விவசாயத்துறை அமைச்சகம்

மண்வளத்தை மேம்படுத்துவதன் மூலமாக இயற்கை வேளாண்மையைக் கொண்டு பேணத்தக்க உற்பத்தியில் சாதனை படைக்கலாம்: மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு.ராதா மோகன் சிங்

Posted On: 08 OCT 2018 11:31AM by PIB Chennai

   உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவில் உள்ள பண்டிட் தீன்தயாள் தாமில் இயற்கை வேளாண்மைக்கான தேசிய மையம் ஏற்பாடு செய்திருந்த ஜெய்விக் விவசாய மாநாட்டில் பேசிய மத்திய  வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு ராதா  மோகன் சிங், இயற்கை வேளாண்மை ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதோடு விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தை வழங்கும் திறன் கொண்டது என்றார்.

     2015-16-ஆம் ஆண்டில் மோடி அரசு பரம்பரகத் கிருஷி விகாஸ் யோஜனா என்கின்ற பாரம்பரிய விவசாய நலத்திட்டத்திற்கான முன்முயற்சியைத் தொடங்கியதாகக்  கூறினார்.

   இந்தியாவின் இயற்கை வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு   உலகச் சந்தையில் அதிக வாய்ப்புகள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

    மோடி அரசு இயற்கை வேளாண்மையை முன்னெடுத்துச் செல்வதில் உறுதிப்பாட்டோடு இருப்பதாக கூறிய அமைச்சர், நாட்டில் இயற்கை வேளாண்மையை  வளர்ப்பதில் விவசாயிகளுக்கு தேவையான உதவி வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

-----



(Release ID: 1548879) Visitor Counter : 158


Read this release in: English , Urdu , Marathi , Malayalam