பிரதமர் அலுவலகம்
மிர்சாபூரில் பன்சாகர் கால்வாய் திட்டம் மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
Posted On:
15 JUL 2018 4:00PM by PIB Chennai
தற்போதுமிர்சாபூர் வந்திருப்பதை மிகப்பெரிய கவுரமாக கருதுகிறேன். அன்னை விந்தியாவாசினியின் மடியில் உள்ள உங்கள் அனைவரையும்
சந்திப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்காக நீங்கள் நீண்ட
காலமாக காத்திருந்திருக்கிறீர்கள். அதற்காக உங்கள் அனைவரையும்
வணங்கி, மரியாதை செலுத்துகிறேன். இங்கு கூட்டத்தை பார்த்த பிறகு,
அன்னை விந்தியாவாசினி என் மீது ஆசீர்வாதங்களை பொழிந்துள்ளார்
என்றும், உங்கள் கிருபையால் அவளுடைய ஆசீர்வாதம் எப்போதும்
என்னுடன் இருக்கும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளேன்.
உ.பி.யின் கவர்னர் ராம் நாயக், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்
அவர்கள், துணை முதலமைச்சர் திரு.கேசவ் பிரசாத் மவுரி அவர்கள்,
மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகஉறுப்பினரான சகோதரி அனுபிரியா அவர்கள், மாநில அமைச்சர் திரு. சித்தார்த் நாத் அவர்கள், திரு.
தரம்பால் சிங், திரு. அசுதோஷ் டாண்டன், திரு. ராஜேஷ் அகர்வால்
மற்றும் பாரதீய ஜனதாகட்சியின் தலைவர்களும், எனது பழைய நண்பருமான எம்.பி. டாக்டர் மகேந்திரநாத் பாண்டே, திரு. வீரேந்திர சிங், எம்.பி. சோட்டே பாய் லால் மற்றும் இங்கு பெரும் திரளாக கூடியிருக்கும்எனது அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே.
இந்த மேடையில் இருந்தபடி நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன்,
அனைத்து பக்கங்களில் இருந்தும் மக்கள் சாரை சாரையாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் மக்கள் கூடிக்கொண்டிருக்கிறார்கள்.
சகோதர, சகோதரிகளே, இந்த ஒட்டுமொத்த பகுதியும் தெய்வீகமானது.
இப்பிராந்தியம் விந்தியன் மலைகளுக்கும், பாகிரதி நதிக்கும் இடைப்பட்ட பகுதியில்மகத்தானசாத்தியக்கூறுகளின் மையமாக அமைந்துள்ளது.
இன்று, இந்த சாத்தியக்கூறுகளை பார்ப்பதற்கும், மேம்பாட்டு நடவடிக்கைகள் மூலமாக உங்கள் ஆசீர்வாதங்களைப் பெறும் வாய்ப்பையும் நான்
பெற்றுள்ளேன். கடந்த முறை, சூரிய மின்சக்தி ஆலையை திறப்பதற்காக கடந்த மார்ச் மாதம் இங்கு நான் வந்திருந்தேன். அப்போது, என்னுடன் பிரான்ஸ் அதிபரும் உடன் வந்திருந்தார். நாங்கள்பெண் தெய்வத்தின் புகைப்படம் மற்றும் கழுத்தில் அணியும் துண்டுடன் வரவேற்கப்பட்டோம். அந்த வரவேற்பால், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மிகவும் ஈர்க்கப்பட்டார். எனவே, பெண்தெய்வத்தின் மகிமையையும் மகத்துவத்தையும் பற்றி தெரிந்து கொள்ள அவர் விரும்பினார். நான் அவளது மகத்துவம் பற்றி விளக்கிய போது, அவர் முற்றிலும் ஆச்சரியமடைந்தார்! பக்திமற்றும் பாரம்பரியங்களின்
நிலமான இங்கு விரிவான வளர்ச்சியை கொண்டு வர நாங்கள் உறுதி
ஏற்றுள்ளோம்.
யோகி அவர்களின் தலைமையின் கீழ், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் அமைக்கப்பட்டதில் இருந்து, பொதுவாக உத்திரப்பிரதேசம் முழுவதிலும் குறிப்பாக பர்வன்சால், மிகத் துரிதமாக வளர்ச்சியை அடைந்து
வருவதை தெளிவாகக் காண முடிகிறது. இந்த பிராந்தியத்தின் ஏழைகள், வறியவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை உயர்த்துவதற்காக சோனிலால் படேல்அவர்களைப் போன்ற கடின உழைப்பாளர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக நாங்கள் அனைவரும் இடைவிடாமல் முயற்சிகள் செய்து வருகிறோம். கடந்த இரண்டு நாட்களில், பர்வன்சால் மக்களுக்கு
புதிய மேம்பாட்டு திட்டங்களை தொடங்குவதற்கும் அர்ப்பணிப்பதற்குமான வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. அதில், நாட்டின் மிக நீண்ட
எக்ஸ்பிரஸ்வே சாலையானபர்வன்சால் எக்ஸ்பிரஸ்வே, வாரணாசியில் விவசாயிகளுக்கான உணவுப் பொருள் சரக்கு மையம் மற்றும் ரயில்வே தொடர்பான திட்டங்கள் அடங்கும். இந்த திட்டங்கள், பர்வன்சாலின்வளர்ச்சிக்கு மிக அதிகமான வேகத்தை அளிக்க உள்ளன.
