ஆகியவையே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

      பழங்குடியினரின் கைவினைப் பொருட்கள், கலாச்சாரம், உணவு, வர்த்தகம் ஆகியவற்றை கொண்டாடவும், முன்னெடுத்துச் செல்லவும் பழங்குடியினர் நல அமைச்சகம் ஆதிமஹோத்சவ் என்ற பெயரில் நவம்பர் மாதம் 2018 ஆம் ஆண்டு
16-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை தில்லியில் தேசிய பழங்குடியினர் விழாவிற்கு ஏற்பாடு செய்தது.

      இந்த மஹோத்சவத்தில் 20 மாநிலங்களை சேர்ந்த 1000 கைவினைக் கலைஞர்கள், பழங்குடியினத்தைச் சேர்ந்த 80 சமையல் கலை நிபுணர்கள், 250 கலைஞர்களை கொண்ட 14 நடனக் குழுக்கள் ஆகியவை பங்கேற்றன.

      நாடெங்கிலும் படிங்குடியினரின் கலாச்சாரத்திற்கு முன்னுரிமை தரும் நோக்கத்தோடு ஒரு தளத்தை அமைக்க தேசிய பழங்குடியினர் திருவிழாக்கள் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை 17 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

*****


(Release ID: 1556957) Visitor Counter : 320


Read this release in: Kannada , English , Bengali