நிதி அமைச்சகம்
அனைவரையும் உள்ளடக்கிய நிதிச் சேவையின் ஒரு பகுதியாக “ஜன்தன் தர்ஷக்” என்ற செல்பேசி செயலியை நிதியமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது
நாட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிதிச் சேவை மையம் எந்த இடத்தில் உள்ளது என்பதை சாமானிய மக்களும் தொடு புள்ளி மூலம் அறிந்துகொள்ள இந்த செல்பேசி செயலி உதவும்
இடுகை இடப்பட்ட நாள்:
26 SEP 2018 11:23AM by PIB Chennai
அனைவரையும் உள்ளடக்கிய நிதிச் சேவையின் ஒரு பகுதியாக மத்திய நிதியமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறையும், தேசிய தகவல் மையமும் இணைந்து “ஜன்தன் தர்ஷக்” எனும் செல்பேசி செயலியை உருவாக்கியுள்ளன. பெயருக்கேற்றாற்போல், நாட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிதிச் சேவை மையம் எந்த இடத்தில் உள்ளது என்பதை சாமானிய மக்களும் தொடு புள்ளி மூலம் அறிந்துகொள்ள இந்த செல்பேசி செயலி செயல்படும்.
வங்கிகளுக்கு இடையே சேவைகள் பரிமாறப்படும் இந்த யுகத்தில் பல வங்கிளுக்கும், நிதிச் சேவை வழங்குவோருக்கும் இடத்தை அறியும் செயலிகள் பொதுவான அம்சத்தைக் கொண்டிருக்கும். ஆனால், ஜன்தன் தர்ஷக் எனும் இந்த செயலி குடிமக்களை மையப்படுத்திய தனித்துவம் கொண்ட செயலியாகும். தொடுபுள்ளிகள் மூலம் நிதிச் சேவை வழங்கும் வங்கிகள், அஞ்சலகங்கள், பொது சேவை மையங்கள் போன்ற அனைத்து சேவை வழங்குவோரையும் அறிந்துகொள்ள முடியும். சாமானிய மக்களின் தேவைகள் மற்றும் வசதிக்கேற்ப இந்த சேவைகள் கிடைக்கும்.
சுமார் 5 லட்சம் நிதி நிறுவன தொடுபுள்ளிகள் (வங்கி கிளைகள், ஏ.டி.எம்.-கள், அஞ்சலகங்கள்) இந்த செயலியின் வரைபடத்தில் இடம்பெற்றுள்ளன. 01.12.2018-க்குள் 1.35 லட்சம் வங்கி முகவர்கள் பணி அமர்த்தப்படுவார்கள். இந்த செயலியின் சில முக்கிய அம்சங்கள் கீழேத் தரப்பட்டுள்ளன.
· தற்போதைய அமைவிடத்தின் அடிப்படையில் (வங்கிக் கிளைகள்/ஏ.டி.எம்./ அஞ்சலகங்கள்) அருகில் உள்ள நிதிச் சேவை மையத்தை தொடுபுள்ளிகளால் கண்டறியலாம்.
· இடத்தின் பெயரைக் கொண்டு தேடலாம்.
· குரல் வழியாக இடத்தின் பெயரைக் குறிப்பிட்டும் தேடலாம்.
· வங்கிக் கிளைகளின் தொலைபேசி எண்கள் செயலியில் இடம்பெற்றிருக்கும். ஒருங்கிணைந்த அழைப்புக்கான எண் பொறித்த பொத்தான் வசதியும் உள்ளது.
· நிதிச் சேவை தொடுபுள்ளி மூலமாக தேவையான தகவலை தற்காலப்படுத்துவதற்கு பயன்பாட்டாளரின் கருத்து, சம்பந்தப்பட்ட வங்கிக்கு நேரடியாக செல்லும்.
**********
(வெளியீட்டு அடையாள எண்: 1547276)
வருகையாளர் எண்ணிக்கை : 285