இந்த சங்கிலி அபிவிருத்திக்கு மேலும் ஊக்கமளிக்க நான் மீண்டும் இங்கு வருகிறேன். சிறிது காலத்திற்கு முன்பு, வரலாற்று சிறப்புமிக்க பன்சாகர் அணை திட்டத்துடன் ரூ.4000 கோடி மதிப்புள்ளபல திட்டங்கள் தொடங்கப்பட்டன. நீர்ப்பாசனம், சுகாதாரம் மற்றும் போக்குவரத்து தொடர்பான அந்தத் திட்டங்கள், இப்பிராந்தியத்தில் சாமானிய மனிதனின் வாழ்க்கையில் ஒரு இனிமையானமாற்றத்தை கொண்டு வரும். மிர்சாபூர், சோன்பத்ரா, பதோஹி, சான்தாளி அல்லது அலகாபாத் மக்களின் வாழ்க்கையில் வேளாண்மை முக்கிய பகுதியாக இருக்கிறது. முந்தைய அரசாங்கங்கள்விவசாயிகளுக்கு முழுமையடையாத திட்டங்களைச் செய்து, அவற்றை நிறுத்தி வைத்தன. அதன் சுமையை நீங்கள் எல்லோரும் சுமக்க வேண்டியிருந்தது.
அதற்கு நீங்கள் எல்லோருக்கும்சாட்சியாக இருக்கிறீர்கள். நண்பர்களே,
ரூ.3,500 கோடி மதிப்புள்ள பன்சாகர் கால்வாய் திட்டத்தின் மூலம், மிர்சாபூர் உட்பட அலாகாபாத்தையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த பிராந்தியத்தின் 1.5 லட்சம் ஹெக்டேர் விவசாய நில நீர்ப்பாசன வசதியுடன் பலன் பெறும். இந்த அனைத்து திட்டங்களும் இருபது ஆண்டுகளுக்கு முன்பே முடிக்கப்பட்டிருந்தால், அதற்கான பலன்களை நீங்கள்ஏற்கனவே அறுவடை செய்ய ஆரம்பித்திருப்பீர்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக உங்களின் இருபது ஆண்டுகள் வீணாகி விட்டன. ஆனால் சகோதர, சகோதரிகளே, முந்தைய அரசாங்கங்கள்உங்களைப் பற்றியோ அல்லது இந்த பிராந்தியத்தின் விவசாயிகளைப் பற்றியோ கவலைப்படவில்லை. இந்த திட்டத்தின் வரைவு 40 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்டது! இத் திட்டத்திற்கானஅடிக்கல் 1978ம் ஆண்டில் அமைக்கப்பட்டது, ஆனால் வேலை 20 ஆண்டுகளுக்கு
பின்னர் தொடங்கியது. தொடர்ந்து வந்த ஆண்டுகளில், பல அரசாங்கங்கள்அதிகாரத்திற்கு வந்தன, வாக்குறுதிகளை அளித்தன. பொதுமக்களுக்கு
எதுவும் செய்யப்படவில்லை.
கடந்த 2014 ஆம் ஆண்டில், நீங்கள் எல்லோரும் எங்களுக்கு சேவை செய்யவாய்ப்பளித்தபோது, எங்கள் அரசாங்கம் பழைய மற்றும் இடையில் நிறுத்தப்பட்டிருந்த திட்டங்களை நடத்தத்தொடங்கியது, இந்த திட்டம் மேற்பரப்புக்கு வந்தது. ஆனாலும் கோப்புகளுக்கு மத்தியில் இது தோல்வியை
அடைந்தது. அதன் பிறகு, இது பிரதான் மந்திரி கிருஷி சின்சாய் யோஜனா திட்டத்தின்கீழ் கொண்டு வரப்பட்டு, முழுக்க கவனமும் பணியை நிறைவு செய்வதிலேயே திசை திருப்பப்பட்டது. கடந்த 1 ஆண்டு மற்றும்
3 மாதங்களாக யோகி அவர்களும் அவரது அணியினரும்மேற்கொண்ட
ஒருங்கிணைந்த முயற்சியின் விளைவாக, பன்சாகர் கால்வாய் வடிவில்
உங்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதற்காக அமிர்தத்தை பெற முடிந்தது.
பன்சாகர் தவிர, நீண்டகாலமாகநிலுவையில் உள்ள சராயு கால்வாய்
திட்டத்திற்கும், மத்திய கங்கா சாகர் திட்டத்திற்குமான பணிகள் நடந்து
வருகின்றன.
