பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
நிறுவனங்களுக்கு இடையிலான போட்டிகளை நெறிமுறைப்படுத்தும் போட்டிச் சட்டத்தை ஆய்வு செய்வதற்கு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது
Posted On:
30 SEP 2018 12:27PM by PIB Chennai
வலுவான பொருளாதார அடிப்படையின் தேவைக்கேற்ப சட்டங்களை மாற்றி அமைக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு நிறுவனங்களுக்கு இடையிலான போட்டிகளை நெறிமுறைப்படுத்தும் போட்டிச் சட்டத்தை ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைத்துள்ளது.
கம்பெனி விவகாரங்கள் அமைச்சக செயலாளர் இதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அமைச்சகத்தின் இணை செயலாளர் உறுப்பினர் செயலாளராக செயல்படுவார். இந்திய நிறுவனங்களுக்கு இடையிலான போட்டிகளை நெறிமுறைப்படுத்தும் ஆணையத்தின் தலைவர், கம்பெனி கலைப்பு மற்றும் திவால் வாரியத்தின் தலைவர் ஆகியோர் இதன் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தொழிலதிபர்கள் மூன்று பேரும் பொருளாதாரக் கல்வி பேராசிரியர்கள் இருவரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குழு கீழ்க்கண்டவை குறித்து விவாதித்து முடிவெடுக்கும்.
i. நிறுவனங்களுக்கு இடையிலான போட்டிகளை நெறிமுறைப்படுத்தும் போட்டிச் சட்டம் / விதிகள் / நடைமுறைகள் ஆகியவற்றை மறுஆய்வு செய்து தேவைப்பட்டால் மாற்றங்களை கொண்டு வருதல்.
ii. நிறுவனங்களுக்கு இடையிலான போட்டிகளை நெறிமுறைப்படுத்தும் துறையில் சர்வதேச அளவில் சிறந்த நடைமுறைகளை ஆராய்ந்து பன்னாட்டு போட்டி பிரச்சனைகளை கையாள வழிவகை காணுதல்.
iii. நிறுவனங்களுக்கு இடையிலான போட்டிகளை நெறிமுறைப்படுத்தும் போட்டிச் சட்டத்தின் அம்சங்களை கொண்டுள்ள இதர கொள்கைகள் நெறிமுறைகளை ஆராய்தல்.
இந்தக் குழு மூன்று மாத காலத்தில் பணியை நிறைவு செய்து அறிக்கை அளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
================
(Release ID: 1548019)
Visitor Counter : 165