பிரதமர் அலுவலகம்

ருவாண்டாவில் உள்ள இந்திய மக்களிடையே பிரதமர் ஆற்றிய உரை

प्रविष्टि तिथि: 23 JUL 2018 8:02PM by PIB Chennai

வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?

நமது ஹைகமிஷனர் சிறிது நேரம் முன்பு பிரதமர் உங்களுக்காக நேரத்தை ஒதுக்க இருக்கிறார்என்று அறிவித்துள்ளார். உண்மையில் எனக்காக நீங்கள்தான் நேரத்தை ஒதுக்கியிருக்கிறீர்கள். காரணம், இது நீங்கள் விழித்திருக்கும் நேரமல்ல. இந்த நேரத்தில் இரவு உணவை முடித்துவிட்டு, உறங்குவதற்குத் தயாராக இருந்திருப்பீர்கள். ஆனால், இந்த இரவு நேரத்தில் எனக்காக விழித்திருக்கிறீர்கள். எனவே, உங்களது அன்புக்கும் ஆசிகளுக்கும் நான் மிகவும் நன்றியுடையவனாக இருக்கிறேன்.

ஒரு கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியை, மைதானத்திற்கே சென்று நேரில் காணும்போது, பந்தின் நிலையை நாம் அறிவதில்லை. எனினும், அதே தொலைவில் நடைபெறும் விளையாட்டை வீட்டில் இருந்தபடி தொலைக்காட்சியில் காணும்போது பந்து எந்த நிலையில் இருக்கிறது, பவுலரின் நிலை எங்கே, மட்டை அடிப்பவர் எங்கே இருக்கிறார், அவரது கால் எப்படி நிற்கிறது என்ற அனைத்து நுட்பமான விவரங்களையும் அறிந்து கொள்கிறோம்.

அதனால்தான் இந்தியாவில் வசிக்கும் இந்தியர்களை விட இந்தியாவுக்கு வெளியே வசிக்கும் இந்தியர்கள் நம் நாட்டைப் பற்றி அறிந்திருக்கிறார்கள். ஒவ்வொரு விஷயத்தையும் நன்கு அறிந்திருக்கிறார்கள். இந்தியர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், இந்தியாவிலிருந்து வரும் ஒவ்வொரு நல்ல செய்தியும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிக்கிறது.

கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியா குறித்து உங்களுக்கு என்ன தோன்றுகிறது? வளர்ச்சி அடைந்துள்ளதா? அல்லது முன்பு இருந்தது போன்ற நிலையே நீடிக்கிறதா? இந்தியாவின் கடவுச் சீட்டுக்கு மரியாதை இருப்பதாகத் தோன்றுகிறதா? உலகில் எந்த வெளிநாட்டு விமான நிலையத்திலும் வந்து இறங்கும்போது, அங்கே எந்தக் குடியேற்ற அதிகாரியிடமும் சென்று, “நான் இந்தியன்என்று கூறும்போது, அவர் உங்களை வரவேற்கும் வகையில் கண்களைப் பார்க்கிறாரா, இல்லையா? முன்பெல்லாம் யாருடனாவது கையைக் குலுக்கினால், அவர்கள் ஓகே, இது போதும்என்பது போல் நடந்துகொண்டனர். இன்று, இப்போது கையைக் குலுக்கினால், “போய்விடாதேஎன்று எதிர்பார்க்கிறார்கள். இப்படி மாற்றம் ஏற்பட்டுள்ளதா, இல்லயைா? இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. காரணம், நாட்டிலேயே மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாடு அந்த அளவு வேகமாக முன்னேறி வருகிறது.

இது மோடியினால் ஏற்பட்டதல்ல. நாட்டின் 125 கோடி இந்தியர்களால் நிறைவேறியது. நாட்டில் ஏதாவது ஒரு விளையாட்டு வீரர் தங்கப் பதக்கம் வென்றால் அதற்கு மோடி வியர்வை சிந்தவில்லை. அதே சமயம், ஆட்சியமைத்த பிறகு திறமையாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையில் வெளிப்படைத் தன்மையை மோடி கொண்டுவந்தார். அதனால், சரியான நபரே உரிய வாய்ப்பைப் பெறுகிறார். அதனால்தான் அவரால் தங்குப் பதக்கத்தைப் பெற முடிகிறது.

மக்களுக்குத் தேவையானவை எந்த ஒளிவுமறைவும் இல்லாமல் கிடைக்கும் என்றால், அற்புதம் நிகழ்த்துவார்கள். இதுதான் அரசாங்கத்தின் ஒரே பணி. நமது சூத்திரமே, “அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம்” (Sabka Satha – Sabka Vikas) என்பதுதான். இந்த மந்திரம் சக்திவாய்ந்தது. இந்த மந்திரத்தின் விளைவாக ஒவ்வொரு குடிமகனும் நாட்டின் முன்னேற்றத்துக்கா இணைந்து செய்லபட வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று தற்போது உணர்கிறான். நாட்டை முன்னேற்றப் பாதையில் செலுத்த வேண்டியது நமது அனைவரது கடமையாகும்.