நண்பர்களே,
பன்சாகர் திட்டம் என்பது முழுமையற்ற சிந்தனை மற்றும் வரையறுக்கப்
பட்ட அதிகார சக்தியின் உதாரணமும் கூட, அதற்கான விலையை எனது
விவசாய சகோதர, சகோதரிகளான நீங்கள்அனைவரும், எனது ஏழை
சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் இப்பிராந்தியத்தில் உள்ள அனைத்து
மக்களாலும் செலுத்தப்பட்டிருக்கிறது. நீங்கள் அனைவரும் இந்த
வசதியை நீண்டகாலத்திற்கு முன்பே பெற்றிருக்க வேண்டும், ஆனால்
ஒட்டுமொத்த தேசமும் நிதி இழப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருந்த
தால் இந்த வசதிகள் வழங்கப்படவில்லை. அந்த நேரத்தில் இந்ததிட்டத்தின் செலவு வெறும் ரூ.300 கோடி மட்டுமே. அந்த தொகைக்குள் இப்பணியை முடித்திருக்கலாம். இருப்பினும், நிலுவையில் வைக்கப்பட்டதன் காரணமாக, நேரம் கடந்து விட்டது, அதன்செலவு அதிகரித்தது. ரூ.300 கோடி திட்டத்திற்கு இப்போது ரூ.3500 கோடி பயன்படுத்தி மட்டுமே முடிக்க
முடிந்திருக்கிறது. நீங்கள் சொல்லுங்கள், முந்தைய அரசாங்கங்கள்
குற்றம்சாட்டப்படவில்லையா? உங்களுடைய உரிமைகளை இழப்பதில் இருந்து அவர்கள் காப்பாற்றவில்லையா? ஆகையால் சகோதர,
சகோதரிகளே, தற்போது முதலைக் கண்ணீர் வடிப்பவர்கள், அவர்களின்
ஆட்சிக் காலத்தில், நாடு முழுவதும் முழுமையடையாத நீர்ப்பாசன
திட்டங்களை கண்டுகொள்ளாமல் கண்மூடித்தனமாக இருந்தது ஏன்
நீங்கள் கட்டாயம் கேள்வி கேட்க வேண்டும். இது பன்சாகர் என்ற ஒரே ஒரு திட்டம் மட்டுமல்ல, நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் விவசாயிகளின் நலனுக்கான பல திட்டங்கள் முழுமையடையாமல் மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்டநிலையில் உள்ளன. அதைப் பற்றி எல்லாம் அவர்கள்
கவலைப்பட மாட்டார்கள். ஏன் இத்திட்டங்களை முழுமையடையாமல்
விட்டு விட்டார்கள்?
சகோதர, சகோதரிகளே,
உங்களிடமிருந்து சிலவற்றை நான் கேட்க விரும்புகிறேன். நீ எனக்கு
தருவீர்களா? இது அன்னை விந்தியாவாசினியின் பூமி. நீங்கள் எனக்கு
வாக்குறுதி அளித்திருக்கிறீர்கள். நீங்கள் அந்தவாக்குறுதியை
நிறைவேற்றுவீர்களா? பாருங்கள், ரூ.3500 கோடி செலவு,40 ஆண்டுகள்
வீணாகிவிட்டது. கடந்துவிட்ட காலங்களை நாம் எதுவும் செய்ய முடியாது. இப்போது, தண்ணீர் உங்கள்இடத்தை அடைந்து விட்டது. இப்போது, இந்த நீரை பயன்படுத்திக் கொள்ளும் எனது விவசாய சகோதர, சகோதரிகள்,
கால்வாயை ஒட்டி வசிப்பவர்கள், சொட்டு நீர்பாசனம் மற்றும் தெளிப்பான்பாசனம் மூலம் தண்ணீரை சேமிப்பீர்களா? உங்கள் அனைவரின்
வாக்குறுதியைத்தான் நான் விரும்புகிறேன். வேறு ஒன்றும் இல்லை. இந்த தண்ணீர் அன்னை விந்தியாவாசினியின்பிரசாதத்தை போன்றது.
அன்னை விந்தியாவாசினியின் பிரசாதத்தில் ஒரு தானியத்தைக் கூட
நாம் எப்படி வீணாக்க விடமாட்டோமோ அதே போல, இந்த தண்ணீரில்
ஒரு சொட்டு கூடவீணாக்க விடக் கூடாது. அன்னையின் பிரசாதத்தை போல வீணாக்காமல் பெற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு துளி தண்ணீரைப் பயன்படுத்தி நாம் பயிர்களை பயிரிடுவோம். அனைத்துவகை
பயிர் செய்கையிலும், சொட்டு நீர்ப்பாசன முறையால் உதவ முடியும். இது பணம், தண்ணீர், உழைப்பு மிச்சப்படுத்துவதோ நல்ல விளைச்சலையும் கொடுக்கும். எனவே, நீரைச் சேமிக்கவேண்டுமென நாம் முடிவு செய்து
விட்டால், இன்று 1 முதல் 1.25 இலட்சம் ஹெக்டேர் நிலத்திற்கு
பயன்படுத்த கிடைக்கின்ற தண்ணீரை வைத்து,2 லட்சம் ஹெக்டேர் நிலத்திற்கு பாசனம்செய்ய பயன்படுத்தலாம். இன்று, சில லட்சம் எண்ணிக்கையிலான விவசாயிகள் நன்மைகளை பெற்றால், எதிர்காலத்தில் அது இரு மடங்காக இருக்கும். இந்த அளவு தண்ணீர் போதுமானதாகஇல்லையென நீங்கள் அறிந்தாலும், பயிர் செய்யும்போது தண்ணீரை சேமித்தால், அது நீண்ட காலத்திற்கு நீடிக்கும். இந்த நீர் உங்கள் எதிர்கால தலைமுறையினருக்கும் பயனளிக்கும்.
ஆகையால் என் சகோதர, சகோதரிகளே, உங்களிடமிருந்து உங்கள் பணியாளராகவும், அன்னை விந்தியாவாசினியின் பக்தனாகவும் நான் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் எனக்கு கொடுப்பீர்களா? நீங்கள் சத்தியத்தை நிறைவேற்றுவீர்களா? நுண்ணீர் பாசத்திற்கான அரசு திட்டம் உள்ளது, அதன் கீழ் மானியமும் தரப்படுகிறது. நீங்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், நான்உங்களுக்கு சேவை செய்ய வந்திருக்கிறேன்.
