குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

மாணவர்கள் பட்டம் பெறுவதற்கு நாட்டுநலப் பணித்திட்டம் மற்றும் சாரண சாரணியர் இயக்கத்தில் சேவையாற்றுதல் கட்டாயமாக்கப்பட வேண்டும் : திரு தீனதயாளு நாயுடு நூற்றாண்டு கொண்டாட்டங்களில் குடியரசுத் துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு

இடுகை இடப்பட்ட நாள்: 09 OCT 2018 1:53PM by PIB Chennai

மாணவர்கள் பட்டம் பெறுவதற்கு ராணுவம் அல்லது  நாட்டு நலப்பணித்திட்டம் சாரண, சாரணியர் இயக்கம் ஆகிய தன்னார்வ அமைப்புகளில் சேவை செய்வது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று கல்வி நிறுவனங்களை குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கய்யா நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார்.

    திரு.தீனதயாளு நாயுடுவின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களின் நிறைவு நிகழ்ச்சியில் பேசிய அவர்,  இவரைப் போன்ற தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவரும், உறுதிப்பாடோடு கூடிய தேசியவாதியிடமிருந்து மாணவர்கள்  ஊக்கம் பெற வேண்டும் என்று தெரிவித்தார்.

   ஏழ்மை, எழுத்தறிவின்மை, வறுமை மற்றும் இதர சமூக தீமைகளை எதிர்கொள்ள இந்தியாவிற்கு உறுதியோடு  கூடிய தலைவர்கள் தேவை என்றார்.

    இவர்கள் மக்களின் தேவைகளையும், துன்பங்களையும் உணர்ந்திருப்பதோடு  அரசின் திட்டங்கள், ஏழைகளிலும் ஏழைகளாக உள்ளவர்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

  பருவநிலை மாற்றத்தின் தீமைகளை கோடிட்டு காட்டிய குடியரசுத் துணைத்தலைவர் இயற்கையை பாதுகாக்கவும், பராமரிக்கவும் ஆக்கப்பூர்வமான ஒரு திட்டம் தேவை என்றார்.  நீராதாரத்தை பாதுகாக்க கிராம சமுதாயத்திற்கு அதிகாரம் வழங்குவதற்கு, அரசு, பொதுமக்களின் பிரதிநிதிகள் மற்றும் சாரண சாரணியர் இயக்கத்தில் உள்ள இளைஞர்கள் பணி புரிய வேண்டும் என்றார்.

-----

 


(வெளியீட்டு அடையாள எண்: 1549067) வருகையாளர் எண்ணிக்கை : 174
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Malayalam