மத்திய அமைச்சரவை

அகதிகள் மற்றும் தாயகம் திரும்பியோருக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளிக்கும் முன்னோடி திட்டங்களைத் தொடர அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 04 JUL 2018 2:32PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம், அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்தோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்தோர் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு என்னும் முன்னோடி திட்டத்தின் கீழ் உள்துறை அமைச்சகத்தின் 8 திட்டங்களை 2020 மார்ச் வரை நீட்டிக்க ஒப்புதல் அளித்தது.

Top of Form

 

நிதிந் நிதி தாக்கம்:

 

2017-18 முதல் 2019-20 வரையிலான காலக்கட்டத்திற்கு இந்த நோக்கத்திற்கான நிதி தாக்கம் ரூ. 3183 கோடியாகும். இந்த திட்டத்திற்கான ஆண்டுவாரியான தாக்கம் 2017-18ல் ரூ. 911 கோடி, 2018-19ல் ரூ. 1372 கோடி மற்றும் 2019-20ல் ரூ. 900 கோடியாகும்.

 

பயன்கள்:

 

இந்த திட்டங்கள் அகதிகள், இடம்பெயர்ந்த நபர்கள் பயங்கரவாத/மதவாத/இடதுசாரி தீவிரவாதம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் எல்லை தாண்டிய துப்பாக்கி சூடு மற்றும் இந்திய மண்ணில் கண்ணிவெடி/ஐ.இ.டி. குண்டுவெடிப்புகள் மற்றும் கலவரம் போன்ற இதர சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் மறுவாழ்வும் அளிக்கும்.

 

விவரங்கள்:

 

தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த 8 திட்டங்களும் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருவதுடன் இவற்றின் கீழான பயன்கள் ஒப்புதல் அளிக்கப்பட்ட அடிப்படையில் பயனாளிகளுக்கு அளிக்கப்படும்.

 

திட்டங்கள் வருமாறு:

 

  1. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் பகுதி மற்றும் சம்ப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து ஜம்மு காஷ்மீரில் குடியேறியவர்களுக்கன ஒருமுறை மத்திய உதவி.
  2. வங்கதேசத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட எல்லை உடன்படிக்கைக்கு பின்னர் வங்கதேச குடியிருப்பு மற்றும் கூச் பிகார் மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்தவர்களுக்கு மறூவாழ்வு மற்றூம் உள்கட்டமைப்பு மேம்பாடு.
  3. தமிழ்நாடு மற்றும் ஒடிசாவில் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை அகதிகளுக்கு நிவாரண உதவி
  4. திபெத்திய குடியேற்றங்களின் நிர்வாக மற்றும் சமூக நல்வாழ்வு செலவினங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய திபெத்திய நிவாரண குழுவுக்கு மானிய உதவி
  5. திரிபுராவில் நிவாரண முகாம்களில் உள்ள புரு அகதிகளுக்கான பராமரிப்புக்காக திரிபுரா அரசுக்கு மானியத்துடன் உதவி
  6. திரிபுராவில் இருந்து மிசோராமுக்கு பெயர்ந்து புரு/ரீம்க் குடும்பங்களுக்கு மறுவாழ்வு
  7. 1984-ல் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் இறந்தவர்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட நிவாரணம் தலா ரூ. 5 லட்சம்
  8. பயங்கரவாத/மத/இடதுசாரி தீவிரவாதத்தால், எல்லை தாண்டிய துப்பாக்கி சுடுதல் மற்றும் கண்ணி வெடி/ஐ.ஈ.டி. குண்டுவெடிப்பு தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கான மத்திய உதவித் திட்டம்

 

பின்னணி:

 

இடம்பெயர்ந்ததால் துயருற்ற அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்தவர்கள் நியாயமான வருவாய் ஈட்டவும், பொருளாதார நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுத்தப்படவும், பல்வேறு தருணங்களில் அரசு எட்டு திட்டங்களைத் தொடங்கியது. இந்த திட்டங்கள் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு உதவிகளை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் சம்ப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள், இலங்கை அகதிகள், திரிபுரா நிவாரண முகாம்களில் தங்கியுள்ள புருக்கள், திரிபுராவில் இருந்து மிஜோராமுக்கு இடம்பெயர்ந்த புரு/ரீங் குடும்பங்கள், 1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், உள்நாட்டில் பயங்கரவாதம்/மதவாதம்/இடதுசாரி தீவிரவாதம் கண்ணிவெடி/ஐ.இ.டி. குண்டுவெடிப்புகளில் பாதிக்கப்பட்டவர்கள், வெளிநாடுகளில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்திய கைதிகள், மத்திய திபெத் நிவாரண குழுவுக்கு மானிய உதவி ஆகியோருக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளிக்கப்படுகிறது. 51 வங்க தேச குடியிருப்பு பகுதிகளில் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காகவும் வங்கதேசத்தில் இருந்த இந்திய குடியிருப்பு பகுதிகளில் இருந்து வந்த 911 பேருக்கும் உதவ மேற்கு வங்க அரசுக்கு மானியத்துடன் கூடிய நிதியுதவியை அரசு அளித்து வருகிறது.

******

 



(Release ID: 1537658) Visitor Counter : 187