பல்கேரியாவுடனான பொருளாதார உறவுகளை குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்த இந்தியா ஆர்வத்துடன் இருப்பதாகவும் குடியரசுத் தலைவர் கூறினார். தகவல் தொழில்நுட்பம், மருந்துப் பொருட்கள், தொழில்நுட்பம், உணவு பத்ப்படுத்ட்துதல் உள்ளிட்ட துறைகளில் பல்கேரிய சிறப்பான செயல்பாடுகளை கொண்டுள்ளது. கூட்டு நிறுவனங்களை ஏற்படுத்தி பல்கேரியாவில் முதலீடு செய்ய இந்திய நிறுவனங்கள் வலிமையான விருப்பம் கொண்ட துறைகள் உள்ளன.
நமது பாதுகாப்பு ஒத்துழைப்பு நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக குடியரசுத் தலைவர் தெரிவித்தார். பல்கேரியாவின் அறிவாற்றல் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ள இந்தியா ஆர்வத்துடன் உள்ளது. மேக் இன் இந்தியா முயற்சியின் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு வருகை தந்து தயாரிக்க பல்கேரிய நிறுவனங்களுக்கு இந்தியா அழைப்பு விடுக்கிறது.
பின்னர் சோஃபியாவில் உள்ள் சவூத் பார்க்கில் மகாத்மா காந்தியின் சிலையை பல்கேரிய அதிபருடன் இணைந்து குடியரசு தலைவர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், சிறப்பு தினமான தேசிய ஒருங்கிணைப்பு தினத்தில் மகாத்மா காந்திக்கு நிலைத்த இல்லம் ஒன்றை அளித்தமைக்காக தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக கூறினார். மனித குலத்திற்கு சேவையாற்ற தனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அர்ப்பணித்தவருக்கு மேற்கொள்ளப்படும் அர்த்தமுள்ள அஞ்சலியாகும் இது. முரண்பாடு, பொறுப்பற்ற வன்முறை மற்றும் பாரபட்சம் கொண்ட இந்த தருணத்தில் அவரது சிந்தனைகள் மற்றும் போதனைகள் மிகவும் ஏற்றவையாகும்.
கூடுதல் விவரங்களுக்கு: pib.nic.in
***