என் அன்பான விவசாய சகோதர, சகோதரிகளே,
சிலர், விவசாயிகளுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள். குறைந்த
பட்ச ஆதரவு விலை இருந்தது, எந்த கொள்முதலும் செய்யப்படவில்லை, முடிவு செய்யப்பட்ட விலை குறித்துசெய்தித்தாள்கள் மூலமாக ஒரு அறிவிப்பு வெளியிட்டார்கள், புகைப்படங்கள் அச்சிடப்பட்டன, இந்த முயற்சியை அனைவரும் வரவேற்றனர். இருப்பினும், விவசாயிகளுக்கு எதுவும்
கிடைக்கவில்லை. கோப்புகளில் மட்டும் தான் குறைந்தபட்ச ஆதரவு
விலை அதிகரிக்கப்பட்டதே தவிர அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பே,விவசாய உற்பத்தி செலவை விட 1.5 மடங்கு அதிகமாக குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க வேண்டுமென்ற மசோதா பரிந்துரை செய்யப்பட்டது. இருப்பினும்,
விவசாயிகளின்பிரச்சினையை அரசியல் ரீதியாகப் பயன்படுத்திக்
கொண்டவர்களுக்கு,1.5 மடங்கு அதிகமான குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்குவதற்கு நேரமில்லை. அவர்கள் அரசியலில் மூழ்கிஇருந்தனர். நாட்டின் கிராமங்கள் அல்லது ஏழை விவசாயிகள் பற்றி அவர்களுக்கு
சிந்திக்க நேரம் இல்லை. அவர்கள் கோப்புகளின் முன்னால் மட்டுமே
உட்கார்ந்திருந்தனர். முந்தையஅரசாங்கங்கள் பல ஆண்டுகளாக செய்யத் தயங்கிய வேலை, என் சகோதர, சகோதரிகளே உங்களின் பணியாளரால் செய்து முடிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலையை 1.5 மடங்குஉயர்த்துவோம் என நாங்கள் உறுதியளித்ததாக என்னால் தாழ்மையுடன் கூற முடியும். இன்று, அந்த வாக்குறுதி நிஜ களத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. நெல், சோளம், துவரம், உளுந்து மற்றும்பாசிப் பருப்பு உள்ளிட்ட 14 காரீப் பருவ பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.200 முதல் ரூ.1800 வரை நாங்கள் அதிகரித்துள்ளோம். இதன் மூலம், விவசாயிகள் நேரடியாக இந்தபயிர்களின் உற்பத்தி விலைக்கு 50 சதவீதம் லாபம் ஈட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
சகோதர, சகோதரிகளே,
இந்த முடிவால் உத்தரப்பிரதேசம் மற்றும் பர்வன்சால் விவசாயிகள் ஆதாயம் பெறப் போகிறார்கள். இப்போதிலிருந்து,1 குவிண்டால் நெல் மூலமாக உங்களுக்கு ரூ.200 அதிகமாக கிடைக்கும். நண்பர்களே,1 குவிண்டால் நெல் உற்பத்தி செய்யும் செலவு ரூ.1100ரூ.1200 ஆகும். இப்போது நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.1750 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது,50% இலாபத்தை உறுதிப்படுத்துகிறது. கடந்த ஆண்டை விட நெல் கொள்முதல் 4 மடங்கு அதிகம் என்று உ.பி.யில் கடந்த ஆண்டில் நான் கூறினேன். இந்த மகத்தான சாதனைக்காக யோகிஅவர்களுக்கும் அவரது குழுவின
ருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
சகோதர, சகோதரிகளே,
நெல்லுடன், பருப்பு வகைகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. பருப்பு வகைகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.200 225 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, விவசாயிகள் சாகுபடி செலவைவிட 65% அதிகமாக நேரடி நன்மை பெறுவார்கள்.
.
நண்பர்களே,
விவசாயிகளின் அனைத்து சிறிய மற்றும் பெரிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நமது அரசாங்கம் நாளுக்கு நாள் தினந்தோறும் பணியாற்றி வருகிறது. விவசாயிகளின் வருமானத்தைஅதிகரிக்கவும், சாகுபடி செலவை குறைப்பதற்கும் விதையிடுதலில் இருந்து சந்தைப்படுத்துதல் வரை ஒரு சரியான அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம், யூரியாவிற்காகவிவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்டது; அவர்கள் இரவு முழுவதும் வரிசையாக நின்று கள்ளச்சந்தையில் யூரியா வாங்க வேண்டியிருந்தது. கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த பிரச்சினைதீர்க்கப்பட்டுள்ளது. அனைத்தும் உங்கள்
ஆசீர்வாதம், ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றால் நிறைவேற்றப்
படுகிறது.
சகோதர, சகோதரிகளே,
இந்த பிராந்தியத்தின் விவசாயிகளுக்கு நான் வேண்டுகோள் விடுக்க
விரும்புகிறேன்.2022 ம் ஆண்டு வாக்கில் நாட்டின் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க வேண்டும், அது கடினமானவேலை அல்ல. அதற்கு
ஒரு உதாரணம் தருகிறேன். இன்று நாம் வயலின் விளிம்புகளைச் சுற்றி வேலிகளை நிறுத்தி விடுகிறோம். சில நேரங்களில் கூர்மையான கம்பிகள் வைக்கப்படுகின்றனஅல்லது விளிம்புகளை சுற்றி தாவரங்கள் வளர்க்கப்
படுகின்றன. இந்த நடவடிக்கையால் நிறைய பகுதி வீணாகிறது. இப்போது அரசாங்கம் புல் வகையின் கீழ் மூங்கிலை கொண்டு வந்துள்ளது. எனவே, நீங்கள் இப்போது உங்கள் விளை நிலத்தின் விளிம்புகளில் மூங்கில்
தாவரத்தை பயிரிட முடியும். நீங்கள் எளிதாக மூங்கிலை வெட்டி சந்தை
யில் விற்கலாம். அரசாங்கத்தால் உங்களைதடுத்து நிறுத்த முடியாது.
