பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இந்திய-அமெரிக்க பிரதிநிதிகள் கூட்டம்
இடுகை இடப்பட்ட நாள்:
18 JUL 2018 2:55PM by PIB Chennai
இந்தியா – அமெரிக்கா இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, ஏழாவது பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக முன்முயற்சிக் கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு (பாதுகாப்பு உற்பத்தி) செயலர் டாக்டர். அஜய் குமார், அமெரிக்க அரசின் பாதுகாப்பு துணைச் செயலர் எல்லென் எம். லார்டு ஆகியோர் தலைமை வகித்தனர். பாதுகாப்பு உற்பத்தியில் வாய்ப்புகளை உருவாக்குவதையும், வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு, ஆண்டுக்கு இருமுறை, இருநாடுகளிலும் மாறி மாறி இந்தக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.
நிகழ்ச்சியில் பேசிய டாக்டர். அஜய் குமார், மேக் இன் இந்தியா முன் முயற்சியின் அடிப்படையில் இந்திய பாதுகாப்புத் தொழிலுக்கு ஊக்கமளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்தார். ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவும் என்று அவர் தெரிவித்தார்.
எல்லென் எம் லார்டு பேசுகையில், இந்தியா – அமெரிக்கா பாதுகாப்பு ஒத்துழைப்பு, இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுக்கான முக்கியத்துவங்களில் ஒன்றாக திகழ்கிறது என்று குறிப்பிட்டார். இந்தியாவை முக்கிய பாதுகாப்பு கூட்டாண்மை நாடாக அமெரிக்கா கருதுகிறது என்று அவர் தெரிவித்தார்.
ஆயுதப்படைகளின் நலனுக்காக பரஸ்பரம் இசைவு தெரிவிக்கப்பட்ட திட்டங்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்த ஏராளமான கூட்டுப் பணிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
விமானப் படையின்கீழ் அமைக்கப்பட்ட கூட்டுப் பணிக் குழு கண்காணிப்பை மேற்கொள்வதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளது.
அதேபோல இந்திய கடற்படையின் கூட்டுப் பணிக் குழு , அமெரிக்க கடற்படையுடன் சேர்ந்து, தொழில்நுட்ப பரிமாற்றங்களில் கவனம் செலுத்தி வருகிறது.
================
(வெளியீட்டு அடையாள எண்: 1539116)
வருகையாளர் எண்ணிக்கை : 169