பிரதமர் அலுவலகம்

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு பெரும் ஆதரவு மற்றும் உதவித் திட்டத்தை நவம்பர் 02, 2018 அன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்

Posted On: 01 NOV 2018 8:26PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு பெரும் ஆதரவு மற்றும் மேம்பாட்டுக்கு தூண்டுதலை அளிக்கும் திட்டத்தை புதுதில்லி விஞ்ஞான்பவனில் நவம்பர் 02, 2018 அன்று துவக்கி வைக்கிறார்.

    தில்லியைத் தவிர இதே  நிகழ்வுகள் நாடு முழுவதும்  100 பகுதிகளில் நடக்கவிருக்கிறது.  இதில் மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.  இந்தப் பகுதிகள் அனைத்தும் தில்லியில் பிரதமர் நிகழ்த்தும் சிறப்பு உரையின் முக்கிய நிகழ்வுடன் இணைக்கப்படும்.  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு முக்கியமானதாகக் கருதப்படும் பல்வேறு  விவரங்கள் குறித்து பிரதமர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

   அண்மைக் காலமாக குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு மத்திய அரசு அதிக அளவில் முன்னுரிமை அளித்து வருகிறது.  நேரடியாக சென்று ஆதரவளிக்கும் நிகழ்வுகள் அடுத்த 100 நாட்களுக்கு நாடு முழுவதும் தொடரும். இத்துறைக்கான முயற்சிகளுக்கு பெரிய அளவிலான உந்து சக்தியை இந்த நிகழ்வு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்நிகழ்வின் முன்னேற்றம், ஒரு இயக்கத்தின் அடிப்படையில் அமல்படுத்தப்படும். மத்திய மற்றும் மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் இந்நிகழ்வு அமையும்.

     மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. அருண் ஜேட்லி குறு,  சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. கிரிராஜ் சிங் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்பார்கள்.

-----------
 



(Release ID: 1551736) Visitor Counter : 157