பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
தகவல் உரிமைச் சட்டத்தில் திருத்தம்
Posted On:
18 JUL 2018 3:34PM by PIB Chennai
தகவல் உரிமைச் சட்டத்தில் (2005) திருத்தம் கொண்டுவருவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
“தகவல் உரிமைச் சட்டம் (திருத்தம்) 2018” என்ற பெயரிலான சட்ட முன்வடிவை மாநிலங்களவையில் ஆய்வுக்காக நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கொண்டு வர உத்தேசம் தெரிவித்து அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தலைமை தகவல் ஆணையர் மற்றும் மாநிலத் தகவல் ஆணையர்களின் ஊதியம், படிகள், பணி நிலைமை உள்ளிட்டவற்றை நிர்ணயிக்க வகை செய்யும் விதத்தில் இந்தச் சட்ட முன்வடிவு கொண்டு வரப்படுகிறது. தகவல் உரிமைச் சட்டத்தில் தற்போது இதற்கான அம்சங்கள் இடம்பெறவில்லை.
செலவினங்கள் துறை, சட்ட விவகாரத் துறை, சட்டமன்ற துறை ஆகியவற்றிடம் இந்த தகவல் உரிமைச் சட்டத்தின் திருத்த சட்ட முன்வடிவை (2018) வகுப்பதற்காக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
மத்திய வடகிழக்கு மண்டல அபிவிருத்தித் துறை (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், மக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி, விண்வெளி ஆகியவற்றின் இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மக்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் இதைத் தெரிவித்துள்ளார்.
****
(Release ID: 1539189)
Visitor Counter : 171