பாதுகாப்பு அமைச்சகம்

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு நிலைகள்மீது பயங்கரவாத தாக்குதல்கள்

Posted On: 23 JUL 2018 3:33PM by PIB Chennai

ஜம்மு காஷ்மீரில் கடந்த இரண்டு ஆண்டுகளிலும், நடப்பாண்டிலும் பாதுகாப்பு நிலைகள் / ராணுவ முகாம்கள்மீது பயங்கரவாத தாக்குதல் மற்றும் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் உயிரிழப்பு விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

 

வ.எண்

ஆண்டு

சம்பவங்கள்

ராணுவ பாதிப்புகள்

கொல்லப்பட்ட பயங்கரவாதிகள்

பொதுமக்கள் பாதிப்பு

உயிரிழப்பு

காயம்

உயிரிழப்பு

காயம்

1.

2016

05

26

25

10

-

-

2.

2017

01

03

07

02

-

-

3.

2018

03

06

08

03

01

06

 

     ராணுவ முகாம்கள் மீதான பயங்கரவாத தாக்குதல்கள் அனைத்தும் விரிவாக விசாரணை செய்யப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் பயங்கரவாத அமைப்புகளால் நடத்தப்பட்டதற்கு பூர்வாங்க ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பாதுகாப்பு நிலைகளின் பந்தோபஸ்திற்கு விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

     இந்தத் தகவலை மாநிலங்களவையில் இன்று (23.07.18) குமாரி செல்ஜா-வுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் சுபாஷ் பாம்ரே தெரிவித்துள்ளார்.

------



(Release ID: 1539682) Visitor Counter : 77


Read this release in: English , Marathi