ஆயுஷ்

யோகா மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கு சிறப்பான பங்களிப்புக்கான பிரதமர் விருது 2018

प्रविष्टि तिथि: 20 JUN 2018 5:25PM by PIB Chennai

2018ம் ஆண்டி யோகாசன மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்காக சிறப்பான பங்களிப்பை அளித்தமைக்காக நாசிக்கை சேர்ந்த திரு. விஸ்வாஸ் மாண்டலிக் மற்றும் மும்பையை சேர்ந்த யோகா பயிற்சி நிறூவனம் ஆகியோருக்கு பிரதமர் விருது வழங்கப்படுகிறது. பல்வேறு பிரிவுகளின் கீழ் பெறப்பட்ட 186 விண்ணப்பங்களில் இருந்து இந்த தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஆயுஷ் துறையின் செயலர் தலைமையிலான தேர்வுக் குழு இந்த 186 விண்ணப்பங்களை பரிசீலித்து விருது பெறுவோரை தேர்வு செய்தனர். அமைச்சரவை செயலர் தலைமையிலான நடுவர் குழுவில், பிரதமரின் கூடுதல் முதன்மை செயலர், வெளியுறவு செயலர், ஆயுஷ் துறை செயலர் டாக்டர் ஹெச்.ஆர். நாகேந்திரா, ஓ.பி. திவாரி மற்றும் டாக்டர் பி.என். கங்காதர் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்கள் வழிகாட்டும் குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்து விருதுக்காக தேர்வு செய்யப்பட்ட நிறுவன்ங்கள் மற்றும் தனிநபர்களின் பங்களிப்புகளை மதிப்பீடு செய்தனர்.

இந்த பரிசீலனையைத் தொடர்ந்து இந்த ஆண்டு தனிநபர் பிரிவு விருது திரு. விஸ்வாஸ் மண்டாலிக் அவர்களுக்கும் நிறுவன பிரிவில் மும்பையை சேர்ந்த யோகா நிறுவனத்திற்கும் அளிக்கப்படுகிறது.

இந்த பரிந்துரையை ஏற்று நாசிக்கை சேர்ந்த திரு. விஸ்வாஸ் மாண்டலிக் மற்றும் மும்பையை சேர்ந்த யோகா நிறுவனத்திற்கும் 2018ம் ஆண்டில் யோகா மேம்பாடு மற்றூம் வளர்ச்சிக்காக சிறப்பாக பணியாற்றியதற்கான பிரதமர் விருதுகளை அளிக்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது. 2017ம் ஆண்டு புனேயில் உள்ள ருக்மணி அய்யங்கார் நினைவு யோகா பயிற்சி நிறுவனம் இந்த விருதைப் பெற்றது.

 

***


(रिलीज़ आईडी: 1536181) आगंतुक पटल : 188
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Marathi