மத்திய அமைச்சரவை

மண்டல விமானப் போக்குவரத்து கூட்டு: பிரிக்ஸ் நாடுகளுடன் புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு கேபினட் ஒப்புதல்

Posted On: 18 JUL 2018 5:40PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையில் மண்டல அளவில் விமானப் போக்குவரத்து தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்:

 

சிவில் விமானப் போக்குவரத்தில் ஒத்துழைப்பு மேற்கொள்வதற்காக நிறுவன ரீதியிலான கட்டமைப்பை (Institutional framework) உருவாக்குவதன் மூலம் பலனடைவதே பிரிக்ஸ் நாடுகளின் குறிக்கோள் ஆகும். இந்த ஒத்துழைப்பில் கீழ்க்கண்டவை இடம்பெற்றுள்ளன. மண்டல அளவிலான சேவைகளில் பொதுக் கோட்பாடுகள் மற்றும் சிறந்த நடைமுறைகள்;

  • மண்டல அளவிலான விமான நிலையங்கள்;
  • விமான நிலையக் கட்டமைப்பு மேலாண்மை மற்றும் வான்வழிகாட்டுச் சேவைகள்;
  • ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு இடையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு;
  • புதுமை செய்தல்;
  • உலகளாவிய முன்முயற்சிகளின் கருத்தியல் உள்பட சுற்றுச்சூழலின் நீடித்த தன்மை;
  • தகுதி மற்றும் உரிய பயிற்சி;
  • பரஸ்பரம் முடிவு செய்யப்படும் இதர அம்சங்கள்

 

பாதிப்பு:

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியாவுக்கும் பிரிக்ஸ் அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளுக்கும் இடையில் சிவில் விமானப் போக்குவரத்து உறவுகளில் முக்கிய தடத்தைப் பதிப்பதுடன், பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையில், விரிவான வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, பண்பாட்டுப் பரிமாற்றத்துக்கு வழி செய்யும்.

*****



(Release ID: 1539183) Visitor Counter : 128