விவசாயிகள் அவர்களின் விளை நிலத்தின் விளிம்புகளில் மூங்கிலை
எளிதாக பயிரிடும் நிலை இருந்தும், ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள
மூங்கில்வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகின்றன. நாங்கள் சட்டத்தை மாற்றியுள்ளோம். முன்பு மூங்கில் ஒரு மரமாக கருதப்பட்டது, ஆனால் நாங்கள் அதில் மாற்றத்தை செய்து, புல் என்றுவகைப்படுத்தினோம்.
ஊது பத்திகள், தீக்குச்சிகள் தயாரிப்பதற்குக் கூட மூங்கில் இறக்குமதி
செய்ய வேண்டியிருந்தது. இந்த சூழ்நிலையை நம்நாட்டில் உள்ள விவசாயிகள் ஒருமாதத்திற்குள்ளாக மாற்றிக் காட்ட முடியும். இதுபோன்ற பல்வேறு பயன்கள் உள்ளன. விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதுடன் சாகுபடியை மேம்படுத்தும் அரசாங்கத்தின் எண்ணற்றதிட்டங்களின்
நன்மைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென என் விவசாய
சகோதரர்களுக்கு வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். கிராமங்கள்
மற்றும் ஏழைகளுக்கு அதிகாரம்அளிப்பதற்காக நாட்டினுடைய
ஒவ்வொரு மூலையிலும் அபிவிருத்திக்கான சுற்றுச்சூழலைக் கொண்டு வருவதற்கான இலக்குடன் நமது அரசாங்கம் முன்னோக்கி நகர்கிறது.
சிறந்தஇணைப்புகளை உருவாக்குவதற்கும், உங்கள் வாழ்க்கையை
எளிதாக்குவதற்கும் சில பாலங்களுக்கான அடிக்கல்லும் இன்று அமைக்கப்பட்டிருக்கின்றன. வாரணாசிக்கும் சுனருக்கும்இடையில் உள்ள தூரத்தை சுனார் பாலம் இப்போது குறைத்துள்ளது. பருவமழை காலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும் துண்டிக்கப்படுகிறார்
கள். இப்போதுஇந்த புதிய பாலம் அந்த சிக்கலை தீர்க்கும்.
சகோதர, சகோதரிகளே,
சிறந்த தரமான,விலை உயர்ந்த சுகாதார வசதிகள், பரம ஏழைகளுக்கும்
கிடைக்கும்படி செய்வது அரசாங்கத்தின் மிகப்பெரிய தீர்மானங்களில்
ஒன்றாகும். இங்கு அமைக்கப்பட உள்ள மருத்துவகல்லூரிகள் மிர்சாபூர்
மற்றும் சோன்பத்ரா மக்களுக்கு மட்டுமல்லாமல், பாதோஹி, சாந்தோளி மற்றும் அலாகாபாத் ஆகிய பகுதி மக்களுக்கும் பயனளிக்கும். இப்போது
இந்த பகுதிகளில் உள்ளமாவட்ட மருத்துவமனைகள் 500 படுக்கை வசதி
களை பெற உள்ளன. இதன் விளைவாக, நீங்கள் கடுமையான நோய்
களுக்கு சிகிச்சை பெற நீண்ட தூரத்துக்கு பயணிக்க வேண்டியஅவசியமில்லை. அதோடு, உத்தரப்பிரதேசம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட ஜன் அவ்ஷாதி கேந்திராக்கள் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன. இந்த ஜன் அவ்ஷாதி கேந்திராக்கள் ஏழை, நடுத்தர வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்கத்திற்கு கீழ் உள்ள மக்களுக்கு பெரும் ஆதரவாக இருக்கும் என்பதை
நிரூபிக்கும். அறுவை சிகிச்சைக்குப் பின்னர் நோயாளிகளுக்குத்
தேவைப்படும் 700 க்கும் அதிகமான மருந்துகள் மற்றும் 150 க்கும் மேற்
பட்ட கருவிகள் மலிவு விலையில் இந்த கடைகளில் கிடைக்கின்றன. நாடு முழுவதும் 3500 க்கும் மேற்பட்ட கடைகள் நிறுவப்பட்டுள்ளன. 800 க்கும் மேற்பட்ட மருந்துகள் விலை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. செயற்கை முழங்கால்கள் மற்றும் இதயத்திற்கு பயன்படுத்தப்படும் ஸ்டென்ட்டுகள் விலைகுறைக்கப்பட்டுள்ளன. இதுபோன்று அரசாங்கத்தால் எடுக்கப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள், ஏழைகளுக்கும்
நடுத்தர மக்களுக்கும் நிம்மதியை அளிக்கும்.
