தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

இந்திய அஞ்சலக பணப்பட்டுவாடா வங்கி மூலம் வீடு நோக்கி வரும் வங்கி சேவைகள்; திரு. மனோஜ் சின்ஹா

இடுகை இடப்பட்ட நாள்: 29 AUG 2018 3:07PM by PIB Chennai

இந்திய அஞ்சலக பணப்பட்டுவாடா வங்கி தொடங்கப்படுவது நாட்டில் வங்கித் துறையின் தாக்கம் மற்றும் அணுக்கத்தை குறிப்பிடத்தக்க அளவுக்கு விரிவுபடுத்தும் என மத்திய தொடர்புத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.

அஞ்சலகங்கள் மூலம் வங்கிச் சேவைகளை மக்களுக்கு அளிக்கும் இந்திய அஞ்சலக பணப்பட்டுவாடா வங்கியை வரும் செப்டம்பர் 1ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

இதற்கான திட்ட மதிப்பீட்டை திருத்தி அமைக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திரு. மனோஜ் சின்ஹா, இதுவரை நிதி சேவைகளை அணுகாத, வங்கிச் சேவைகளை பெறாதவர்களுக்கு அஞ்சல்காரர்கள் வங்கியாளர்களாக மாறுவார்கள் என்றார். இதன் மூலம் வங்கி கிளைகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்து 2.90 லட்சமாக உயரும் என்றும் அவர் கூறினார். வங்கிச் சேவைகள் சாமானிய மனிதர்களின் வீட்டு வாசல்களுக்கு சென்று அளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

புதுதில்லியில் நடைபெறும் விழாவில் இந்த திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார். அதேவேளையில் நாடுமுழுவதும் 650 இந்திய அஞ்சலக கிளைகளிலும் மேலும் 3,250 அஞ்சலக முனையங்களிலும் பணப்பட்டுவாடா வங்கி செயல்படத் தொடங்கும்.


(வெளியீட்டு அடையாள எண்: 1544384) வருகையாளர் எண்ணிக்கை : 187
இந்த வெளியீட்டை படிக்க: English , Marathi , हिन्दी , Bengali