பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
இந்திய ரயில்வேயில் மின்மயமாக்கப்படாமல் எஞ்சியுள்ள அகல ரயில்பாதைகளை மின்மயமாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
प्रविष्टि तिथि:
12 SEP 2018 4:09PM by PIB Chennai
இந்திய ரயில்வேயில் மின்மயமாக்கப்படாமல் எஞ்சியுள்ள அகல ரயில்பாதைகளை மின்மயமாக்க பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி 108 பிரிவுகளில் 13,675 கிலோ மீட்டர் தூரமுள்ள ரயில்பாதைகள் ரூ.12,134.57 கோடி செலவில் மின்மயமாக்கப்படும். இந்தப் பணிகள் 2021-22 வாக்கில் முடிவடையக்கூடும்.
· இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.13,510 கோடி எரிபொருள் செலவு மிச்சமாகும். இந்தப் பிரிவுகளில் ரயில்பாதைகள் மின்மயமாவதால் ஆண்டுக்கு ரூ.3,973 கோடி மிச்சமாகும்.
· ஆயிரம் கிலோ மீட்டருக்கு ரூ.32.84 என்ற டீசல் என்ஜின்
பராமரிப்புச் செலவோடு ஒப்பிடுகையில் மின்சார என்ஜின் பராமரிப்பு செலவு ஆயிரம் கிலோமீட்டருக்கு ரூ.16.45 ஆக குறையும்.
· கட்டுமான பணிகளின் போது சுமார் 20.4 கோடி மனித நாட்களுக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்கும்
------
(रिलीज़ आईडी: 1546054)
आगंतुक पटल : 205