விண்வெளித்துறை
கடல்சார் விழிப்புணர்வு இயக்க ஒத்துழைப்பு குறித்து இந்தியா மற்றும் ஃபிரான்ஸ் இடையிலான நடைமுறைப்படுத்தும் ஏற்பாடு குறித்து அமைச்சரவையில் விளக்கம்
Posted On:
27 JUN 2018 3:47PM by PIB Chennai
இந்தியா மற்றும் ஃபிரான்ஸ் இடையே 2018 மார்ச் 10ம் தேதி கையொப்பம் செய்து கொள்ளப்பட்ட முன்பே உருவாக்கப்பட்ட கடல்சார் விழிப்புணர்வு இயக்க்த்தை நடைமுறைப்படுத்தும் ஏற்பாடு குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்ட்த்தில் விளக்கப்பட்ட்து.
திட்டமிடப்பட்டுள்ள இந்த கூட்டு இயக்கம் கடல்சார் விழிப்புணர்வுக்கு அர்ப்பணிக்கப்பட்டு, இரு நாடுகளுக்கு தேவையான தகவல் மற்றும் சேவைகளை அளிப்பது இதன் நோக்கமாக இருக்கும். கடல்சார் போக்குவரத்தை கண்காணிப்பது மற்றும் இணக்கமற்ற கப்பல்களை அடையாளம் காண்பதும் நோக்கமாகும். இந்தக் கண்காணிப்பு அமைப்பு கண்டுபிடித்தல், அடையாளம் காணுதல், இந்தியா மற்றும் ஃபிரான்சுக்கும் ஆர்வம் உள்ள பிராந்தியங்களில் கப்பல்களை கண்காணித்தல் ஆகியவற்றுக்கு இறுதி தீர்வுகளை அளிக்கும்.
நடைமுறைப்படுத்தும் ஏற்பாட்டின்படி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு இஸ்ரோ மற்றும் ஃபிரான்சின் சென்டர் நேஷனல் டாட்யூட்ஸ் ஸ்பாடியல்ஸ் கூட்டாக இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை இந்த முன்பே உருவாக்கப்படும் படிப்புகளின் போது மேற்கொண்டு, இந்த ஒப்பந்தம் ஏற்பட்ட ஓராண்டு காலத்திற்குள் அந்தந்த நாடுகளின் மூத்த நிர்வாகத்திடம் அளிக்கும்.
-----
(Release ID: 1536766)