தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறைகளில் பயிற்சி மற்றும் கல்வியைத் தொடர்வதற்காக இந்தியா-இத்தாலி இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 08 NOV 2018 8:44PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையில் பயிற்சி மற்றும் கல்விக்காக இந்தியா-இத்தாலி இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பலன்கள்:

உலக அளவில் நேர்த்தியான முறையில் பணியாற்றுவதை ஊக்குவிப்பதற்காக பயிற்சி மற்றும் கல்வி நடவடிக்கைகளை விரிவாக்கம் செய்ய இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை வழிவகை செய்ய உள்ளது.

  • பயிற்சி வழிமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து கூட்டு பயிற்சி வகுப்புகளை நடத்துதல்;
  • பல்வேறுபட்ட சமூக அமைப்புகளை கொண்டவர்களுக்கு புதிய பயிற்சி மாதிரிகளை உருவாக்குதல்;
  • தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பில் பல்வேறு கருத்துருக்களில் தனிப்பட்ட பயிற்சித் திட்டங்களுக்கு ஏற்பாடு செய்தல்;
  • பயிற்சி வழிமுறைகளை மதிப்பீடு செய்தல்;
  • பயிற்சி வகுப்புகளில், குறிப்பாக, தொழிலாளர் நிர்வாக விவகாரத்தில், சிறந்த நடைமுறைகளை பரிமாறிக் கொள்தல்; பயிற்சி முறைகளை உருவாக்குவதில் ஒவ்வொரு நாடும் மற்றொரு நாட்டுக்கு உதவிசெய்தல் மற்றும் கல்விப் பயணங்களுக்கு ஏற்பாடு செய்தல்
  • புலமை மற்றும் தகவல் பரிமாறிக் கொள்வதற்காக பயிற்றுநர்களை பரிமாறிக் கொள்தல்

மிகப்பெரும் மாற்றம்:

உலக அளவில் பணிச்சூழலில் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்வதற்காக இருதரப்பு கல்வி நிறுவனங்களும் தொழில்நுட்பத் திறனை வலுப்படுத்திக் கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும். வி.வி.கிரி தேசிய தொழிலாளர் கல்வி நிறுவனத்தை ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் முன்னணி பயிற்சி நிறுவனமாக மாறச் செய்யும்.

பின்னணி:

  1. நொய்டா-வில் உள்ள தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பான வி.வி.கிரி தேசிய தொழிலாளர் கல்வி நிறுவனத்துக்கும், துரின் பகுதியில் உள்ள சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சர்வதேச பயிற்சி மையத்துக்கும இடையே 2012-ம் ஆண்டில் புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்தானது. இந்த கல்வி நிறுவனங்களுக்கு இடையே தொழில் துறை ஒத்துழைப்பை முறைப்படுத்தும் நோக்கில், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
  2. துரின் பகுதியில் 1964-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சர்வதேச பயிற்சி மையம், சர்வதேச அளவில் தொழிலாளர்களுக்கு பல்வேறு கோணங்களில் பயிற்சி அளிப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. வேலைவாய்ப்பு, தொழிலாளர், மனிதவள மேம்பாடு, திறன் வளர்ப்பு ஆகியவற்றில் சர்வதேச வல்லுநர்களை அதிக அளவில் கொண்டுள்ள அமைப்பாக சர்வதேச பயிற்சி மையம் திகழ்கிறது.

*****

 



(Release ID: 1552198) Visitor Counter : 124


Read this release in: English , Telugu , Kannada