பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

இந்தூர்(மங்கலியாகாவ்) – புட்னி வரையிலான (205.5 கி.மீ) புதிய ரயில் பாதை மின்மயத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 19 SEP 2018 1:27PM by PIB Chennai

புட்னி – இந்தூர் (மங்கலியாகாவ்) இடையே சுமார் 205.5 கிலோமீட்டர்  தூரத்திற்கு புதிய ரயில் பாதை அமைக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்திற்கான செலவு மதிப்பீடு ரூ.3261.82 கோடியாகும்.

   பின்தங்கிய பகுதியின் மேம்பாடு மற்றும் இந்தூரிலிருந்து ஜபல்பூருக்கும், இந்தூரிலிருந்து மும்பைக்கும் மற்றும் தென்பகுதிகளுக்கும் பயண நேரத்தைக் குறைப்பதும், இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.  போபால் வழியாக தற்போதுள்ள ரயில் பாதையோடு ஒப்பிடும்போது,  இந்தத் திட்டத்தால் 68 கி.மீ. தூரம் குறையும். இந்தப் பகுதியில் பொது மக்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் சிறந்த போக்குவரத்து வசதிகளை இந்தத் திட்டம் அளிக்கும். மேலும் கட்டுமானக் காலத்தில் சுமார் 49.32 லட்சம் மனித நாட்கள் நேரடி வேலைவாய்ப்பு உருவாகும்.

*********



(Release ID: 1546681) Visitor Counter : 98


Read this release in: English , Marathi