ஜவுளித்துறை அமைச்சகம்
புதுவகை பட்டுப்புழு முட்டைகள் குறித்து மத்திய பட்டு வாரியம் அறிவிக்கை வெளியீடு
Posted On:
10 AUG 2018 3:53PM by PIB Chennai
மல்பேரி, வனியா ரக பட்டுக்குத் தேவைப்படும் பட்டுப் புழுவுக்கான புதிய வகை முட்டைகளை உருவாக்கி, உற்பத்தி செய்துள்ளது குறித்து மத்திய பட்டு வாரியம் அண்மையில் அறிவித்துள்ளது. இதன் மூலம் பட்டுப்புழுக் கூடுகளின் உற்பத்தி அதிகரிக்கும். அதன் மூலம் பட்டு உற்பத்தியில் உள்ள விவசாயிகள் அதிக வருவாய் பெறுவர்.
மத்திய பட்டு வாரியம் புதிய வகை பட்டுப்புழு முட்டை இனங்களை அதிகம் உற்பத்தி செய்வதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. அத்துடன் கள ஆய்வையும் மேற்கொண்டிருக்கிறது.
***
(Release ID: 1542710)