கலாசாரத்துறை அமைச்சகம்

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் இலச்சினை மற்றும் இணையப்பக்கத்தை வெளியிட்டார்

Posted On: 18 SEP 2018 4:17PM by PIB Chennai

தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த ஆண்டினை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் இலச்சினை மற்றும் இணையப் பக்கத்தை இன்று (18.09.2018) குடியரசுத் தலைவர் மாளிகையில் வெளியிட்டார். இந்த இலச்சினை மத்திய கலாசாரம் (தனிப்பொறுப்பு) மற்றும் சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துறை இணையமைச்சர்  டாக்டர் மகேஷ் சர்மா, கலாசாரத் துறை செயலாளர் திரு. அருண் கோயல் ஆகியோர் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

   இந்த இலச்சினை பலரின் ஆலோசனை மூலம் பெறப்பட்டது. இந்த இலச்சினை ரயில் வண்டிகள்,  மெட்ரோ ரயில், ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானங்கள், அரசு போக்குவரத்து நிறுவனங்களின் பேருந்துகள், அரசு இணையதளங்கள், மின்னஞ்சல்கள், அரசு எழுதுபொருள்கள், நாட்காட்டி, நாட்குறிப்பு, அரசு விளம்பரங்கள், பிரச்சார சாதனங்கள் போன்றவற்றில் இடம்பெறும். இந்த இலச்சினை பொதுத் துறை நிறுவனங்கள், துணை / இணைக்கப்பட்ட அலுவலகங்கள், மத்திய அரசின் துறை மற்றும் அமைச்சகத்தின்கீழ் உள்ள சுயாட்சி அமைப்புகள் ஆகியவற்றிலும் பயன்படுத்தப்படும்.

  இந்த இலச்சினையின் வண்ண வழிகாட்டுதலுடன் வடிவமைப்புகளை கீழ்காணும் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

https://gandhi.gov.in/download.html

log-2.png
 

  மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழாவுக்கான இலச்சினை

************


(Release ID: 1546612)
Read this release in: English , Marathi , Malayalam