சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
ஆந்திரபிரதேச மாநிலம் இச்சாபுரத்திற்கும் அனகாபள்ளிக்கும் இடையேயான தேசிய நெடுஞ்சாலை எண் 16-ஐ அகலப்படுத்துவதற்கான நாட்டவிருக்கிறார் திரு நிதின் கட்கரி
प्रविष्टि तिथि:
12 JUL 2018 1:24PM by PIB Chennai
ஆந்திரபிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் நாளை நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் 6,688 கோடி ரூபாய் மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலை மற்றும் துறைமுக தொடர்பு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டுகிறார் சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலை, கப்பல், நீர் ஆதாரம், நதி வளர்ச்சி மற்றும் கங்கை புனரமைப்புத் துறைக்களுக்கான அமைச்சர் திரு நிதின் கட்கரி, இம்மாநிலத்திற்கு 11ம் தேதி தொடங்கி 13-ம் தேதி வரை 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
439 கோடி ரூபாய் செலவில் இச்சாப்புரத்திற்கும், நரசன்னபேட்டைக்கும் இடையே தேசிய நெடுஞ்சாலை எண்.16-ல் உள்ள 13.47 கிலோமீட்டர் அளவிலான நான்கு வழிப் பாதையை மேம்படுத்துவது, நரசன்னபேட்டைக்கும் ரனஸ்தலத்திற்கும் இடையே தேசிய நெடுஞ்சாலை எண்.16-ல் உள்ள 54.20 கிலோமீட்டர் பகுதியை ஆறு வழிச்சாலையாக்கவும், 1,187.15 கோடி ரூபாய் செலவில் ரனஸ்தலத்திற்கும் ஆனந்தபுரத்திற்கும் இடையே தேசிய நெடுஞ்சாலை எண் 16-ன் ஆறுவழிச்சாலையை உருவாக்கவும், 2013 கோடி ரூபாய் செலவில் தேசிய நெடுஞ்சாலை எண் 16-ல் உள்ள அனந்தபுரம், பெண்டுருத்தி, அனகாபள்ளி பகுதியில் ஆறுவழிச் சாலை அமைப்பதற்கும் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டப்படும். இந்தத் திட்டங்களின் காரணமாக சென்னைக்கும், கொல்கத்தாவிற்கும் இடையேயான தொடர்பு மேம்படுவதோடு பயண நேரமும் குறைந்து விசாகப்பட்டின நகரின் போக்குவரத்து நெரிசலும், கட்டுப்படுத்தப்படும்.
------
(रिलीज़ आईडी: 1538461)
आगंतुक पटल : 139