பிரதமர் அலுவலகம்

எளிமையாக வர்த்தகம் புரிவதை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் ஆய்வு

Posted On: 13 DEC 2018 7:54PM by PIB Chennai

எளிமையாக வர்த்தகம் புரிவதை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்கான உயர்நிலைக் குழு கூட்டத்திற்கு பிரதமர் இன்று (13.12.18) தலைமை தாங்கினார்.

இந்தக் கூட்டத்தில் பொருளாதார விஷயங்கள் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். மகாராஷ்டிரா முதலமைச்சர் திரு. தேவேந்திர பட்நவிஸ், தில்லி துணை நிலை ஆளுனர் திரு.அனில் பைஜால், மத்திய, மகாராஷ்டிர, தில்லி அரசுகளின் உயர்நிலை அதிகாரிகள் ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் எளிமையாக வர்த்தகம் புரிவது தொடர்பான பல்வேறு நிலைகளின் வளர்ச்சி குறித்து பிரதமருக்கு எடுத்துரைக்கப்பட்டது. கட்டிட அனுமதிகள், ஒப்பந்த அமலாக்கம், சொத்துப் பதிவு, வர்த்தகத்தை தொடங்குதல், மின் இணைப்பு பெறுதல், கடன் பெறுதல், கம்பெனி கலைப்பு உள்ளிட்ட விஷயங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

கடந்த 4 ஆண்டுகளில் இந்தியா உலக வங்கியோடு எளிமையாக வர்த்தகம் புரியும் தரவரிசை பட்டியலில் 142-லிருந்து 77 ஆக உயர்ந்தது பற்றி கூட்டம் கவனத்தில் கொண்டது.

வர்த்தகம் புரிதல், சீர்திருத்தங்கள் தொடர்பான அமலாக்கத்தில் இடையூறுகளை களைதல், குறைபாடுகளை தீர்த்து வைத்தல் ஆகிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விளக்கினார்கள்.

கடைசி நிலை அனுமதிகள், நடைமுறைகளை சீர்படுத்துவதில் கவனம் போன்ற நடவடிக்கைகள் வர்த்தகம் புரிதல் தரவரிசையை மேம்படுத்துவதோடு நின்று விடாமல் சிறு வர்த்தகம் மற்றும் சாதாரண மனிதனின் வாழுதலில் எளிமை நிலைமையையும் உயர்த்தும் என்று பிரதமர் கூறினார். இந்தியாவை பொறுத்தவரை அது வளர்ந்து வரும் துடிப்புள்ள பொருளாதாரமாக இருப்பதால் இந்த நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானவை என்றார் அவர். இந்தியாவின் வர்த்தகம் புரிதல் தரவரிசை உயர்வு குறித்து உலகெங்கும் ஆர்வம் தெரிவிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் கூறினார்.



(Release ID: 1555902) Visitor Counter : 133