பிரதமர் அலுவலகம்

ருவாண்டாவுக்கு பிரதமரின் அரசு முறை பயணத்தின் போது இந்தியா ருவாண்டா கூட்டறிக்கை

Posted On: 24 JUL 2018 11:45PM by PIB Chennai
  1. ருவாண்டா குடியரசின் அதிபர் மேதகு பால் ககாமே அழைப்பின் பேரில் இந்தியப் பிரதமர் மாண்புமிகு திரு. நரேந்திர மோடி, 2018 ஜூலை 23 மற்றும் 24 தேதிகளில் ருவாண்டாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். அவருடன் இந்திய அரசின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட உயர் நிலைக் குழு உடன் சென்றது. இந்தப் பயணத்தின் போது இந்தியாவின் பெரிய வர்த்தக பிரதிநிதிகள் குழுவும் உடனிருந்தது. இந்திய பிரதமர் ஒருவர் ருவாண்டாவுக்கு செல்வது இதுவே முதன்முறையாகும்.
  2.  2017ம் ஆண்டு துடிப்பான குஜராத் நிகழ்வில் பங்கேற்கவும், 2018ம் ஆண்டு சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டணியின் துவக்க மாநாட்டிலும் பங்கேற்க அதிபர் பால் ககாமே இந்தியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். இந்தியக் குடியரசு துணைத் தலைவர் கடந்த 2017ம் ஆண்டு ருவாண்டாவுக்கு விஜயம் செய்தார்.
  3.  பிரதமர் மோடி வருகையையொட்டி அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தப் பயணத்தின்போது அவர் அதிபர் பால் ககாமே உடன் 2018 ஜூலை 23ம் தேதி அரசு இல்லமான கிகாலியில் இருதரப்பு பேச்சுக்கள் நடத்தினார். பிரதமரை கௌரவிக்கும் வகையில் அதிபர் அரசு விருந்து அளித்தார்.
  4.  பிரதமரின் நிகழ்ச்சி நிரலில் பிரதிநிதிகள் மட்டத்திலான இருதரப்பு பேச்சுக்கள், இந்திய சமூகத்தினருடனான கலந்துரையாடல் மற்றும் இந்திய வர்த்தக சபைகளின் கூட்டமைப்பான ஃபிக்கி மற்றும் ருவாண்டா வர்த்தக வாரியம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த வர்த்தக நிகழ்வில் உரையாற்றுவது ஆகியவை அடங்கும். கிசோமி இனப்படுகொலை நினைவிடத்திற்கு விஜயம் செய்த பிரதமர் அங்கு டுட்சி இனத்தவருக்கு எதிராக நடந்த 1994 இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ஜூலை 24ம் தேதி கிகாலிக்கு வெளியே ரிவேரு மாதிரி கிராமத்தில் சமூக பாதுகாப்பு திட்டமான ஒரு குடும்பத்திற்கு ஒரு பசுமாடு அளிக்கும் கிரிம்கா திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர், இந்த திட்டத்தில் இந்தியாவின் பங்களிப்பாக பசுமாடுகளை அன்பளிப்பாக அளித்தார். இந்த அன்பளிப்பு செயல் பெரிதும் பாராட்டப்பட்டது.
  5.   பேச்சுக்களின் போது, இரு தலைவர்களும் இருதரப்பு ஒத்துழைப்பின் ஒட்டுமொத்த வரம்புகள் குறித்தும் ஆய்வு செய்ததுடன், இந்தியாவுக்கும், ருவாண்டாவுக்கும் இடையே உள்ள யுக்திபூர்வமான பங்களிப்பில் நிலவும் சிறப்பான உறவுகள் நிலவுவது குறித்து திருப்தி வெளியிட்டனர். 2018ம் ஆண்டில் ஆஃப்பிரிக்காவில் புதிய உள்நாட்டு இந்திய இயக்கம் திறக்கப்படவுள்ள நாடாக ருவாண்டா திகழ்கிறது என்றும் ருவாண்டாவுடனான உறவுக்கு இந்தியா அளித்துவரும் முக்கியத்துவத்தை குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசினார். இந்த முன்னேற்றம் குறித்து அதிபர் பால் ககாமே வரவேற்பு தெரிவித்தார். 2018 மார்ச் மாதம் சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டணியின் முதல் மாநாட்டில் பங்கேறக அதிபர் ககாமே மேற்கொண்ட சமீபத்திய பயணத்தை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டணி உடன்படிக்கையில் ருவாண்டா விரைவாக கையெழுத்திட்டு அதனை ஏற்றுக்கொண்டதற்காக பாராட்டு தெரிவித்தார். அதிபர் ககாமே தலைமையின் கீழ் ருவாண்டாவின் குறிப்பிடத்தக்க வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் ஆகியவை குறித்து பாராட்டிய பிரதமர் மோடி, 44 நாடுகள் கையொப்பமிட்டுள்ள ஆப்பிரிக்க கண்ட தடையற்ற வர்த்தக பகுதி உடன்படிக்கையை இறுதி செய்வதில் ஆப்பிரிக்க ஒன்றிய தலைவராக அதிபர் ககாமே அளித்த முக்கியமான பங்களிப்பை பாராட்டினார். இந்த கண்டத்தின் பொருளாதார ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதில் அவரது தலைமை ஆஃப்ரிக்க ஒன்றியத்திற்கு வழிகாட்டும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஆஃப்ரிக்க ஒன்றியத்துடன் தனது உறவுகளை வலுப்படுத்த இந்தியாவின் விருப்பத்தை அவர் சுட்டிக்காட்டினார்.