நடுத்தர குடும்பத்தில் முதிய வயதுடைய நபர் ஒருவர் இருந்தால், ஒன்று அல்லது இரண்டு நோய் விவகாரங்கள் அந்த குடும்பத்தின் அன்றாட வாழ்நாளில் ஒரு பகுதியாக இருக்கும். நீரிழிவுமற்றும் இரத்த அழுத்தம்
போன்ற நோய்களுக்கு மருந்துகள் வழக்கமான அடிப்படையில் எடுக்கப்
பட வேண்டும். குடும்பத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களுக்கு தினசரிஅடிப்படையில் மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டிய
தேவை இருந்தால், அவர்களின் மாத மருத்துவ பில் ரூ.1000, ரூ.2000, ரூ.3000 மற்றும் ரூ.5000 ஆகக் கூட உயரும். இருப்பினும், இப்போது ஜன் அவ்ஷாதி கேந்திரா திட்டத்தின் காரணமாக, ஒரு மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் பில்லில் ரூ.250- 300 குறைக்கப்படுகிறது. இதுபோன்ற மக்களுக்கு சேவை
செய்யும்விஷயங்களை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள். முந்தைய
அரசாங்கங்களே இதைச் செய்திருக்கலாம். ஆனால் அவர்களது கட்சி,
அவர்களின் குடும்பம் மற்றும் தொகுதிகளுக்கு அப்பால் சிந்திக்கத் தயாராகஇல்லை. எனவே, நாட்டின் சாமானிய மனிதரின் நலன்களுக்கு அவர்கள் முன்னுரிமை தந்ததில்லை.
நண்பர்களே,
இந்த நாட்களில், டையாலிசிஸ் என்பது கட்டாய தேவையாகி வருகிறது.
பல்வேறு கிராமங்களில் இருந்து பல குடும்பங்கள், டையாலிசிஸ் செய்து கொள்வதற்காக நீண்ட தூரம் பயணிக்கவேண்டி இருக்கிறது. நாங்கள்
தொடங்கி உள்ள பிரதான் மந்திரி தேசிய டையாலிசிஸ் திட்டமானது,
ஏழை மக்களின் மிகப்பெரிய பிரச்னைகளில் ஒன்றை தீர்ப்பதற்கான உதவும் பொறுப்பைஏற்றுள்ளது. டையாலிசிஸ் திட்டத்தின் கீழ், மாவட்டங்களில் டையாலிசிஸ் மையங்களை அமைக்கிறோம். இங்கு, ஏழை, நடுத்தர
வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்கத்திற்கு கீழ் உள்ள மக்கள்டையாலிசிசை இலவசமாக பெற முடியும். இன்றைய தேதி வரை, சுமார் 25 லட்சம் டையாலிசிஸ் அமர்வுகள் இலவசமாக செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு டையாலிசிஸ் அமர்வுகளிலும், ஒருஏழை நபரின் ரூ .1500, ரூ .2000 அல்லது
ரூ.2500 சேமிக்கப்படுகிறது. மேலும், தூய்மை இந்தியா திட்டம் நோய்களை எதிர்த்துப் போராடுவதில் திறம்பட செயல்படுவதை நிரூபித்துள்ளது. கடந்தஆண்டு அறிக்கையின்படி, கழிப்பறைகளின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டிருக்கும் கிராமங்களின் மக்கள் மற்றும் குழந்தைகளின் நோய்கள் கணிசமாக குறைந்துவிட்டன! மேலும், திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாதததாக அறிவிக்கப்பட்டுள்ள கிராமங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பமும்
ஆண்டுதோறும் சுமார் ரூ.50,000 சேமிக்கின்றன. முன்னதாக, இந்த
தொகைமருத்துவமனை செல்வதற்கும், அதற்காக பணியிலிருந்து விடுப்பு எடுத்ததாலும் செலவழிக்கப்பட்டு கொண்டிருந்தது.
நண்பர்களே,
வறுமை மற்றும் நோய்களின் தீய சுழற்சியை உடைக்க அரசாங்கம் பெரும் திட்டம் ஒன்றை தொடங்க உள்ளது. சிலர் அதை 'மோடி பராமரிப்பு' என்றும் மற்றவர்கள் 'ஆயுஷ்மான் பாரத்' என்றும்கூறுகின்றனர். இந்த திட்டத்தின் கீழ், ஏறக்குறைய 50 கோடி ஏழை மக்கள் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கான சிகிச்சையை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். அதற்கான பணிகள் மிகவிரைவாக நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் நாடு முழுவதும் இந்தத் திட்டத்தை அரசாங்கம் தொடங்க உள்ளது. நீங்களே கற்பனை செய்து பாருங்கள், மோசமான நோயினால் ஒரு நபர்பாதிக்கப்பட்டிருக்கும் அந்த குடும்பத்திற்கு, அரசாங்கம் 5 லட்சம் ரூபாய் வழங்கும் போது, அந்த பணம், அந்த குடும்பத்திற்கு ஒரு புதிய வாழ்க்கையை கொடுக்கும். இதுபோன்ற பலபிரச்சனைகளிலிருந்து அந்த குடும்பம் மீட்கப்பட மாட்டாதா? கோடிக்கணக்கான குடும்பங்கள் இந்த பிரச்சினையிலிருந்து வெளியே வரும் போது, என் நாடும் அதே பிரச்னைகளில் இருந்துவெளியில் வராதா? எனவே
