பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
இணையக் குற்றப் புகார்களைப் பதிவு செய்வதற்கான இணையவழி மத்தியத் தெரிவிப்பு ஏற்பாடு விரைவில் நடைமுறைப்படும்
பெண்கள் பிரச்சினைகளுக்கான தனி அமைப்புகளை அமைக்குமாறு அனைத்து அமைச்சர்களுக்கும் திருமதி மேனகா சஞ்சய் காந்தி கடிதம்
இடுகை இடப்பட்ட நாள்:
06 JUN 2018 6:14PM by PIB Chennai
பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான இணையக் குற்றங்கள் தொடர்பான பிரச்சினைகளை, குறிப்பாக இணையத்தில் குழந்தைகளைப் பாலியல் ரீதியில் தகாத முறையில் சித்திரிக்கும் வகையிலான செய்திகள், படங்கள் ஆகியவற்றை நீக்குதல், வன்புணர்வுச் சித்தரிப்புகள் மற்றும் தீங்கு பயக்கும் காட்சிகள் ஆகியவை குறித்து விவாதிப்பதற்காக, மத்திய மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி மேனகா சஞ்சய் காந்தி தலைமையில் பல்வேறு பங்கேற்பாளர்கள் கலந்துகொண்ட வட்டமேசைக் கூட்டம் ஒன்று இன்று (06.06.2018) நடைபெற்றது. இணையவெளியில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான வன்முறைகளை வெளிப்படுத்துவது நாள்தோறும் அதிகரித்துவருகிறது.
இந்த விவாதத்தில் பல்வேறு அரசுத் துறையினர், தொழிலகம் சார்ந்தோர், இந்திய இணையச் சேவை வழங்குச் சங்கத்தினர், சமூக ஊடகத்தினர் ஆகியோர் கருத்து தெரிவித்தனர். இந்திய தரவுப் பாதுகாப்புக் குழுவினர் தரவுப்பாதுகாப்பு குறித்து விளக்கினர். பொதுமக்கள் பிரதிநிதிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
அடுத்த 3 மாதங்களுக்குள்ளாகக் கீழ்க்காணும் நடைமுறைகளை மேற்கொள்வது என வட்டமேசைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது:
- இணையக் குற்றத்தின் எல்லையற்ற இயல்பிலிருந்து பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் முழுப் பாதுகாப்பு அளிப்பதை உத்தரவாதம் செய்ய சர்வதேசக் கூட்டாண்மையைக் கட்டியெழுப்புதல்
- எங்கிருந்தும் எந்த நேரத்திலும் இணையக் குற்றப் புகார்களைப் பதிவு செய்வதற்கான இணையவழி மத்தியத் தெரிவிப்பு ஏற்பாடு ஒன்றை மேம்படுத்துதல்
- இணையத்தில் தீங்கு பயக்கும் செய்திகள், படங்களை நீக்குவது / மறைப்பது ஆகியவற்றுக்கான நடைமுறையை உருவாக்குதல்
மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in வலைத்தளத்தைப் பார்க்கவும்.
(வெளியீட்டு அடையாள எண்: 1534811)
வருகையாளர் எண்ணிக்கை : 182