குடியரசுத் தலைவர் செயலகம்

இந்திய பாதுகாப்பு சொத்துசார் பணிகள், இந்திய தொலைத்தொடர்பு பணிகள், அஞ்சல் மற்றும் தந்திக் கட்டுமானப் பணிகள் ஆகிய மத்திய சேவைகளின் பயிற்சி அதிகாரிகள் குடியரசுத் தலைவரை சந்தித்தனர்

Posted On: 11 JUL 2018 12:36PM by PIB Chennai

இந்திய பாதுகாப்பு சொத்துசார் பணிகள், இந்திய தொலைத்தொடர்பு பணிகள், அஞ்சல் மற்றும் தந்திக் கட்டுமானப் பணிகள் ஆகிய மத்திய சேவைகள் ஆகியவற்றின் தனித்தனிக் குழு பயிற்சி அதிகாரிகள் கூட்டாக இன்று (11.07.2018) குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்தை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தனர்

  பயிற்சி அதிகாரிகளிடையே உரையாற்றிய  குடியரசுத் தலைவர் இவர்களின் பணிச் சேவைப் பிரிவுகள் நாட்டிற்கு சேவை செய்வதற்கான மிகப்பெரிய மேடையை அமைத்து தந்திருப்பதாக கூறினார். பாதுகாப்பு, தொலைத்தொடர்பு போன்ற இன்றியமையாத துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த முக்கியத் திட்டங்களை நிர்வகிப்பதில், அவர்கள் பொறுப்பேற்பார்கள் என்று அவர் கூறினார். தமது பணியின்போது அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும், தேச சேவையாக கருதப்படும் வாய்ப்புகள் சில பணிகளுக்கு மட்டுமே உள்ளன என்று குடியரசுத் தலைவர் கூறினார்.

  நமது நாட்டில் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அடிப்படையிலான உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத்தொடர்பு கட்டமைப்பு உள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறினார். தொலைத்தொடர்புத் துறை விரைந்த வளர்ச்சியை குறிப்பாக, கம்பியில்லா தொலைத் தொடர்பு பிரிவில் கண்டு வருகிறது என்றும், தொலைத் தொடர்பு மிகவும் அடிப்படையான கட்டமைப்பு வசதிகளான மின்சாரம், சாலைகள், குடிநீர் போன்றவற்றுக்கு ஈடாக கருதப்படுகிறது என்றும் கூறினார். நாட்டின் தொலைதூர பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் இணைப்பு வசதி இல்லா இடங்களுக்கு இணைப்பு ஏற்படுத்துவதில் இந்திய தொலைத் தொடர்பு பணி அதிகாரிகளுக்கு முக்கியப் பங்கு உள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறினார்

================



(Release ID: 1538321) Visitor Counter : 102


Read this release in: English , Urdu , Marathi