மத்திய அமைச்சரவை

பி.எஸ்.எல்.வி. மார்க் III தொடர் திட்டம் கட்டம் 6க்கு அமைச்சரவை ஒப்புதல் முப்பது பி.எஸ்.எல்.வி. செலுத்து வாகனங்கள் செயல்படுத்தப்படும்

Posted On: 06 JUN 2018 3:25PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் பி.எஸ்.எல்.வி. (6வது கட்டம்) தொடர் திட்டத்திற்கும் இந்த திட்டத்தின் கீழ் முப்பது பி.எஸ்.எல்.வி. செலுத்து வாகனத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யவும் ஒப்புதல் அளித்தது.

பூமி கண்காணிப்புக்கான செயற்கைக் கோள்கள், வழிகாட்டுதல் மற்றும் விண்வெளி அறிவியலுக்கான செயற்கை கோள் தேவைகளையும் இந்த திட்டம் எதிர்கொள்ளும். இந்திய தொழில்துறையில் உற்பத்தி தொடருவதையும் இது உறுதிப்படுத்தும்.

இதற்கான மொத்த நிதி தேவை ரூ. 6131.00 கோடியாக இருப்பதுடன் முப்பது பி.எஸ்.எல்.வி. செலுத்து வாகனங்களின் செலவு, அத்தியாவசிய வசதி விரிவாக்கம், திட்ட மேலாண்மை மற்றும் செலுத்து இயக்கம் ஆகியவை இதில் அடங்கும்.

பெரும் தாக்கம்:

பி.எஸ்.எல்.வி. ராக்கெட் செயல்திறன் பூமி கண்காணிப்பு, பேரிடர் நிர்வாகம், வழிகாட்டுதல் மற்றும் விண்வெளி அறிவியல் ஆகியவற்றுக்கான செயற்கை கோள்களை அனுப்புவது ஆகியவற்றில் நாட்டை தன்னிறைவு பெற்றதாக ஆக்கும். இந்த பி.எஸ்.எல்.வி. தொடர் திட்டம் தேசத்தின் தேவைகளுக்கான இதுபோன்ற செயற்கைக் கோள்களை செலுத்துவதில் திறன் மற்றும் தன்னிறைவை நீட்டிக்கும்.

இந்த பி.எஸ்.எல்.வி. தொடர் திட்டம் – கட்டம் 6 ஆண்டுக்கு எட்டு செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பும் தேவையை பூர்த்தி செய்யவும் இந்தியத் தொழில் துறையின் அதிகபட்ச பங்களிப்பை ஏற்படுத்தும். இந்த செலுத்து வாகனங்கள் அனைத்தும் 2019-2024ல் நிறைவடையும்.

இந்த திட்டம் பூமி கண்காணிப்பு, வழிகாட்டுதல் மற்றும் விண்வெளி அறிவியல்களுக்கான செயற்கை கோள்கள் ஏவப்பட வேண்டிய தேவையை எதிர்கொள்ளும். இந்திய தொழில்துறையின் உற்பத்தி தொடருவதையும் இது உறுதி செய்யும்.

பி.எஸ்.எல்.வி. தொடர் திட்டம் 2008ம் ஆண்டு முதன்முதலில் ஒப்புதல் அளிக்கப்பட்டு நான்கு கட்டங்கள் இதுவரை நிறைவு பெற்று ஐந்தாவது கட்டம் 2017-20 ஆண்டின் இரண்டாவது காலாண்டில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6-வது கட்டத்திற்கான ஒப்புதல் 2019-20 3வது காலாண்டில் இருந்து 2023-24 முதல் காலாண்டு வரையிலான காலகட்டத்தில் செயற்கைக் கோள்கள் இயக்கத்திற்கு உதவும்.

பின்னணி:

 

சூரிய சுற்றுவட்டப்பாதை, பூமி சுற்றுவட்டப்பாதை மற்றும் பூமிக்கு நெருக்கமான பூமி சுற்றுவட்டப்பாதையில் செயற்கைக் கோள்களை நிலைநிறுத்துவதற்கு ஏற்ற வாகனமாக பி.எஸ்.எல்.வி. உருவெடுத்துள்ளது. சமீபத்தில் 2018 ஏப்ரல் 12ம் தேதி பி.எஸ்.எல்.வி. சி41 வெற்றிகரமாக செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து பி.எஸ்.எல்.வி. மூன்று வளர்ச்சி மற்றும் நாற்பத்தி மூன்று செயல் செலுத்துவாகனங்களை நிறைவு செய்திருப்பதுடன், ஏவப்பட்ட நாற்பத்தியோரு வாகனங்களும் வெற்றி பெற்றுள்ளன. பி.எஸ்.எல்.வி. தன்னை ஒரு தேசிய செயற்கைக் கோள்களுக்கான உந்து சக்தியாக நிலைப்படுத்திக் கொண்டிருப்பதுடன், விரைவில் வர்த்தக ரீதியான வாய்ப்புக்களையும் எதிர்கொள்ளும்.

*****



(Release ID: 1534614) Visitor Counter : 211