கழிவறைகளின் தேவை குறித்து முன்பு இருந்தவர்கள் அறிந்திருக்கவில்லையா? இந்தத் தேவையைச் செய்வதற்கு மோடிதான் ஆட்சிக்கு வரவேண்டுமா? மக்கள் தங்களது வீடுகளில் கழிவறைகளை அமைப்பதற்கு ஒரு தனிப்பட்டவர் பிரதமராக வரும் வரையில் காத்திருக்க வேண்டுமா? அப்படித்தான் நடக்கிறது. யாருமே இது குறித்துக் கவலைப்படவில்லை. குறுகிய காலத்தில் எட்டுக் கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. லட்சக் கணக்கான கிராமங்களில் மக்கள் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இல்லாத நிலை உருவாகியுள்ளது. ஏதாவது பணி செய்வது என்று நாம் முடிவு செய்துவிட்டால், நமது பாணியே இப்படி அமைந்துவிடுகிறது. இல்லையென்றால், இந்தியாவில் பிரச்சினைகளுக்குப் பஞ்சமே இல்லாமல் போய்விடும். பிரச்சினைகள் இருக்கின்றன. அவை நீண்ட காலமாக இருக்கின்றன. ஆனால், இந்தப் பிரச்சினைகளை எண்ணிக்கொண்டே இருக்கப் போகிறோமா? அல்லது கிடைக்கும் நேரத்தில் நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்கப் போகிறோமா? நாடு விடுதலை அடைந்து 70 ஆண்டுகள் ஆன பிறகும், 18 ஆயிரம் கிராமங்கள் இன்னும் 18ம் நூற்றாண்டிலேயே வாழ்கின்றன. அந்தக் கிராமங்களில் மின்சார வசதி கிடையாது. நாம் ஆயிரம் நாட்களில் அவர்களுக்கு மின்சாரம் வழங்குவது என்று முடிவு செய்தோம். அதைச் செய்து முடித்தோம். இன்னும் நாட்டில் 4 கோடி வீடுகளில் மின்சார வசதியில்லை. அதை மாற்றுவதற்காகக் காலக் கெடு குறித்து முடிவு செய்தோம். ஓராண்டில் அவர்களுக்கு மின்சார இணைப்பை வழங்கிவிடுவோம். அதைச் செய்தாக வேண்டும். அதுவரை ஓயப் போவதில்லை.

பிரச்சினைகளைத் தீர்ப்பதன் மூலம் நமக்கு நம்பிக்கை ஏற்படுகிறது. அதைத் தீர்க்கலாம், இதைச் சரிசெய்யலாம் என்று ஒவ்வொருவரும் உணர்கிறோம். நினைக்கிறோம். இந்தியா ஒரே ராக்கெட்டில் நூறு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. உலகில் எங்கே இருந்தாலும், இந்தியர்கள் இதை எண்ணிப் பெருமிதம் அடைவர். இப்படித்தான் உள்ளது இன்றைய நிலைமை.

இந்தியா தனது வலிமையை நிரூபித்துவிட்டது. இந்திய மக்கள் தொகையை விட கைபேசிகளின் எண்ணிக்கை அதிகம் என்கிற வகையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியா நவீனப் பாதையில் நடைபோட்டு வருகிறதுபொருளாதார அளவைப் பொறுத்தவரையில், நாங்கள் ஆட்சி அமைக்கும்போது, உலகில் 9வது, 10வது இடத்தில் இந்தியா இருந்தது. இப்போது 6வது இடத்தை எட்டிவிட்டது. முதல் முறையாக பிரான்ஸை முந்தியிருக்கிறோம். 5வது, 4வது இடத்தையும் மிஞ்சி 3ஆவது இடத்தை அடைவோம்.

இன்று உலகில் பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடு என்றால், அது இந்தியாதான். எனவே, நாடு வெகு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. வளர்ச்சிப் பாதையில் முன்னேறியபடியே இருக்கிறது.

நீங்கள் இந்தியாவிற்கு வரவேண்டும் என்று விரும்புகிறீர்களா, இல்லையா? இரு மாதங்களுக்கு ஒரு முறை! நல்லது. 2019ம் ஆண்டு ஏராளமான வாய்ப்புகள் குவியப் போவதைப் பார்க்கப் போகிறீர்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை அறிவேன். 2019ம் ஆண்டு வாய்ப்புகள் உள்ளன.

சர்வதேச வெளிநாடுவாழ் இந்தியர் நாள்நிகழ்ச்சிகள் (International Pravasi Bhartiya Divas Karyakram) காசியில் 2019ம் ஆண்டு ஜனவரி 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கின்றன. உலகில் எங்கு வாழும் இந்தியர்களும் இந்தியாவில் குவிகிறார்கள். இந்த ஆண்டு காசியில் இது தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நான் காசி தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவன் தெரியுமா? ஆகையால், நான் விடுக்கும் அழைப்பு சிறப்புக்குரியது.

