பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்

பட்டியல் இடப்படாத பொது நிறுவனங்கள் தங்கள் பங்குகள் அனைத்தையும் டிமேட் வடிவத்தில்தான் வெளியிட வேண்டும் மற்றும் மாற்றித்தர வேண்டும் என்று கம்பெனி விவகாரங்கள் அமைச்சகம் அறிவித்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 11 SEP 2018 10:17AM by PIB Chennai

பட்டியல் இடப்படாத பொது நிறுவனங்கள் 2018 அக்டோபர் 2-ம் தேதி முதல் தங்கள் பங்குகள் அனைத்தையும் டிமேட் வடிவத்தில்தான் வெளியிட வேண்டும் மற்றும் மாற்றித்தர வேண்டும் என்று கம்பெனி விவகாரங்கள் அமைச்சகம் அறிவித்துள்ளது.  கம்பெனிகள் துறையில் வெளிப்படைத்தன்மை, முதலீட்டாளர் பாதுகாப்பு, நல்ல ஆளுகை ஆகியவற்றை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதற்கு ஏற்றவாறு விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

கம்பெனி விவகாரங்கள் அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, தற்போது  பட்டியல் இடப்படாத பொது நிறுவனங்களுக்கும், டிமேட் செய்யப்பட்ட பங்குகளால் கிடைக்கும் பெரிய பலன்களில் கீழ்க்கண்டவை அடங்கும்.

i. காகித வடிவத்தில் உள்ள பங்கு பத்திரங்கள் தொலைந்து போதல், திருடுபோதல், சேதமடைதல், மோசடிக்கு உள்ளாகுதல் ஆகிய ஆபத்துகளிலிருந்து தவிர்க்கப்படுகின்றன.

ii. வெளிப்படைத் தன்மையை அதிகரிப்பதுடன், பினாமி பங்கு பத்திரங்கள் வைத்திருத்தல், பின்தேதியிட்டு பங்குகள் வெளியிடுதல் போன்ற முறைகேடுகளையும் தவிர்த்து, கம்பெனி ஆளுகை அமைப்பில் மேம்பாடு கொண்டுவருதல்.

iii. பங்குகளை மாற்றித்தரும்போது, முத்திரை வரி செலுத்துவதிலிருந்து விலக்கு.

iv. பங்குகளை மாற்றித்தருதல், அடமானம் வைத்தல் ஆகியவற்றில் எளிமை.

டெபாசிட்டரிகள், பங்கு பரிவர்த்தனை முகவர்கள் ஆகியோருடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, பட்டியல் இடப்படாத பொது கம்பெனிகள், தங்களது பங்குகளை டிமேட் வடிவத்தில் மாற்றியமைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இத்தகைய டிமேட் நடவடிக்கைகளில் குறைகள் ஏதும் இருந்தால், அவற்றை முதலீட்டாளர்   கல்வி மற்றும் பாதுகாப்பு நித்திய ஆணையத்தின் மூலம் நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும், இந்த நடவடிக்கை நாட்டின் கம்பெனி ஆளுகையை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.


(வெளியீட்டு அடையாள எண்: 1545657) வருகையாளர் எண்ணிக்கை : 218
இந்த வெளியீட்டை படிக்க: हिन्दी , English , Marathi , Malayalam