சகோதர, சகோதரிகளே, நாட்டின் ஆரோக்கியமான மற்றும் பிரகாசமான
எதிர்காலத்திற்கான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தினை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
சகோதர, சகோதரிகளே,
ஏழைகள், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் கவலைகளின் சுமையை குறைத்தல் மற்றும் வாழ்வை மேம்படுத்துதல் ஆகியவற்றை சிறப்பாக்குவதற்கும், எளிதாக்குவதற்கும் அரசாங்கம் முன்னுரிமை அளிக்கிறது. இதற்கான செயல்பாட்டில் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளோம். இதை மனதில் வைத்து, நாட்டின் ஏழை மக்கள், மாதத்திற்கு ரூ.1 மற்றும் ஒருநாளைக்கு 90 பைசா பிரீமியத்தில் சமூக பாதுகாப்பு கேடயத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளனர். இது ஏழை நபர்களுக்குக் கூட மிகப்பெரிய தொகை அல்ல. இந்த பிரீமியம்விகிதத்துடன் ஆயுள் காப்பீடும்,
விபத்து காப்பீடும் மக்களின் வாழ்வில் ஒளிச்சுடராக செயல்படுகின்றன. முன்பெல்லாம், மேல் வர்க்க மக்கள், கல்வி பயின்ற வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்கம்மட்டுமே வங்கிக் கணக்குகளை வைத்திருக்க முடியும் என்று ஒரு சிதைந்த சித்தாந்தம் இருந்தது. ஏழைகள் வங்கி கணக்கை பெற முடியாது. இதேபோல், பணக்காரர்கள் மற்றும் படித்தவர்கள்மட்டுமே எரிவாயு சிலிண்டர்கள் வைத்திருக்க முடியும் என மக்கள் நம்பிக் கொண்டிருந்தனர். ஏழைகளால் அது முடியாது. வங்கி அட்டைகள் மூலம் பண பரிவர்த்தனைகளை அதிகாரத்தில்உள்ளவர்களும், மேல் வகுப்பு மக்களும் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையும் மக்கள் மத்தியில் இருந்தது.
ஏழைகளால் அது முடியாது. நண்பர்களே, நாங்கள் இந்தசித்தாந்தத்தை உடைக்க முடிவு செய்தோம். 125 கோடி இந்தியர்கள் அனைவரும் சமத்துவமான உரிமைகளைப் பெற வேண்டும். காப்பீட்டைப் பெறுவது பற்றி ஏழைகள் ஒருபோதும் யோசிக்கமுடியவில்லை. கார்களை வைத்திருக்கும் செல்வந்தர்கள் மட்டுமே, காப்பீடு செய்ய முடியும் என்று அவர்கள் நம்பினர். நம்மிடம் ஒரு சைக்கிள் கூட இல்லையே, நாம் எதற்கு காப்பீடு செய்யவேண்டும் என்றே அவர்கள் நினைத்தார்கள். நாங்கள் இந்த கட்டுக்கதைகளை உடைத்து, தினசரி 90 பைசா மற்றும் ஒரு மாதத்திற்கு ரூ.1 பிரீமியத்தில் ஒரு காப்பீட்டுத் திட்டத்தை ஏழைகளுக்குவழங்கினோம். இந்த காப்பீடு, மோசமான நேரத்தில் ஏழைகளுக்கு பயனளிக்கும். பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையில் உள்ள பாரபட்சங்களை முடிவுக்கு கொண்டு வரும் திட்டங்களைஅறிமுகப்படுத்ததி வருகிறோம். வரவிருக்கும் நாட்களில் நீங்கள் விரைவான முடிவுகளை பெறுவீர்கள். நமது ஏழைகள் இப்போது புதியவற்றை கண்களால் பார்க்க முடியும்; புதியவற்றை பேசமுடியும். அவர்களுக்கு நம்பிக்கை மற்றும் தன்னம்பிக்கை ஏற்படுத்துவதை நோக்கி நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
உத்திரப்பிரதேசத்தில் 1.5 கோடிக்கும் அதிகமான மக்கள் இப்போது இந்த
இரண்டு திட்டங்களிலும் இணைந்துள்ளனர். இந்த திட்டங்கள் மூலம் ஏறத்தாழ ரூ.300 கோடி தொகை ஏற்கனவேமக்களின் கஷ்ட காலங்களில் அவர்களை சென்றடைந்துள்ளது. இந்த கணக்கு வெறும் உத்தரப்பிரதேசத்திலிருந்து மட்டும் தான். எனது அரசாங்கம் 100 கோடி ரூபாயை அறிவித்திருந்
தால் கூட, அது செய்தித்தாள்களில் முதல் பக்க தலைப்புச் செய்தியாக
போடப்படுகிறது. எங்கள் திட்டம் மூலம், ரூ .300 கோடி மக்களை சென்றடைந்து, அவர்கள் துன்பத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். எப்படி பணிகளை செய்து முடிக்க வேண்டும், நடைமுறையை எப்படி மாற்றுவது என்பதற்கு இது ஒரு நேரடி எடுத்துக்காட்டாகும்.
