நிதி அமைச்சகம்

1962 வருமான வரி விதிகளில் உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தம் குறித்து பொதுமக்கள் மற்றும் அக்கறையுள்ள அனைவரிடம் இருந்தும் கருத்துகளை 2018 செப்டம்பர் 4 ஆம் தேதிக்கு முன்னதாக அரசு வரவேற்கிறது

Posted On: 20 AUG 2018 1:11PM by PIB Chennai

வரி பிடித்தம் செய்யக்கூடாது அல்லது வரி பிடித்தம் குறைந்த வீதத்தில் மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான சான்றிதழை 1961 வருமான வரி சட்டத்தின் 197 ஆவது பிரிவு மற்றும் / அல்லது 206 சி (9) பிரிவின் கீழ் கோருவதற்கு என மனு செய்ய 1962 வருமான வரி விதிகளில் படிவம் எண் 13 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சான்றிதழ் வழங்குவதை மின்னணு முறையில் மேற்கொள்ளவும் இந்த முறையை சரிப்படுத்தி அமைக்கவும் வருமான வரி விதிகளும் தற்போதுள்ள படிவம் எண் 13-ம் திருத்தம் செய்யப்பட வேண்டியுள்ளது. 

இதனை கருத்தில் கொண்டு படிவம் எண் 13, விதிகள் 28, 28AA, 28AB, 37B, 37H ஆகியவற்றை திருத்துவது தொடர்பாக வரைவு அறிக்கை வருமான வரித் துறையின் www.incometaxindia.gov.in என்ற வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த வரைவு அறிவிக்கை தொடர்பான கருத்துக்கள், ஆலோசனைகளை 2018 செப்டம்பர் 4 ஆம் தேதிக்கு முன் ts.mapwal[at]nic[dot]in. என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

*******



(Release ID: 1543402) Visitor Counter : 146


Read this release in: English , Marathi , Hindi , Bengali