பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

ஆஷா திட்ட பலன்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 19 SEP 2018 1:25PM by PIB Chennai

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஆஷா திட்ட பலன்களுக்கு  பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பலன்கள் அக்டோபர் 2018 (நவம்பர் 2018-ல் அளிக்கப்படும்) முதல் நடைமுறைக்கு வரும். இதில் கீழ்க்கண்ட இரண்டு கூறுகள் உண்டு:

  1. மத்திய அரசு செயல்படுத்திவரும் பிரதமர் ஆயள் காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதமர் விபத்து காப்பீட்டு திட்டம் ஆகிய சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கான தகுதி உள்ள ஆஷா பணியாளர்கள் மற்றும் ஆஷா உதவியாளர்கள் இந்த திட்டங்களில் பதிவுசெய்யப்படுவர்.
  2. தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் ஆஷா பணியாளர்களுக்கு வழகப்படும் ஊக்கத்தொகை மாதத்திற்கு ரூ. 1000/-ல் இருந்து ரூ. 2000-ஆக உயர்த்தப்படும்.

2018-19 மற்றும் 2019-20 ஆண்டுகளில் இந்த பலன்களை செயல்படுத்த தேவையான செலவினம் (மத்திய அரசின் நிதி) ரூ. 1224.97 கோடியாகும்.

இதன் மூலம் பயனடைவோரின் எண்ணிக்கை:

  • சுமார் ஒரு கோடியே 6 லட்சத்து 36,701 ஆஷா பணியாளர்கள் மற்றும் ஆஷா உதவியாளர்கள் பிரதமர் ஆயள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுவர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
  • சுமார் 9 லட்சத்து 57 ஆயிரத்து 303 ஆஷா பணியாளர்கள் மற்றும் ஆஷா உதவியாளர்கள் பிரதமர் விபத்து காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுவர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
  • சுமார் 10 லட்சத்து 22 ஆயிரத்து 265 பேர் ஆஷா பணியாளர்களுக்கு வழக்கமான செயல்பாடுகளுக்கு தற்போது அளித்துவரும் ரூ. 1000/-, ரூ. 2000/- ஆக உயர்த்தி அளிக்கப்படும்.

இவர்களுக்கு, பிரதமர் ஆயள் காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதமர் விபத்து காப்பீட்டு திட்டத்திற்கான வருடாந்திர தவணை கட்டணத்தை மத்திய அரசு வழங்கும். 

இலக்குகள்:

  • மார்ச் 31, 2019-குள் – 65 சதவீத ஆஷா பணியாளர்கள் மற்றும் ஆஷா உதவியாளர்கள் பிரதமர் ஆயள் காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதமர் விபத்து காப்பீட்டு திட்டம் ஆகிய சமூக பாதுகாப்பு திட்டங்களில் பதிவுசெய்யப்படுவர்.
  • அக்டோபர் 30, 2019-குள் – 100 சதவீத ஆஷா பணியாளர்கள் மற்றும் ஆஷா உதவியாளர்கள் பிரதமர் ஆயள் காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதமர் விபத்து காப்பீட்டு திட்டம் ஆகிய சமூக பாதுகாப்பு திட்டங்களில் பதிவுசெய்யப்படுவர்.
  • ரூ. 1000-ல் இருந்து ரூ. 2000-ஆக உயர்த்தப்பட்டுள்ள வழக்கமான செயல்பாடுகளுக்காக ஆஷா பணியாளர்களுக்கு அளிக்கப்படும் ஊக்கத்தொகை அக்டோபர் 2018-ல் (நவம்பர் 2018-ல் வழகப்படும் இருந்து செயல்பாட்டிற்கு வரும்.

******



(Release ID: 1546672) Visitor Counter : 436


Read this release in: English , Marathi , Malayalam