குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

12-வது ஆசிய - ஐரோப்பிய நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக குடியரசுத் துணைத் தலைவர் பெல்ஜியம் புறப்பட்டுச் சென்றார்

Posted On: 17 OCT 2018 12:52PM by PIB Chennai

ப்ரஸல்ஸில் இரண்டு நாட்கள் நடைபெறும் 12-வது ஆசிய- ஐரோப்பிய நாடுகளின் (ஆஸெம்) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு பெல்ஜியம் புறப்பட்டுச் சென்றார்.

“உலக சவால்களுக்காக உலகப் பங்களிப்பாளர்கள்” என்பது ஆஸெம் உச்சி மாநாட்டின் மையப் பொருளாகும்.

ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் இந்த உச்சி மாநாடு, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, சுற்றுலா ஆகிய துறைகளில் ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடையே பேச்சுவார்த்தைக்கும், ஒத்துழைப்புக்கும் மிக உயர்ந்த தளமாக கருதப்படுகிறது. பருவநிலை மாற்றம் தொடங்கி, சுற்றுலா வரையிலான விஷயங்களில் விரிவான விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த உச்சிமாநாட்டில், 51 நாடுகளின் அரசுத்  தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2017 ஆகஸ்ட் மாதம் குடியரசுத் துணைத் தலைவராக பொறுப்பேற்ற பின் அவர் முதல்முறையாக இந்த இருதரப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார்.

தொடக்க அமர்விலும் பங்கேற்கும் குடியரசுத் துணைத் தலைவர், பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடுவார். பெல்ஜியம் மன்னரை சந்திக்கவுள்ள அவர், உச்சிமாநாட்டிற்கிடையே ஆஸ்திரியா, போர்ச்சுகல், ஸ்விட்சர்லாந்து மற்றும் பிற நாடுகளின் அரசுத் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நிகழ்த்துவார்.

     ஆன்ட்வெர்ப் ஆளுகைப் பகுதியில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சிற்பத்திற்கு மலரஞ்சலி செலுத்தும் குடியரசுத் துணைத்தலைவர், வில்ரிஜ்க்கில் உள்ள  ஜெயின் கலாச்சார மையத்தில் இந்திய வம்சாவளியினரோடும் உரையாற்றுவார்.

     அக்டோபர் 21-ஆம் தேதி, குடியரசுத் துணைத் தலைவர் இந்தியா திரும்புவார்.

********



(Release ID: 1549961) Visitor Counter : 137


Read this release in: Marathi , English , Urdu