நண்பர்களே,
இன்னும் இத்திட்டங்களில் தங்களை இணைத்துக் கொள்ளாதவர்களை,
விரைவில் சேர்ந்து பலன்களை பெறத் தொடங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். எந்தவொரு துன்பமும் தாக்கவேண்டுமென யாரும் விரும்பமாட்டார்கள். இருந்தாலும், விதியின் சுழற்சியை யாரும் கணிக்க முடியாது. துன்பகரமான காலங்களில், இந்த திட்டம் உங்களுக்கு ஒரு வரமாக
இருந்து, உங்களுக்கு பயன் அளிக்கும். எனவே, இந்த திட்டத்தை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். ஏழைகளின் நலனுக்காக அரசாங்கத்தால்
எடுக்கப்படும் அனைத்து முடிவுகளும், கொண்டு வரப்படும்திட்டங்களும் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதோடு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதையும் இலக்காகக் கொண்டுள்ளன. சமீபத்திய சர்வதேச
அறிக்கையின்படி, இந்தியாவின் 5 கோடி மக்கள் கடந்த 2 ஆண்டுகளில்
தீவிர வறுமையில் இருந்து வெளியே வந்துள்ளனர். இந்த செய்தி பத்திரிகைகளில் அச்சிடப்பட்டிருக்கலாம், ஆனால் அது ஒரு மூலையில் மட்டுமேஇருந்திருக்கும், தொலைக்காட்சி சேனல்கள் கூட அதைப் பற்றி பேசுவதில்லை. இதே இந்த அறிக்கை எதிர்மறையாக இருந்திருந்தால், ஆரவார கூச்சல் ஏற்பட்டிருக்கும். ஆனால், அறிக்கைநேர்மறையானதாக இருக்கும் போது, யாரும் அதை கண்டுகொள்ளவதில்லை. எனவே, இந்த சர்வதேச
அறிக்கையைப் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன்.
நீங்களேசொல்லுங்கள்; ஒவ்வொரு திட்டத்திலும் நேர்மறையான முடிவு
களை நீங்கள் பார்க்க முடியவில்லையா? ஏழைகளின் வாழ்க்கையை
சிறப்பாக மாற்றுவதற்கு நீங்கள் விரும்பவில்லையா? ஏழைகள் வறுமையிலிருந்து வெளியே வருவதை நீங்கள் விரும்பவில்லையா? இன்று அரசு திட்டங்களின் முடிவுகளை நீங்கள் தெளிவாக பார்க்க முடியும். நிச்சயமாக, ஏழைகளுக்கு நிதிசுமையைக் குறைப்பதற்கான நோக்கங்களைக் கொண்ட அரசாங்கத் திட்டங்கள் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. அவர்களுக்கு
வாய்ப்புகளை வழங்கும் அம்சமும் அதில் ஒன்று என்பது நிச்சயம். எடுத்துக்காட்டாக, உஜ்வாலா யோஜனா திட்டம், பெண்களை புகையிலிருந்து
மட்டும் விடுவிக்கவில்லை, அவர்களது குடும்பத்திற்கு கூடுதலான
வருவாயைப் பெறுவதற்கான ஒருவாய்ப்பையும் வழங்கியுள்ளது. இனி
அவர்கள் அடுப்புக்கு முன் கட்டையை எரிக்க மணிக்கணக்கில் அமர்ந்
திருக்க வேண்டியதில்லை. உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் உத்தரபிரதேசத்தில்80 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச எரிவாயு
இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதேபோல், ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ், உத்திரப்பிரதேசத்தில் 5 கோடிக்கும் மேற்பட்டவங்கி கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ், வங்கி உத்தரவாதமின்றி 1 கோடிக்கு மேற்பட்ட கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாதிட்டத்தின் கீழ்,18 லட்சத்திற்கும் அதிகமான
வீடுகள் கட்டப்பட்டு, பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வறுமையிலிருந்து ஏழை மக்களை வெளியேற்றுவதற்கான ஒரு சில திட்டங்கள்தான்
இவை.
நண்பர்களே,
ஏழை மக்களுக்கு மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வது, விவசாயிகளுக்கு நீர் பாசனத்தை உறுதி செய்வது, குழந்தைகளுக்கு வருவாயை உறுதி செய்வது, இளைஞர்களுக்குவேலைவாய்ப்பை உறுதி செய்வது மற்றும்
நடைமுறைகள் வெளிப்படையானதாகவும், முன்னோடியில்லாத வசதிகளைக் கொண்டதாகவும் இருக்கக் கூடிய ஒரு புதிய இந்தியாவின்தீர்மானத்தை பூர்த்தி செய்வதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இன்று தொடங்கப்பட்ட திட்டங்களுக்காக நான் மீண்டும் ஒருமுறை உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உ.பி. மாநிலத்தை வளர்ச்சியின் பாதையை நோக்கி வெற்றிகரமாக கொண்டு செல்வதற்காக யோகி அவர்களுக்கும், அவருடைய அரசாங்கத்திற்கும், அவரது ஒட்டுமொத்த குழுவினருக்கும்பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். மீண்டும் ஒருமுறை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்;
அன்னை விந்தியாவாசினியின் பிரசாதத்தை, அதாவது ஒவ்வொரு துளி
தண்ணீரை, பயன்படுத்திக் கொள்ள மறந்து விடாதீர்கள். கொளுத்தும்
வெயிலிலும் இங்கு திரளான கூட்டமாக வந்து பங்கேற்றிருக்கும் உங்கள் அனைவருக்கும், உங்கள் ஆசீர்வாதங்களை பொழிவதற்கும், என் ஆழ்
இதயத்திலிருந்து அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் கைகளை உயர்த்தி என்னுடன் குரல் கொடுங்கள் – இந்தியதாய்க்கு வெற்றி! இந்திய தாய்க்கு வெற்றி! இந்திய தாய்க்கு
வெற்றி!
மிக்க நன்றி!
***
(Release ID: 1556441)
Visitor Counter : 297