நீர்வளத் துறை அமைச்சகம்

நாட்டில் உள்ள 91 முக்கிய நீர்த் தேக்கங்களின் நீர் இருப்பு 67 சதவீதமாக உள்ளது

Posted On: 09 NOV 2018 10:18AM by PIB Chennai

நாட்டில் உள்ள 91 பெரிய நீர்த் தேக்கங்களில் உள்ள நீர் இருப்பு நிலைமை இந்த மாதம்  8ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 107.883  பில்லியன் கன மீட்டர் (பி.சி.எம்.) ஆக உள்ளது. இது இந்த நீர்த் தேக்கங்களின் மொத்த தண்ணீர் இருப்புத் திறனில் 67 சதவீதம் ஆகும். 2018 நவம்பர் 1ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்த நீர் இருப்பு அதே 67 சதவீதமாக ஆக இருந்தது. 2018 நவம்பர் 8-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்த நீர்த் தேக்கங்களில் நீர் இருப்பு நிலைமை சென்ற ஆண்டு இதே காலத்தில் இருந்த இருப்புடன் ஒப்பிடுகையில் 102 சதவீதம் ஆகும்; கடந்த 10 ஆண்டுகளில் சராசரி நீர் இருப்பு நிலையுடன் ஒப்பிடுகையில் இது 98 சதவீதமாகும்.

இந்த 91 நீர்த் தேக்கங்களின் மொத்த நீர்ச் சேமிப்புத் திறன் 161.993 பி.சி.எம். ஆகும். இது நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள மொத்த நீர் கொள்ளவுத் திறனான 257.812 பி.சி.எம். வுடன் ஒப்பிடுகையில் 63 சதவீதமாகும். இந்த 91 நீர்த் தேக்கங்களில் 37 –ல் மொத்தம் 60 மெகா வாட்டிற்கும் கூடுதலான உற்பத்தித்திறன் கொண்ட நீர்மின்சக்தித் திறன்கள் இணைந்துள்ளன.

தென் மண்டலத்தில் தண்ணீர் இருப்பு நிலைமை

நாட்டின் தென் மண்டலத்தில் ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா (இந்த இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவான இரண்டு திட்டங்கள்) கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகியன அடங்கியுள்ளன. தெற்கு மண்டலத்தைப் பொறுத்தவரை மத்திய நீர் ஆணையத்தின் கண்காணிப்பில் 31 நீர்த் தேக்கங்கள் அமைந்துள்ளன. இவற்றின் மொத்த தண்ணீர் சேமிப்புத் திறன்  51.59 பி.சி.எம். ஆகும். இந்த நீர்த் தேக்கங்களில் தற்போது 31.33 பி.சி.எம். தண்ணீர் இருப்பதாகவும் இது மொத்தத் தண்ணீர் சேமிப்புத் திறனில் 61 சதவீதம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நீர் இருப்பு சென்ற ஆண்டு இதே காலத்தில் 64 சதவீதம் ஆகும். இந்த நீர்த் தேக்கங்களில் இதே காலத்தில் கடந்த 10 ஆண்டுகளில் சராசரி நீர் இருப்பு 65 சதவீதமாகும். இவ்வாறு சென்ற ஆண்டு இதே காலத்தில் இருந்த தண்ணீர் இருப்புநிலையை விட இந்த ஆண்டு குறைவாக உள்ளது. அதேபோல், கடந்த 10 ஆண்டு சராசரி நீர் இருப்புடன் ஒப்பிடுகையிலும் இது குறைவாகும்.

சென்ற ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் தண்ணீர் இருப்பு நிலைமை தமிழ்நாடு, ஹிமாச்சலப்பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், உத்ராகண்ட், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் சிறப்பாகவே உள்ளது. ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம், திரிபுரா, குஜராத்மகாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலங்கானா (இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவான இரண்டு திட்டங்கள்), ஆந்திரப்பிரதேசம், மற்றும் தெலங்கானா மாநிலங்களில் சென்ற ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் நீர் இருப்பு நிலைமை குறைவாகவே உள்ளது.

மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

*************


(Release ID: 1552316)
Read this release in: English , Hindi , Marathi