ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
இந்தியாவில் பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயன முதலீட்டு மண்டலங்களின் செயலாக்கம் பற்றிய தற்போதைய நிலை
प्रविष्टि तिथि:
31 JUL 2018 2:36PM by PIB Chennai
இந்தியாவில் உள்ள பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயன முதலீட்டு மண்டலங்களின் செயலாக்கம் பற்றிய தற்போதைய நிலை பற்றி, மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்த ரசாயன உரத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. ராவ் இந்தர்ஜித் சிங், விரிவான திட்ட அறிக்கையின்படி, இந்த மண்டலங்களின் முழுமையான செயல்பாட்டுக்கு ரூ.7.63 லட்சம் கோடி முதலீடு தேவைப்படும் என்றும், இதன் மூலம் சுமார் 33.96 லட்சம் பேருக்கு (நேரடியாகவும், மறைமுகமாகவும்) வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயன முதலீட்டு மண்டலங்களுக்கான கொள்கை முடிவுகளின்படி, பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயன முதலீட்டு மண்டலங்கள் 250 சதுர கிலோ மீட்டர் பரப்புக்கு குறையாத பிரத்யேக சிறப்பு முதலீட்டு மண்டலங்களாக கருதப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயன முதலீட்டு மண்டலத்திற்கான அறிவிக்கப்பட்ட பகுதியான கடலூர் மற்றும் நாகப்பட்டினம் (தமிழ்நாடு) உள்ளிட்ட இடங்கள் பற்றிய விவரம் வருமாறு-
|
பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயன முதலீட்டு மண்டலம்
|
மொத்த பரப்பு (சதுர கிலோ மீட்டரில்)
|
|
தாஹேஜ், குஜராத்
|
453.00
|
|
விசாகப்பட்டினம்-காக்கிநாடா, ஆந்திர பிரதேசம்
|
640.00
|
|
பாரதீப், ஒடிசா
|
284.15
|
|
கடலூர் மற்றும் நாகப்பட்டினம், தமிழ்நாடு
|
256.83
|
இந்தப் பகுதியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் செயலாக்க நிலைப் பற்றியும் திரு. ராவ் இந்தர்ஜித் சிங் விளக்கமளித்தார். அதன் விவரம் வருமாறு-
தமிழ்நாடு - பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயன முதலீட்டு மண்டலம்:
தமிழ்நாடு பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயன முதலீட்டு மண்டலம் அமைப்பதற்காக கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வரையறுக்கப்பட்ட பகுதி தொடர்பான மாவட்ட அளவிலான அறிவிப்புகள் நிறைவடைந்து, 1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊர் அமைப்பு சட்டத்தின்படி, தமிழக அரசால் 20.06.2017 அன்று இறுதி அறிவிப்பாணை வெளியிடப்பட்டு விட்டது. தமிழ்நாடு பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயன முதலீட்டு மண்டலத்திற்கான மொத்த முதலீடு (செலவிடப்பட்ட/ உறுதி அளிக்கப்பட்ட) ரூ.8,100 கோடி ஆகும். 13,950 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
இந்த மண்டலங்களை செயல்படுத்துவதில் மத்திய-மாநில அரசுகளின் பங்களிப்பு பற்றி குறிப்பிட்ட அமைச்சர் திரு. ராவ் இந்தர்ஜித் சிங், பெட்ரோலிய முதலீட்டு மண்டலங்களை ஏற்படுத்த அனுமதி அளிப்பது, வெளிப்புற கட்டமைப்பு இணைப்பு வசதிகளை உறுதிபடுத்துவதுடன், உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீடுகளை ஊக்குவிப்பதில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படும் என்றும் தெரிவித்தார். இந்த சிறப்பு முதலீட்டு மண்டலங்களை அமைப்பதில் மாநில அரசுகள் முக்கிய பங்கு வகிக்கும். திட்ட அறிக்கை தயாரித்து பெட்ரோலிய சிறப்பு முதலீட்டு மண்டலங்களை ஏற்படுத்துவதற்கான ஒப்புதலை கோருவது, மின் இணைப்பு, தண்ணீர் தேவை, சாலை இணைப்பு, கழிவுநீர் சுத்திகரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்வதுடன், பெட்ரோலிய முதலீட்டு மண்டலங்களின் வளர்ச்சி மற்றும் மேலாண்மைக்கான, மேலாண்மை வாரியங்களை அமைப்பதும் மாநில அரசுகளின் பணியாகும்.
(रिलीज़ आईडी: 1540909)
आगंतुक पटल : 484