மத்திய அமைச்சரவை

கர்நாடகா மாநிலம் பாடூரில் உள்ள கேந்திரமான பெட்ரோல் இருப்பை வெளிநாடுகளில் இருந்து செயல்பட்டு வரும் தேசிய எண்ணெய் நிறுவனங்கள் நிரப்பிக் கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 08 NOV 2018 8:37PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை கர்நாடக மாநிலம் பாடூரில் உள்ள கேந்திரமான பெட்ரோல் சேமிப்புக் கிடங்கை வெளிநாடுகளில் இருந்து செயல்பட்டு வரும் தேசிய எண்ணெய் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள தனது ஒப்புதலை வழங்கியது. பாடூரில் உள்ள கேந்திர பெட்ரோல் சேமிப்புக் கிடங்கு என்பது பூமிக்குக் கீழே குகைப் பாறைகளில் சேமிப்பதாகும். இதன் மொத்த கொள்ளளவு 25 லட்சம் மெட்ரிக் டன்கள் ஆகும். தலா 6.25 லட்சம் மெட்ரிக் டன்களைக் கொண்ட நான்கு பகுதிகளாக இது அமைந்துள்ளது. மத்திய அரசின் பட்ஜெட் உதவியை சார்ந்திருப்பதைக் குறைக்கும் நோக்குடனேயே பொது-தனியார் கூட்டுச் செயல்பாட்டு முறையில் இந்த கையிருப்பை பயன்படுத்திக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

இந்திய கேந்திரமான பெட்ரோலிய சேமிப்பு நிறுவனம்  (ஐஎஸ்பிஆர்எல்) என்ற நிறுவனம் மொத்தம் 53 லட்சத்து 30 ஆயிரம் மெட்ரிக் டன்கள் கச்சா எண்ணெயை சேமித்து வைக்க பூமிக்கடியில் குகைபோன்ற அமைப்புகளை உருவாக்கி நடத்தி வருகிறது. இவை விசாகப்பட்டினம் (கொள்ளளவு 13 லட்சத்து 30ஆயிரம் மெட்ரிக் டன்கள்) மங்களூர் ( 15 லட்சம் மெட்ரிக் டன்கள்) பாடூர் (25 லட்சம் மெட்ரிக் டன்கள்) இந்த திட்ட்த்தின் முதல் கட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சேமிப்புக் கிடங்குகள் மூன்றும் சேர்ந்து 2017-18ஆம் ஆண்டின் நுகர்வு புள்ளிவிவரங்களின்படி இந்தியாவின் 95 நாட்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதாக இருக்கும். கூடுதலாக இதுபோன்று 65 லட்சம் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்குகளை ஒடிசா மாநிலத்தின் சண்டிகோல் மற்றும் கர்நாடகாவின் பாடூர் ஆகிய இடங்களில் உருவாக்கவும் 2018 ஜூனில் அரசு கொள்கையளவிலான ஒப்புதல் வழங்கியிருந்தது. இவை நிறைவேறும்போது இந்தியாவின் 11.5 நாள் பெட்ரோல் தேவைகளை நிறைவு செய்வதாக அவை இருக்கும்.

******************



(Release ID: 1552238) Visitor Counter : 172