நித்தி ஆயோக்

மூவ்: இந்தியாவின் முதலாவது உலகளாவிய நகர்வு உச்சிமாநாடு 2018. செப்டம்பர் 7ல் பிரதமர் தொடங்கி வைக்கிறார்

Posted On: 06 SEP 2018 3:05PM by PIB Chennai

நிதி ஆயோக் ஏற்பாட்டில் செப்டம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் புதுதில்லியில் நடைபெறும் இந்தியாவின் முதலாவது உலகளாவிய நகர்வு உச்சிமாநாடான மூவ் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். நகர்வின் பல்வேறு அம்சங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் பல்வேறு மேடைகளில் நகர்வை விரிவாக்குவதில் ஈடுபட்டுள்ள சம்பந்தப்பட்டவர்களை ஒன்றாக கொண்டு வருவதும் இந்த உச்சிமாநாட்டின் நோக்கமாகும். அரசுகளுக்கு இடையிலான பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்வியாளர்கள், இந்தியாவில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் கொள்கை சிந்தனையாளர்கள், ஓ.இ.எம்.கள், பேட்டரி உற்பத்தியாளர்கள், சார்ஜிங் உள்கட்டமைப்பு அளிப்பவர்கள், தொழில்நுட்ப தீர்வு அளிப்போர் ஆகியோர் இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு அடுத்த இரண்டு நாள்களுக்கு நகர்வை மேம்படுத்துவது குறித்த தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.  

இந்த உச்சிமாநாட்டுக்கு முன்னதாக நிதி ஆயோக் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் குமார் மற்றும் முதன்மை செயல் அலுவலர் திரு. அமிதாப் காந்த் ஆகியோர் தலைநகரில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

முதன்முறையாக நடத்தப்படும் இந்த உலகளாவிய நகர்வு உச்சிமாநாட்டில் உலகம் முழுவதிலுமிருந்து அரசு, தொழில்துறை, ஆராய்ச்சி அமைப்புகள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் மக்கள் சமூகங்களில் இருந்து 2200க்கும் அதிகமான தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த உச்சிமாநாட்டிற்கு சில மாதங்கள் முன்னதாகவே மாநிலங்களுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டன. நிதி ஆயோக்கின் குழுவினருடன் மாநில செயற்குழுக்கள் ஆலோனைகளை மேற்கொண்டன. இதில் மாநிலம் சம்பந்தப்பட்ட குறிப்பிட்ட பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு எதிர்காலத்திற்கான கசிவு அற்ற மற்றும் உள்ளடக்கிய நகர்வு செயல் திட்டம் உருவாக்கப்பட்டு பகிர்ந்து கொள்ளப்பட்டது.

அமர்வுகள் மற்றும் உரையாற்றுவோர்:

இந்த உச்சிமாநாட்டை பிரதமர் தொடங்கி வைக்கிறார். தொடக்க விழா அமர்வில் 11 உலகளாவிய முதன்மை செயல் அதிகாரிகள் 12 முதன்மை செயல் அதிகாகரிகளுடன் குழு ஆலோசனைகளில் ஈடுபடுவார்கள். சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, ரயில்வே துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல், சட்டம், நீதி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு. ரவி சங்கர் பிரசாத், பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு. ஹர்தீப் சிங் புரி, உள்நாட்டு விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் திரு. ஜெயந்த் சின்ஹா ஆகியோர் பல்வேறு அமர்வுகளில் உரையாற்றுகின்றனர்.

உச்சிமாநாட்டின் நோக்கங்கள்:

1, சொத்து பயன்பாட்டை அதிகரிப்பது 2. முழுமையான மின்மயம் மற்றும் மாற்று எரிபொருள் 3. பொது போக்குவரத்தை மறு உருவாக்கம் செய்வது 4. சரக்கு போக்குவரத்து 5. தகவல் பகுப்பாய்வு மற்றும் நகர்வு

பங்கேற்போர்:

30க்கும் மேற்பட்ட முதன்மை செயல் அலுவலர்கள், 100க்கும் மேற்பட்ட மாநில அதிகாரிகள், 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட இந்திய முதன்மை செயல் அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்கின்றனர். அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, நியூசிலாந்து, ஆஸ்திரியா, ஜெர்மனி, பிரேசில் உள்ளிட்ட நாடுகளின் தூதரகங்கள் மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த சர்வதேச பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

மேலும் விவரங்கள் பெற: pib.nic.in

*****



(Release ID: 1545240) Visitor Counter : 177