நித்தி ஆயோக்

சமூகம், பொருளாதாரம், தொழில்துறை மற்றும் பிராந்திய வளர்ச்சி திட்டங்களுக்காக நித்தி ஆயாக் மற்றும் ரஷிய பொருளாதார வளர்ச்சி அமைச்சகம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 26 SEP 2018 4:12PM by PIB Chennai

சமூகம், பொருளாதாரம், தொழில்துறை மற்றும் பிராந்திய வளர்ச்சி திட்டங்களுக்காக நித்தி ஆயாக் மற்றும் ரஷிய பொருளாதார வளர்ச்சி அமைச்சகம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சமூகம், பொருளாதாரம், தொழில்துறை மற்றும் பிராந்திய வளர்ச்சி திட்டங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு மற்றும் உத்திகளை உருவாக்குதல் மற்றும் நடைமுறைபடுத்துவதில் ஒத்துழைப்பு உறவுக்கான சாத்திய கூறுகளை கண்டறிதலே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும். பலங்கள், சந்தை நிலவரம், தொழில்நுட்பங்கள், கொள்கைகள் போன்றவற்றை ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளும் சூழலை இந்த ஒப்பந்த உருவாக்கும்.

கீழ்கண்ட துறைகளில் உள்ள ஒத்துழைப்பு இந்த ஒப்பந்தத்தின் கீழ் வரும்:

  1. இருத்தரப்பிற்குமான பரஸ்பர ஆர்வம் உள்ள பிரச்சினைகளில் கூட்டு ஆய்வு திட்டங்களை மேற்கொள்ளுதல்;
  2. அரசு உத்திகள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் உட்பட இருத்தரப்பிற்குமான பரஸ்பர ஆர்வம் உள்ள பிரச்சினைகளில் உள்ள தகவல்கள் மற்றும் ஆய்வு பணிகளின் பரிமாற்றம்.
  3. கூட்டு நடவடிக்கைகளில் இருதரப்பிலும் உள்ள வல்லுநர்கள் பங்கேற்றல்.
  4. ஒப்புக் கொண்ட குறிக்கோள் தொடர்பான கருத்தரங்குகள், மாநாடுகள் மற்றும் பிற கூட்டங்களை ஏற்பாடுசெய்தல்
  5. இருத்தரப்பும் பரஸ்பரமாக ஒப்புக்கொண்ட பிற ஒத்துழைப்புகள்.

*****



(Release ID: 1547383) Visitor Counter : 179


Read this release in: English , Telugu , Kannada