குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம்
தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் ஊரக துப்புரவு பணிகள் 85%-ஐ தாண்டியுள்ளது
प्रविष्टि तिथि:
08 JUN 2018 6:52PM by PIB Chennai
உலகிலேயே மிகப்பெரும் அளவில் நடைமுறை மாற்ற திட்டமான தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் ஊரக துப்புரவு பணிகள் தற்போது 85 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஊரக சமூகங்களை திரட்டுவதன் மூலம் இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் 7.4 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதன் விளைவாக 3.8 லட்சத்திற்கும் அதிகமான கிராமங்களும், 391 மாவட்ட ங்களும், திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இல்லாதவை ( ஓ .டி எஃப்) என அறிவிக்கப்பட்டுள்ளன.
சுயேச்சையான சரிபார்ப்பு முகமை ஒன்று 6,000-க்கும் அதிகமான கிராமங்களில் 90ஆயிரம் வீடுகளில் அண்மையில் மேற்கொண்ட ஆய்வின் போது இந்திய ஊரக பகுதிகளில் கழிப்பறைகளின் பயன்பாடு 93.4%-ஆக இருப்பதைக் கண்டறிந்துள்ளது.
வெளித்தெரிதல் (கழிப்பறைகள்) மட்டும் என்பதற்கு பதிலாக விளைவுகளை (ஓ.டி.எஃப்) கணக்கிட நாட்டிலேயே முதலாவது துப்புரவு திட்டமாக தூய்மை இந்தியா இயக்கம் உள்ளது.
------
(रिलीज़ आईडी: 1535050)
आगंतुक पटल : 168