பாதுகாப்பு அமைச்சகம்
சேவை ஆயுட்காலத்தை விரிவுப்படுத்துவதை உறுதி செய்வதற்கான பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி
Posted On:
16 JUL 2018 4:39PM by PIB Chennai
ஒலியைவிட வேகமாகச் செல்லக் கூடிய பிரமோஸ் ஏவுகணை இன்று (16.07.2018) ஒடிசா மாநிலம் பாலாசோரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்திலிருந்து காலை மணி பத்து பதினேழுக்கு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. நடமாடும் சுயேச்சையான செலுத்து வாகனத்திலிருந்து நடத்தப்பட்ட இந்த சோதனை இந்திய ராணுவத்திற்கென மோசமான பருவநிலைகளில் சேவை ஆயுட்காலத்தை விரிவாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இந்த ஏவுகணை குறிப்பிட்ட பாதையில் சென்று இலக்கை துல்லியமாக தாக்கியதாகவும், இதன் முக்கிய பகுதிகள் சிறப்பாக செயலாற்றின என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 9 மீட்டர் உயரமுள்ள அலைகள் கொண்ட வேளாண் நிலை கடல் சூழலிலும் பறந்து செல்லக் கூடிய தனது அனைத்து பருவத்தையும் சமாளிக்கும் திறனை பிரமோஸ் நிரூபித்துள்ளது. மிகவும் மோசமான பருவநிலையில், செயல்படுவதற்கான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தொலைவு திறன்களும் இந்த சோதனையின் போது உறுதி செய்யப்பட்டன. இந்த சோதனையை ராணுவத்தின் உயர் அதிகாரிகள் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் மற்றும் பிரமோஸ் அமைப்புகளின் விஞ்ஞானிகள் பார்த்தனர்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் மற்றும் ரஷ்யாவின் எம் பி ஓ எம் நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சி பிரமோஸ் ஆகும். நவீனகால போர்க்களங்களில் முக்கியமான ஆற்றல் பெருக்கியாக பிரமோஸ் ஏவுகணை தன்னை நிரூபித்துக் காட்டியுள்ளது. இந்த ஏவுகணையின் குறையற்ற நில இலக்கு தாக்குதல், கப்பல்களுக்கு எதிரான திறன், பன்முகத்தன்மையுடன் பல தளங்களில் செயலாற்றும் திறன் ஆகியவற்றின் காரணமாக இந்த ஏவுகணை இவற்றை நிரூபித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இந்த வெற்றிகரமான சோதனைக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு, பிரமோஸ், இந்திய ராணுவம் ஆகியவற்றைச் சேர்ந்த குழுவினருக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
(Release ID: 1538791)