மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
தகவல் தொகுப்பு பாதுகாப்பு வரைவு மசோதா மீது பொதுமக்கள் கருத்துகள் கோரப்பட்டுள்ளன
இடுகை இடப்பட்ட நாள்:
16 AUG 2018 3:43PM by PIB Chennai
தகவல் தொகுப்பு பாதுகாப்பின் முக்கியத்துவம் மற்றும் குடிமக்களின் தனிப்பட்ட தகவல் தொகுப்புப் பாதுகாப்பை அங்கீகரித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு. பி.என். ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் நிபுணர்கள் குழுவை அமைத்தது.
தகவல் தொகுப்புப் பாதுகாப்புக்கான நிபுணர்கள் குழு தமது அறிக்கையையும் தனிப்பட்டோர் தகவல் தொகுப்புப் பாதுகாப்பு வரைவு மசோதாவையும் சமர்ப்பித்துள்ளது. இவை http://meity.gov.in/data-protection-framework என்ற மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணையதளத்தில் உள்ளன.
இந்த அறிக்கை மற்றும் தனிப்பட்டோர் தகவல் தொகுப்புப் பாதுகாப்பு வரைவு மசோதா குறித்து வரும் செப்டம்பர் 10-ந் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தக் கருத்துகளை அமைச்சகத்தின் இணையப் பக்கமான www.meity.gov.in என்பதில் சமர்ப்பிக்கலாம்.
விதிவிலக்காக தபாலில் அனுப்புவோர் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்:
Joint Secretary
Ministry of Electronics and Information Technology (MeitY)
Room No. 4016, Electronics Niketan,
6 CGO Complex, CGO Complex,
Lodhi Road, New Delhi – 110 003.
(வெளியீட்டு அடையாள எண்: 1543205)
வருகையாளர் எண்ணிக்கை : 239