  6.  ருவாண்டாவின் தீவிர வளர்ச்சி ஒத்துழைப்புக்காகவும் இதர ஆப்பிரிக்க நாடுகளுடன் ஒத்துழைப்புக்காகவும் அதிபர் ககாமே இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். ஏற்றுமதி இறக்குமதி வங்கி மூலம் சுமார் 4000 மில்லியன் டாலர் கடன் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் (நீர்மின், வேளாண்மை, திறன் மேம்பாடு, உள்கட்டமைப்பு) பல்வேறு பெரிய திட்டங்கள் (வி.டி.சி., சூரிய மின்சக்தி) மற்றும் பயிற்சி மற்றும் ஊக்கத்தொகை திட்டங்கள் (.டி..சி., .சி.சி.ஆர்., ..எஃப்.எஸ்.) மூலம் ருவாண்டா பயனடைந்துள்ளது. ருவாண்டாவில் டிஜிட்டல் மயமாக்குவதற்காக இந்தியாவின் சில முயற்சிகளை மேற்கொள்வதற்கான விருப்பத்தையும் அவர் வெளியிட்டார். சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டணியை உருவாக்குவதில் இந்தியாவின் தலைமையை அவர் பாராட்டினார்.
  7.  இ-நூலகம் அமைப்பது உள்ளிட்ட டிஜிட்டல் கல்வித் துறையில் பணிக்குழு ஒன்று அமைக்கப்படும் என பிரதமர் அறிவித்தார். இது ருவாண்டாவில் கல்வித் துறையில் அளிக்கும் பயன்களைக் குறிப்பிட்டு இதனை அதிபர் ககாமே பாராட்டினார்.
  8.  இந்தியர்களுக்கு நீண்ட கால வர்த்தக விசா மற்றும் பணி அனுமதி குறித்த பிரதமரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அதிபர் ககாமே, ருவாண்டாவுக்கு இந்திய முதலீட்டாளர்கள் எளிதாக பயணிக்க வசதியேற்படுத்திக் கொடுப்பதாக உறுதி அளித்தார்.
  9.  பேச்சுக்களைத் தொடர்ந்து இருதலைவர்களும் : இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்கும் உறுதிப்பாட்டை உறுதி செய்தனர்; அதிக அளவிலான மக்களிடையிலான பரிவர்த்தனைக்கு ஊக்கமளிக்க ஒப்புக் கொண்டனர்;
    ஆஃப்பிரிக்காவில் ஐ.நா.அமைதி காக்கும் படைக்கு இரண்டு பெரிய பங்களிப்பார்களாக ஐ.நா. அமைதிகாக்கும் பணியில் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒப்புக்கொண்டனர்;
    எரிசக்தி துறையில் ஒத்துழைப்பை பரிசீலிக்க ஒப்புக் கொண்டனர்;
    கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த ஒப்புக்கொண்டனர்; மற்றும் சுற்றுலாவை மேம்படுத்த அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ள முடிவு செய்தனர்.
  10. அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் பயங்கரவாதத்தை கண்டித்த இரு தலைவர்களும் எந்தவிதமான பயங்கரவாத செயலையும் நியாயப்படுத்த முடியாது என்றும் அதனை ஊக்குவிப்பது, எங்கு யார் அதில் ஈடுபட்டாலும் ஏற்க முடியாது என வலியுறுத்தினார்கள். இது குறித்து இரு தலைவர்களும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்த பகிர்ந்து கொள்ளப்பட்ட கவலைகளை அடிக்கோடிட்டு காட்டியதுடன், பயங்கரவாதத்தை ஒடுக்கவும் எதிர்த்து போராடவும் சர்வதேச முயற்சிகளை வலியுறுத்தினார்கள்.
  11. ஐக்கிய நாடுகள் மற்றும் இதர சர்வதேச அமைப்புகளிலும் தங்களது ஒத்துழைப்பை தீவிரப்படுத்தவும் அதன் மூலம் நடப்பு உலகளாவிய சவால்களான பருவநிலை மாற்றம் போன்றவற்றை எதிர்கொள்ளவும், சர்வதேச மற்றும் பிராந்திய அமைதி, மற்றும் பாதுகாப்பு, நீடித்த வளர்ச்சி ஆகியவற்றில் தஙகளது உறுதியை தலைவர்கள் உறுதிப்படுத்தினார்கள்.
  12. இந்தப் பயணத்தின் போது கீழ்க்காணும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்/உடன்படிக்கைகள் கையெழுத்தாகின: பாதுகாப்பு ஒத்துழைப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இருதரப்பு வர்த்தக உடன்படிக்கை இந்தியாவின் தேசிய பால்வள ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ருவாண்டாவின் வேளாண்மை மற்றும் கால்நடை வளம் இடையே பால்வள ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வுஒப்பந்தம்.
     
