கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

2019 ஆம் ஆண்டு ஈராக்கில் செயல்படும் சபாகார் துறைமுகத்தை இந்தியா செயல்பாட்டுக்கு கொண்டு வர முயற்சிக்கிறது– நிதின் கட்கரி கூறினார்

Posted On: 22 JUN 2018 12:09PM by PIB Chennai

2019 ஆம் ஆணடுக்குள் ஈரானில் செயல்படும் சபாகார் துறைமுகத்தை இந்தியா செயல்பாட்டுக்கு கொண்டு வர முயற்சி செய்யும் என்று மத்திய நீர்வள ஆணையம் அமைசர், நதி மேம்பாட்டு, கங்கை மறுசிரமைப்பு, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைசர் திரு நிதின் கட்கரி நேற்று துஷான்பேயில் தெரிவித்தார். சுவாமி விவேகனந்தா கலாச்சார மையத்தின் துவக்க விழாவில் துஷான்பேயில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய சமூகத்தை பற்றி உரையாற்றினார். மேலும் அவர் சபாகார் துறைமுகத்தை திறந்து வைப்பது சுதந்திர நாடுகளின் பொதுநலத்தை மேலும் வலுபடுத்தம் என்று அவர் கூறினார்.

  கடந்த நான்கு ஆண்டுகளில் தேசிய கல்வி கழகத்தில் அரசு மேற்கொண்ட தொடக்கங்களையும், முயற்சிகளையும் பற்றி திரு நிதின் கட்கரி கூறினார்.  அவர் உள்கட்டமைப்புத் துறையின் மிகப்பெரிய பணியைப் பற்றியும், தேசிய நெடுஞ்சாலைகள் நாள் ஒன்றுக்கு  28 கிலோ மீட்டர் அளவில் முன் எப்போதும் இல்லாத வேகத்தில் கட்டப்பட்டுவருகிறது என்று அமைச்சர் கூறினார். பிரதமர் திரு நரேந்திரமோடியின் தலைமையிலான ஊழல் இல்லாத, வெளிப்படையான மற்றும் உறுதியான அரசாங்கத்தின் கீழ் நாடு மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்று அமைச்சர் கூறினார். இந்தியாவின் கவுரவம் மற்றும் மரியாதை கடந்த 4 ஆண்டுகளில் உலகம் முழுவதும் வளர்ந்துள்ளது என்றும், வணிகம், தூய்மை மற்றும் பல அம்சங்களில் உலகளவில் இந்தியாவின் தரவரிசை உயர்ந்துள்ளது என்று அமைச்சர் கூறினார்.



(Release ID: 1537146) Visitor Counter : 193


Read this release in: English , Urdu , Hindi , Bengali