இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

மணிரங் மலை சிகரத்தை அடைவதற்கான அனைத்து மகளிர் மலையேறும் குழுவின் பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார் கர்னல். ராஜ்யவர்தன் ராத்தோர்

Posted On: 07 AUG 2018 2:30PM by PIB Chennai

   இமாச்சல பிரதேசத்தில் உள்ள 21,631 அடி உயரமான மணிரங் மலைச் சிகரத்தை சென்றடைவதற்கான அனைத்து மகளிர் மலையேறும் குழுவின் பயணத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை இணையமைச்சர் கர்னல். ராஜ்யவர்தன் ராத்தோர் தொடங்கி வைத்தார்.

  1993ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மலையேறும் முயற்சியின் வெள்ளி விழாவை குறிக்கும் வகையில், அனைத்து மகளிர் மலையேறும் குழுவை அனுப்பும் இந்திய மலையேறும் கழகத்தின் முயற்சியை கர்னல் ராஜ்யவர்தன் ராத்தோர் பாராட்டினார்.

  1993ஆம் ஆண்டு குழுவில் உறுப்பினராக இருந்த அனுபவமுள்ள பீம்லா நேகியின் தலைமையில் 19 உறுப்பினர்களை கொண்ட குழு மணிரங் மலைச்சிகரத்தை எட்டும் முயற்சியை மேற்கொள்கிறது.

  1993ஆம் ஆண்டில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் நிதியுதவியோடு இந்திய மலையேறும் கழகத்தால் தொடங்கப்பட்ட இந்திய – நேபாள பெண்கள் எவரெஸ்ட் மலையேறும் பயணத்திற்கான குழு முதல் அனைத்து மகளிர் குழுவாகும். 21 உறுப்பினர்களை கொண்ட இந்த மலையேற்ற குழுவிற்கு திருமதி.பச்சேந்திரி பால் தலைமையேற்றார்.  

==============



(Release ID: 1542245) Visitor Counter : 198


Read this release in: English , Hindi , Marathi , Bengali