    • இந்தியாவின் தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ருவாண்டாவின் தேசிய தொழில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
    • கலாச்சார பரிமாற்றத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
    • வேளாண்மை மற்றும் கால்நடை வளங்கள் ஒத்துழைப்புக்கு தொழில் பூங்காக்கள் அமைத்தல் மற்றும் கிகாலி சிறப்பு பொருளாதார விரிவாக்கத்திற்கு 1000 மில்லியன் டாலர் கடன் உடன்படிக்கைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் திருத்தம்
    • வேளாண்மை திட்டங்களுக்கான பாகங்களுக்கு 100 மில்லியன் டாலர் நிதி அளிப்பதற்கான கடன் உடன்படிக்கைகள்.
  13. இந்தப் பயணத்தின்போது பிரதமர் மோடி கீழ்க்காணும் அறிவிப்புக்களை வெளியிட்டார்:
    ருவாண்டா அரசின் கிரிம்கா திட்டத்திற்கு ஆதரவு அளிக்க 200,000 டாலர், அன்பளிப்பு. என்.சி..ஆர்.டி.யின் 100000 புத்தகங்களை அன்பளிப்பாக அளிப்பது, புத்தகங்கள் மற்றும் கற்றல் பொருட்களை டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் மூலம் அணுகுதல்.
     
    • கிகாலியில் தொழில்முனைவோர் வளர்ச்சி மையம் அமைத்து அதன் மூலம் பல்வேறு துறைகளில் ருவாண்டா இளைஞர்களின் திறன்களைவிரிவுபடுத்துவது.
       
    • பால் உற்பத்தி மற்றும் பதப்படுத்துதல் துறையில் குறுகிய கால பயிற்சி அளிக்க  முழு நிதி உதவியுடன் 25 மையங்கள்.
    • கிகாலியில் கிசோசி இனப்படுகொலை நினைவிடத்திற்கு 10000 டாலர் நன்கொடை மற்றும் ருவாண்டாவின் முதல் பெண்மனி நடத்தும் இம்புடோ பவுண்டேஷனுக்கு 10000 டாலர் நன்கொடை அளித்து அதன் மூலம் பெண்கள் கல்விக்கு உதவி.
  14. ருவாண்டாவில் தங்கியிருந்த போது தமக்கும் தனது குழுவில் இருந்தவர்களுக்கும் இதமான உபசரிப்பு அளித்த அதிபர் திரு. பால் ககாமேக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்தியாவுக்கு வருமாறு அதிபர் ககாமேக்கு வரவேற்றார்.

 

***



(Release ID: 1543117) Visitor Counter : 69


Read this release in: English , Marathi , Gujarati