மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

மின்னணுவியல் தொழில்நுட்பட அமைச்சகத்தின் சுகாதார சானிடரி நாப்கின் விநியோக எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

Posted On: 18 SEP 2018 2:52PM by PIB Chennai

கிராமப்பகுதிகளில் வளர் இளம் பெண்கள், சிறுமியர் ஆகியோரின் வீடுகளுக்கு அருகே குறைந்த விலையில், எளிதாக சானிடரி நாப்கின் கிடைக்கச் செய்வதற்கான நிலையான அமைப்புகளை உருவாக்க பொது சேவை மையங்கள் தங்களது மகளிர் ஆரோக்கியம் மற்றும் சுகாதார திட்டமான “ஸ்திரீ சுவாபிமான்” மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சானிடரி நாப்கின்களை தயாரித்து சந்தைப்படுத்தும் மகளிர் தொழில் முனைவோரின், விழிப்புணர்வு மற்றும் நேரடி நடவடிக்கை மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

  “ஸ்திரீ சுவாபிமான் திட்டத்தின் கீழ் மகளிர் தொழில் முனைவோர் தாங்கள் சமுதாயத்தின் அதிகாரம் பெற்ற பெண்களுக்கு அடையாளச் சின்னங்களாக விளங்குகிறார்கள். இதுவரை 278 சானிடரி நாப்கின் உற்பத்தி குறு  தொழில் பிரிவுகள், மகளிரின் நிகர்நிலை கற்றல் சூழலில்,  வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சானிடரி நாப்கின்கள் விலை மலிவானவை. மேலும் மக்கிப் போகக்கூடியவை என்பதால் சுற்றுச் சூழலுக்கு உகந்தவை.

            மகளிர் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பெண்கள் கழிவறைகளில், சானிடரி நாப்கின் விநியோக எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதனால் அமைச்சகத்தில் பணி புரியும் பெண் ஊழியர்கள் பயனடைகிறார்கள்.  இதனையடுத்து இத்தகைய  விநியோக எந்திரங்கள் இதர பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் நிறுவப்படும்.

-----



(Release ID: 1546532) Visitor Counter : 95


Read this release in: English , Urdu