கலாசாரத்துறை அமைச்சகம்
குவாலியர் ராணி விஜய ராஜே சிந்தியாவின் நூற்றாண்டு விழா அரசு விழாவாக கொண்டாடப்படவிருக்கிறது.
இவ்வருடம் அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி தொடங்கி அடுத்த வருடம் அக்டோபர் மாதம் 11 ஆம்தேதி வரை ஒரு வருட காலத்திற்கு இவ்விழா கொண்டாடப்படும்.
प्रविष्टि तिथि:
27 SEP 2018 10:14AM by PIB Chennai
குவாலியர் ராணி விஜய ராஜே சிந்தியாவின் நூற்றாண்டு விழா அடுத்த மாதம் 11 ஆம் தேதி தொடங்கி, அடுத்த வருடம் அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி வரை கொண்டாட இந்திய அரசு முடிவு செய்துள்ளது. ஓராண்டு காலம் நடைபெறும் இக்கொண்டாட்டங்களில் இடம் பெறும் நிகழ்ச்சிகள் குறித்து முடிவு செய்ய உள்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் 12 உறுப்பினர்களை கொண்ட தேசிய செயல்பாட்டுக்குழு அமைக்கப்பட்டு இருக்கிறது.
குவாலியரின் ராஜமாதா என்று பிரபலமாக அழைக்கப்படும் திருமதி விஜய ராஜே சிந்தியா மத்தியப்பிரதேச மாநிலம் சாகரில் 1919 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி அன்று பிறந்தார். கல்வி பயின்ற பிறகு அவர், சுதந்திரப் இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட திருமதி விஜய ராஜே சிந்தியா நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
திருமதி விஜய ராஜே சிந்தியா 1957 முதல் 1998 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். பெண்களுக்கு அதிக அதிகாரம் வழங்குவது உட்பட பல்வேறு சமூகப் பணிகளில் பங்கேற்றார் என்பதோடு, கல்வி மூலமாக பெண்களின் வாழ்க்கை முறையை உயர்த்துவதை நோக்கமாக கொண்ட பல்வேறு அமைப்புகளில் அவர் பணியாற்றினார். திருமதி விஜய ராஜே சிந்தியா 2001 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் தேதி அன்று காலமானார்.
*********
(रिलीज़ आईडी: 1547635)
आगंतुक पटल : 256