முதலில் இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளபவேண்டும். அந்த நிகழ்ச்சிகளில் நீங்கள் அனைவரும் மிகப் பெரிய அளவில் கலந்துகொள்ளவேண்டும். அடுத்து, பிரயாக்ரணில் பொங்கல் திருநாளான 2019ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி கும்ப மேளா கொண்டாடப்படுகிறது. கும்பமேளா திருவிழாவில் உலகின் பல இடங்களிலிருந்து வந்து பங்கேற்பர். எனவே, காசியில் சர்வதேச வெளிநாடுவாழ் இந்தியர் நாள்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுங்கள். பிறகு பிரயாகிலும், தில்லியில் ஜனவரி 26ம் தேதி நிகழ்ச்சியிலும் நீங்கள் எல்லோரும் பங்கேற்க வேண்டும். அதற்கு முன்னதாக ஜனவரி 20, 21ம் தேதிகளில் அகமதாபாதில் துடிப்புள்ள குஜராத் உலகளாவிய முதலீட்டாளர் மாநாடுநடைபெறுகிறது. அதிலும் நீங்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

முதலில் துடிப்புள் குஜராத் நிகழ்ச்சி, அதையடுத்து, வாரணாசிக்கும் அங்கிருந்து பிரயாக்ராஜுக்கும் அங்கிருந்து தில்லிக்கும் வாருங்கள். அதற்குப் பிறகும் இந்தியாவில் தங்க விரும்பினால், மே மாதம் வரையில் இருங்கள். பல நிகழ்ச்சிகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன.

நீங்கள் இவ்வளவு பெருந்திரளாகக் கூடியிருக்கிறீர்கள். என்னைப் பாராட்டினீர்கள். வாழ்த்தினீர்கள். அதற்கெல்லாம் நான் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகம் முழுவதும் பரவியுள்ள இந்திய சமூகத்தினர் குறித்து இந்தியா பெருமிதம் கொள்கிறது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன், இந்தியர்கள் உலகில் எங்கு சென்றாலும் நல்ல பெயரைச் சம்பாதிக்கிறார்கள். நமக்குப் பெருமை தேடித் தருகிறார்கள். இன்று, சிறிது நேரத்துக்கு முன் நான் அதிபருடன் அமர்ந்திருந்தேன். விமான நிலையத்திலிருந்து நேரடியாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் சென்றுவிட்டேன். அதிபர் உங்களை எல்லாம் மிகவும் பாராட்டிப் பேசினார். அதாவது இங்குள்ள இந்தியர்கள் குறித்து அவர் பெருமை கொள்கிறார் என்று அர்த்தம். இதைக் கேட்டபோது, இந்தியாவிலிருந்து இங்கே வந்ததால் ஏற்பட்ட களைப்பெல்லாம் பறந்துவிட்டது.

அவர் ஒரு முக்கியமான விஷயத்தைக் கூறினார். இங்கே வாழும் இந்தியர்கள் இந்த நாட்டின் முன்னேற்றத்துக்காகப் பங்களிப்பு செலுத்துகிறார்கள் என்று கூறினார். நிறைய சம்பாதிக்கிறார்கள். ஆனால், முறைகேடுகளில் ஈடுபடுவதில்லை. இந்தியர்களிடமிருந்து எந்தப் பிரச்சினையும் வரவில்லை.

அடுத்தது, இங்கே வாழும் இந்தியர்கள் சமூகப் பணிகளில் கை கொடுக்கிறார்கள் என்ற சிறப்புக் குணத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்றும் அதிபர் குறிப்பிட்டார். உள்ளூர் மக்களின் நலனுக்காக எதாவது ஒரு வகையில் செயல்படுகிறார்கள். இந்தக் குணாதிசயங்களால் இந்த மக்களின் மனத்தை நீங்கள் வென்றுவிட்டீர்கள். நமது சேவை மனப்பான்மையாலும் சேவை புரியும் எண்ணத்தினாலும் அந்த நாட்டு மக்கள் முக்கியமானது.

இந்திய சமுதாயம் என்பது சட்டத்தைப் பின்பற்றி மதிக்கும் குடிமக்களை வழிநடத்தும் சமுதாயம், எந்தவித மோசடியும் செய்யாதவர்களைக் கொண்ட சமுதாயம் என்று உலகில் எல்லா இடங்களிலிருந்தும் தகவல்கள் வருகின்றன. இத்தகைய குணாதிசியங்களால்தான் இந்தியர்கள் எந்த நாட்டிலும் வெறுக்கப்படுவதில்லை. மாறாக விரும்பப்படுகிறார்கள். அதனால்தான் இந்தியாவின் தூதர்களை விட இந்தியாவுக்கே தூதுவரைப் போல் இந்தியர்களே அமைந்திருக்கிறார்கள்.

இங்கே வந்து சேர்ந்த உடனே, இந்தியர்களைப் பற்றிய நல்ல விஷயத்தை அறிந்துகொண்டதால் உடனடியாக எனது களைப்பெல்லாம் பறந்துவிட்டது. உங்களையெல்லாம் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்கிறேன். உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது நல் வாழ்த்துகள்!

 

***


(रिलीज़ आईडी: 1544048) आगंतुक पटल : 324
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Marathi